பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு
பதிவு : ஏப்ரல் 01, 2021, 09:14 AM
மாற்றம் : ஏப்ரல் 03, 2021, 10:21 PM
பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது
பான் எண்ணுடன் ஆதார் எண் இணைப்பு கால அவகாசம் ஜூன் இறுதி வரை நீட்டிப்பு 

பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கான கால அவகாசத்தை ஜூன் 30-ஆம் தேதி வரை நீட்டிப்பு செய்து மத்திய அரசு அறிவித்துள்ளது.பான் எண்ணுடன்  ஆதார் எண்ணை இணைப்பதற்கான கால அவகாசம் தொடர்ச்சியாக நீட்டிக்கப்பட்டு வந்த நிலையில்,  நேற்றுடன் கால அவகாசம் முடிவதாக அறிவிப்பு செய்யப்பட்டிருந்தது. இணைக்க தவறினால் 10 ஆயிரம் ரூபாய் அபராதம் விதிப்பதற்கான நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் தகவல்கள் வெளியாகின. பான் எண்ணுடன் ஆதார் எண்களை இணைப்பதற்கு வருமானவரித் துறை இணையதளத்தில் அனைவரும் ஒரே நேரத்தில் முயற்சி செய்ததால், நேற்று காலையிலிருந்து இணையதளம் முடங்கியது,.  இந்த நிலையில் மேலும் ஜூன் 30-ஆம் தேதி வரை கால அவகாசம் நீட்டிப்பு செய்யப்படுவதாக மத்திய அரசு அறிவித்துள்ளது.

பிற செய்திகள்

துப்பாக்கிச் சூடு சம்பவம் - பிரதமர் கண்டனம்

மேற்குவங்கம் துப்பாக்கிச் ​சூடு சம்பவத்திற்கு பிரதமர் மோடி கண்டனம் தெரிவத்துள்ளார்.

11 views

வாக்குச்சாவடியில் மோதல்... துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழப்பு

மேற்கு வங்கத்தில் வாக்குச்சாவடியில் சிஐஎஸ்எப் படை நடத்திய துப்பாக்கி சூட்டில் 4 பேர் உயிரிழந்துள்ளனர்.

31 views

பாஜக எம்.பி.யின் கார் மீது தாக்குதல்.. லாக்கெட் சாட்டர்ஜிக்கு மக்கள் எதிர்ப்பு

மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளியில் பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

பீகார் போலீஸ் அதிகாரி அடித்துக் கொலை... விசாரணைக்கு சென்ற போது பயங்கரம்

இருசக்கர வாகன திருட்டு தொடர்பாக விசாரிக்க சென்ற பீகார் போலீஸ் அதிகாரி மேற்கு வங்கத்தில் அடித்துக் கொலை செய்யப்பட்டு உள்ளார்.

15 views

குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் - நீதிமன்றம் உத்தரவு

தமிழக அரசு அலுவலகங்களில் குடியரசு தலைவர், பிரதமர் புகைப்படங்கள் வைப்பது குறித்து, சம்பந்தப்பட்ட அரசு அலுவலகங்கள் தான் முடிவெடுக்க வேண்டும் என சென்னை உயர் நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.

11 views

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவு - பிரதமர் மோடி இரங்கல்

இங்கிலாந்து இளவரசர் பிலிப் மறைவுக்கு பிரதமர் நரேந்திர மோடி இரங்கல் தெரிவித்து உள்ளார்

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.