மியான்மரில் பயங்கரம் - ராணுவ துப்பாக்கி சூட்டில் 114 பேர் படுகொலை
பதிவு : மார்ச் 28, 2021, 12:00 PM
மியான்மரில் ராணுவ ஆட்சிக்கு எதிராக போராடிய 114 பேர் ஒரே நாளில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.
மியான்மரில் கடந்த மாதம் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து மக்கள் தொடர் போராட்டங்களை நடத்திவரும் நிலையில், அந்நாட்டு ராணுவம் நேற்று ஆயுதப்படை தினத்தை கொண்டாடியது. அப்போது தன்னெழுச்சியுடன் மக்கள் நாட்டின் பல்வேறு பகுதிகளில் போராட்டங்களை நடத்தினர். இதற்கிடையே தொலைக்காட்சி வாயிலாக உரையாற்றிய ராணுவ தலைவர் மின் ஆங் ஹேலிங் போராடினால் தலையில் சுடப்படுவீர்கள் என பகிரங்க மிரட்டல் விடுத்தார். அதன்படியே போராட்டக்காரர்கள் மீது ஆங்காங்கே  ராணுவம் கண்மூடித்தனமாக நடத்திய துப்பாக்கி சூட்டில்,  குழந்தைகள் உள்பட 114 பேர் உயிரிழந்துள்ளனர். காயம் அடைந்த பலர் மருத்துவமனைகளில் சிகிச்சைக்கு அனுமதிக்கப்பட்டுள்ளனர். உறவுகளை இழந்த மக்கள் பேசுகையில், ராணுவம் தங்களை காக்கை குருவியை போன்று சுட்டு வீழ்த்தியது என கண்ணீருடன் தெரிவித்துள்ளனர். மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதில் இருந்து 400-க்கும் மேற்பட்ட போராட்டக்காரர்கள் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

கிம் 2 சங்க்-இன் 109 வது பிறந்த நாள் - வட கொரிய அதிபர் மரியாதை

வட கொரிய அதிபர் கிம் ஜா உங் தனது தாத்தாவின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

8 views

சிங்கம் செல்லப்பிராணியா?! குழந்தையைப் போல் வளர்க்கும் ரஷ்ய தம்பதி

சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்க முடியுமா?? கடந்த 5 ஆண்டுகளாக அதை சாத்தியமாக்கியிருக்கும் ரஷ்ய தம்பதி குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

11 views

பிரேசில் - மயக்க மருந்து பற்றாக்குறை : குவியும் மருத்துவர்களின் குற்றச்சாட்டு

பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான மயக்க மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

11 views

மீனவர்கள் பிரச்சினை; முதலை கண்ணீர் வடித்து வருகிறார்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு

இந்தியா - இலங்கை மீனவர்கள் விவகாரத்தில், தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

13 views

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற, இலங்கை அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி உள்ளார்.

11 views

பாகிஸ்தானில் தொடரும் போராட்டம்: "பிரான்ஸ் நாட்டவர்கள் வெளியேறவும்" - பிரான்ஸ் தூதரகம் உத்தரவு

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.