சத்தீஷ்கரில் பயங்கர துப்பாக்கி சண்டை - 22 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழப்பு
பதிவு : ஏப்ரல் 05, 2021, 04:57 PM
சுக்மாவில் மாவோயிஸ்ட்கள் உடனான துப்பாக்கி சண்டையில் பாதுகாப்பு படையை சேர்ந்த 22 வீரர்கள் உயிரிழந்துள்ளனர்.
சத்தீஷ்கரில் தண்டேவாடா, பிஜாப்பூர், சுக்மா மாவட்டங்கள் மாவோயிஸ்ட்கள் ஆதிக்கம் நிறைந்த பகுதியாகும். இங்கும் அவர்களை ஒடுக்கும் பணியில் மத்திய, மாநில பாதுகாப்பு படைகள் களமிறக்கப்பட்டுள்ளனர். இப்படையினர் சுக்மா - பிஜாப்பூர் எல்லையில் தரம் வனப்பகுதியில் ரோந்து பணியில் ஈடுபட்டிருந்த போது மாவோயிஸ்ட்கள் தாக்குதலை நடத்தியுள்ளனர். நீண்ட நேரம் நடந்த துப்பாக்கி சண்டையில் 5 பாதுகாப்பு படை வீரர்கள் உயிரிழந்ததாக தெரிவிக்கப்பட்டது. வீரர்கள் பலரை காணவில்லை என தகவல் வெளியாகிய நிலையில், மோதல் நடைபெற்ற இடத்தில் இருந்து 17 வீரர்கள் சடலமாக மீட்கப்பட்டு உள்ளனர்.  தாக்குதலில் 22 வீரர்கள் உயிரிழந்து உள்ளனர் என காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. 31 வீரர்கள் காயங்களுடன் மருத்துவமனைகளில் சிகிச்சை பெற்று வருகிறார்கள். சம்பவம் நடைபெற்ற பகுதியில் கூடுதல் பாதுகாப்பு படையினர் குவிக்கப்பட்டு தேடுதல் பணி தொடர்கிறது. மேலும் உயிரிழப்பு எண்ணிக்கை அதிகரிக்கலாம் என அஞ்சப்படுகிறது.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4433 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

370 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

226 views

பிற செய்திகள்

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சம் தொட்ட கொரோனா

இந்தியாவில் இதுவரை இல்லாத அளவில் புதிய உச்சமாக ஒரே நாளில் ஒரு லட்சத்து 15 ஆயிரம் பேருக்கு கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

12 views

உலக நாடுகளில் மீண்டும் அதிகரித்து வரும் கொரோனா பரவல்

இந்தியா, பிரேசில், அமெரிக்கா உள்ளிட்ட பல்வேறு உலக நாடுகளில் மீண்டும் கொரோனா பரவல் அதிகரித்து வருகிறது.

7 views

"கொரோனா 2வது அலை மோசமடைந்துள்ளது" - மத்திய சுகாதாரத்துறை செயலாளர்

கொரோனாவின் 2வது அலை மோசமடைந்துள்ளதாக மத்திய சுகாதாரத்துறை செயலாளர் ராஜேஷ் பூஷண் தெரிவித்துள்ளார்.

774 views

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் ஊரடங்கு

மகாராஷ்டிரா, டெல்லியை தொடர்ந்து குஜராத் மாநிலத்திலும் இரவு நேர ஊரடங்கு அறிவிக்கப்பட்டுள்ளது.

306 views

கேரளாவில் 74.02% வாக்குப்பதிவு; 2016-தேர்தலை விட 3% குறைவு

கேரளாவில் நடைபெற்ற சட்டமன்ற தேர்தலில், 74.02 சதவீத வாக்குகள் பதிவாகின.

36 views

8.31 கோடிக்கும் மேற்பட்டோர் கொரோனா தடுப்பூசி போட்டுக் கொண்டுள்ளனர்

நாடு முழுவதும் இதுவரை 8 கோடிக்கும் மேற்பட்டவர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக மத்திய சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

7 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.