67வது தேசிய விருதுகள் அறிவிப்பு...
பதிவு : மார்ச் 23, 2021, 10:57 AM
சிறந்த தமிழ் திரைப்படமாக அசுரன் படத்திற்கும், சிறந்த நடிகராக அசுரன் நாயகன் தனுஷிற்கும், சிறந்த துணை நடிகராக விஜய் சேதுபதிக்கும் தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது
கொரோனாவால் ஒத்திவைக்கப்பட்டிருந்த 2019ஆம் ஆண்டுக்கான 67வது தேசிய திரைப்பட விருதுகள் டெல்லியில் அறிவிக்கப்பட்டது.
இதில் தமிழ் மொழியில் சிறந்த படமாக வெற்றிமாறன் இயக்கத்தில் தனுஷ் நடித்த அசுரன் படம் தேர்ந்தெடுக்கப்பட்டதுஇயக்குனர் பார்த்திபன் மட்டும் தனி ஆளாக நடித்த ஒத்த செருப்பு படத்திற்கு சிறப்பு விருது அறிவிக்கப்பட்டது
மேலும் சிறந்த ஆடியோ தொழில்நுட்பத்திற்காகவும் ஒத்த செருப்பு படத்திற்கு தேசிய விருது கிடைத்துள்ளதுசிறந்த நடிகராக அசுரன் படத்தில் நடித்தற்காக தனுஷிற்கும், பாலிவுட் படமான போன்ஸ்லே படத்தில் நடித்ததற்காக மனோஜ் பாஜ்பாய்க்கு பகிர்ந்தளிக்கப்படுகிறதுஇதன்மூலம் நடிப்பிற்காக இரண்டாவது தேசிய விருது மட்டுமின்றி ஒட்டுமொத்தமாக 4வது தேசிய விருதை தனுஷ் பெறுகிறார்.சிறந்த துணை நடிகராக சூப்பர் டீலக்ஸ் படத்தில் திருநங்கையாக நடித்ததற்காக விஜய் சேதுபதிக்கு வழங்கப்பட்டது.சிறந்த பாடல்களை வழங்கிய இசையமைப்பாளர் விருது விஸ்வாசம் படத்திற்ககா டி. இமானுக்கு வழங்கப்பட்டதுகேடி என்கிற கருப்புதுரை படத்தில் நடித்த நாக விஷாலுக்கு சிறந்த குழந்தை நட்சத்திரத்துக்கான தேசிய விருது அறிவிக்கப்பட்டுள்ளது.
இதைத்தவிர சிறந்த நடிகையாக மணிகர்னிகா மற்றும் பங்கா படங்களில் நடித்ததற்காக கங்கனா ரணாவத்திற்கு வழங்கப்பட்டது
சிறந்த தெலுங்கு படமாக நானி நடித்த ஜெர்சி படம் தேர்ந்தெடுக்கப்பட்டது
தெலுங்கில் வெளியான மகரிஷி படத்தில் பணியாற்றியதற்காக சிறந்த நடன இயக்குனர் விருது ராஜு சுந்தரத்திற்கு வழங்கப்பட்டுள்ளது

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

தலைவி, ஜெயா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு

ஜெயலலிதாவின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள தலைவி, ஜெயா ஆகிய படங்களுக்கு தடை விதிக்க சென்னை உயர்நீதிமன்றம் மறுப்பு தெரிவித்துள்ளது.

13 views

"99 சாங்ஸ் வரவேற்பை பொறுத்து முடிவு"- ஏ.ஆர்.ரகுமான் (இசையமைப்பாளர்)

99 சாங்ஸ் திரைப்படத்திற்கு கிடைக்கும் வரவேற்பை பொறுத்து ஹாலிவுட்டில் படம் தயாரிப்பேன் என்று இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் தெரிவித்துள்ளார்.

19 views

உருவாகிறது "என் ராசாவின் மனசிலே-2" - 30 ஆண்டுகளுக்கு பின் இரண்டாம் பாகம்

நடிகர் ராஜ்கிரண் நடிப்பில் கடந்த 1991ஆம் ஆண்டு வெளியாகி வெற்றி பெற்ற திரைப்படம் "என் ராசாவின் மனசிலே".

32 views

அந்நியன் - திரைப்பட விவகாரம் - இயக்குநர் ஷங்கருக்கு,ரவிச்சந்திரன் நோட்டீஸ்

அந்நியன் பட விவகாரம் தொடர்பாக, பிரபல இயக்குநர் ஷங்கருக்கு, படத் தயாரிப்பாளர் ஆஸ்கர் ரவிச்சந்திரன் நோட்டீஸ் அனுப்பியுள்ளார்.

37 views

அருண் விஜய் நடிக்கும் புதிய திரைப்படம் - 3-டி தொழில்நுட்ப உதவியுடன் தலைப்பு வெளியீடு

அருண் விஜய் நடிக்கும் புதிய படத்தின் தலைப்பை 3டி தொழில்நுட்ப உதவியுடன் படக்குழு பிரம்மாண்டமாக வெளியிட்டது.

70 views

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

மகத் நடிக்கும் புதிய திரைப்படம்... படத்தின் தலைப்பை வெளியிட்ட சிலம்பரசன்

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.