டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு - உயர்நீதிமன்ற மதுரை கிளை அதிரடி உத்தரவு
பதிவு : மார்ச் 23, 2021, 01:05 PM
தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க உயர்நீதிமன்ற மதுரைக்கிளை உத்தரவிட்டுள்ளது.
மதுரை திருமங்கலத்தை சேர்ந்த சக்தி ராவ் என்பவர் உயர்நீதிமன்ற மதுரைக்கிளையில் மனுவினை தாக்கல் செய்திருந்தார். அதில், டி.என்.பி.எஸ்.சி., தேர்வு அறிவிப்பில் தமிழ் வழியில் பயின்றவருக்கு கொடுக்கப்படும் 20 சதவீத இட ஒதுக்கீட்டை, பெரும்பாலும் தொலைநிலை கல்வி பயின்றவர்களே பெற்று வருகின்றனர். ஆகவே, தமிழ்வழியில் கல்வி பயின்றதற்கான சலுகை அடிப்படையில் தேர்வானவர்களுக்கு பணி நியமன உத்தரவு வழங்க தடை விதிக்க வேண்டும் என கூறியிருந்தார். இந்நிலையில், வழக்கை விசாரித்த நீதிபதிகள், பள்ளி, கல்லூரி அல்லது தொழில் துறை படிப்பு ஆகிய எல்லாவற்றிலும் தமிழ் வழியில் படித்தவர்களுக்கு மட்டுமே டிஎன்பிஎஸ்சி தேர்வில் 20 சதவீத இட ஒதுக்கீடு வழங்க வேண்டும் என உத்தரவிட்டனர். மேலும்,  மதுரை காமராசர் பல்கலைக்கழகத்தில் தமிழ் வழியில் பயின்றவருக்கான போலி சான்றிதழ் வழங்கப்பட்டதா? என்பதை ஊழல் மற்றும் லஞ்ச ஒழிப்புத்துறையினர் விசாரணை நடத்தில் 3 மாதங்களுக்குள் அறிக்கை தாக்கல் செய்யவும் உத்தரவிட்டுள்ளனர்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

149 views

பிற செய்திகள்

16 மாவட்டங்களில் இடி மின்னலுடன் கூடிய லேசான மழை பெய்ய வாய்ப்பு - வானிலை ஆய்வு மையம்

தமிழகத்தில் மேற்குதொடர்சி மலையை ஒட்டிய மாவட்டங்கள் மற்றும் 16 மாவட்டங்களில் மழை பெய்ய வாய்ப்பு உள்ளதாக சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.

0 views

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

நாளை முதல் பள்ளிகளுக்கு விடுமுறை? மாலை அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்

16 views

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

வி.ஏ.ஓ திட்டியதால் தற்கொலைக்கு முயன்ற பெண் உதவியாளர்

6 views

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

திருச்சி மாநகர் பகுதியில் கொரோனா அதிகரிப்பு... பல்வேறு தெருக்களுக்கு சீல் வைப்பு

23 views

ஆக்சிஜன் பற்றாக்குறை இல்லை - தமிழக அரசு

தமிழகத்தில் ஆக்சிஜன், வென்டிலேட்டர், ரெம்டிசிவிர் ஆகியவற்றில் பற்றாக்குறை இல்லை என தமிழக அரசு சென்னை உயர்நீதிமன்றத்தில் விளக்கம் அளித்துள்ளது.

31 views

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் - தற்செயலாக நடந்த பேட்டி என ரஜினிகாந்த் பதில்

தூத்துக்குடி துப்பாக்கிச்சூடு சம்பவம் தொடர்பாக ஒருநபர் விசாரணை ஆணையம் எழுப்பிய கேள்விக்கு நடிகர் ரஜினிகாந்த் எழுத்துப்பூர்வமாக பதில் அனுப்பியுள்ளார்.

498 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.