பேஸ்புக் பயனாளர்களின் சுய விபரங்கள் கசிவு - தொடரும் குற்றச்சாட்டு
பதிவு : ஏப்ரல் 05, 2021, 04:48 PM
உலகளவில் 50 கோடி பேஸ்புக் பயனாளர்களின் சுய தகவல்களை திருடி ஹேக்கர்கள் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.
நவீன உலகில் ஆதிக்கம் செலுத்தும் சக்தியாக விளங்கும் சமூக வலைதளங்களில் பிரத்யேக இடம்பிடித்திருக்கும் பேஸ்புக் நிறுவனம் அடிக்கடி பயனாளர்களின் சுய விபரங்கள் கசிவு குற்றச்சாட்டை எதிர்க்கொண்டு வருகிறது.தற்போது உலகளவில் 50 கோடி பயனாளர்களின் சுய தகவல்களை திருடி ஹேக்கர்கள் இணையதளங்களில் வெளியிட்டுள்ளதாக அதிர்ச்சி தகவல் வெளியாகியுள்ளது.இதில் 60 லட்சம் இந்திய பயனாளர்களின் சுய விபரங்களும் அடங்கும் என தெரியவந்துள்ளது.
பேஸ்புக் வலைதளத்தில் கொடுக்கப்பட்ட செல்போன் எண், பெயர், இருக்கும் இடம், இ-மெயில், பேஸ்புக் கணக்கை எப்போது தொடங்கினோம் என்பது உள்ளிட்ட அனைத்து சுய தகவல்களும் கசிந்துள்ளது என ஹூஸ்டன் ராக் சைபர் கிரைம் ஆய்வு நிறுவனம் தெரிவித்துள்ளது.இதில் பேஸ்புக் நிறுவனர் மார்க் ஜூக்கர்பெர்கின் சுய விபரங்களும் அடங்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. அவருடைய பேஸ்புக் பயனாளர் ஐடி, தொலைபேசி எண், திருமண விபரம் உள்ளிட்ட தகவலும் ஹேக் செய்யப்பட்டுள்ளது. 
இருப்பினும் தற்போதைய தரவுகள் கசிவு விபரம் குறித்து பதிலளித்துள்ள பேஸ்புக் நிறுவனம், இது பழைய தகவல்கள் என்றும் ஏற்கனவே இப்பிரச்சினையை அடையாளம் கண்டு 2019 ஆகஸ்டில் சரி செய்துவிட்டோம் என்றும் கூறியிருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

மனிதனுக்கும் மீனுக்கும் உள்ள பாசப்பிணைப்பு... தன்னை காப்பாற்றியவரை கண்டு உணரும் மீன்

34 views

"60 லட்சம் தடுப்பூசிகள் வேண்டும்" - பிரதமருக்கு ஆந்திர முதல்வர் கடிதம்

ஆந்திராவிற்கு 60 லட்சம் தடுப்பூசிகளை வழங்குமாறு பிரதமரிடம் அம்மாநில முதலமைச்சர் ஜெகன்மோகன் வலியுறுத்தியுள்ளார்.

7 views

நீளமான தலைமுடியால் கின்னஸ் சாதனை - தலைமுடியை வெட்டினார் நீலான்ஷி பட்டேல்

உலகின் மிக நீளமான தலைமுடிக்கான கின்னஸ் சாதனை படைத்த நீலான்ஷி பட்டேல், 12 ஆண்டுகளுக்கு பின்னர் தலைமுடியை வெட்டியுள்ளார்.

7 views

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

"ரயில் சேவை நிறுத்தப்படாது-வதந்திகளை நம்ப வேண்டாம்"

15 views

எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா

கர்நாடக முதலமைச்சர் எடியூரப்பாவுக்கு மீண்டும் கொரோனா தொற்று ஏற்பட்டுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.