லட்சங்களில் விலை போகும் யானை தந்தம் - வனத்துறை அதிகாரிகளிடமே நடந்த பேரம்
பதிவு : மார்ச் 22, 2021, 09:42 AM
சிவகிரி அருகே யானைத் தந்தங்களை விற்க வனத்துறையினரிடமே பேரம் பேசிய கும்பல் சிக்கியது எப்படி...? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...
தென்காசி மாவட்டம் சங்கரன்கோவில் அருகே உள்ள சிவகிரி தேவிப்பட்டினத்தைச் சேர்ந்தவர் கலைஞர். இவர் ராஜபாளையத்தைச் சேர்ந்த நடராஜன் என்பவரிடம் இருந்து 2 யானை தந்தங்களை விற்பனை செய்து தருவதாகக் கூறி சில மாதங்களுக்கு முன்பு வாங்கியுள்ளார்...இதையடுத்து கலைஞர், தனது நண்பரான நெல்லையை சேர்ந்த செந்தூர்பாண்டியனையும் துணைக்கு அழைத்துக்கொ​ண்டு, யானைத் தந்தங்களைப் பல லட்சம் ரூபாய்க்கு விற்பனை செய்ய திட்டம் தீட்டி உள்ளார். கொடைக்கானலை சேர்ந்த ஒரு நபரிடம் அவற்றை விற்பனை செய்ய முடிவு செய்துள்ளனர்...
இந்த தகவல் வனத்துறை அதிகாரிகளின் காதுகளுக்கு எட்டவே, கடத்தல் கும்பலைப் பிடிக்க பல லட்சம் ரூபாய் கொடுத்து தந்தங்களை வாங்குவதாகக் கூறி தாங்களே நேரடியாகக் களத்தில்  இறங்கியுள்ளனர்...சற்றே சுதாரிப்புடன் இருந்த நடராஜன், கலைஞர், செந்தூர்பாண்டியன் தலைமையிலான கும்பல், உண்மையிலேயே அவர்கள் தந்தம் வாங்கும் நபர்களா என்பதைக் கண்டறிய தந்தங்களைப் பார்ப்பதற்கு வனத்துறையினரை பல இடங்களுக்கு வரச்சொல்லி அலைக்கழித்து ஏமாற்றியுள்ளனர்...கடத்தல் கும்பலைக் கூண்டோடு பிடிக்க திட்டமிட்டு,  வனத்துறையினரும் பொறுமை காத்தனர்.
தந்தங்களை நேரில் பார்த்த பிறகு விலையை நிர்ணயம் செய்து விடலாம் என்று இரு தரப்பினரும் பரஸ்பரமாக முடிவு செய்து சிவகிரி தேவிப்பட்டிணம் கிராமத்தில் வைத்து தந்தங்களை விற்க ஆயத்தமாகியுள்ளனர்...இந்நிலையில் மாறு வேடத்தில் சென்ற வனத்துறை அதிகாரிகள் குற்றவாளிகளைப் பிடிக்க நேரம் பார்த்து காத்துக் கொண்டிருந்தனர். இதை சற்றும் எதிர்பாராத கலைஞரும் செந்தூர் பாண்டியனும், வீட்டில் பதுக்கி வைத்திருந்த யானைத் தந்தங்களை எடுத்து வந்த போது இரு குற்றவாளிகளையும் கையும் களவுமாக, வனத்துறையினர் சுற்றி வளைத்தனர்...இதனை அறிந்த விற்பனைக் கும்பலைச் சேர்ந்த நடராஜன், ராஜேந்திரன், ரூபன், அழகர்சாமி ஆகியோர் தலைமறைவாகி விட்ட நிலையில், கலைஞரையும் செந்தூர் பாண்டியனையும் மட்டும் கைது செய்து விசாரணை நடத்தி வருகின்றனர்...தலைமறைவான 4 பேரைத் தேடும் பணி தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், அதிகாரிகள் நடத்திய விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளிவந்துள்ளன. ஏனெனில், தந்தங்களை விற்பனை செய்யும் கும்பலின் பட்டியல் நீண்டு கொண்டே செல்வதால், இதில் முக்கிய அரசியல் பிரமுகர்கள் மற்றும் தொழில் அதிபர்கள் சிக்க வாய்ப்புள்ளதாக தகவல்கள் வெளியாகியுள்ளன...

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4395 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

363 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

222 views

பிற செய்திகள்

வாக்காளர்பட்டியலில் இருந்து பெயர்கள் நீக்கம் - 200க்கும் மேற்பட்டோர் திடீர் ஆர்ப்பாட்டம்

ஆயிரம் விளக்கு தொகுதியில் ஒரே இடத்தில் வசிக்கும் 200க்கும் மேற்பட்டோரின் பெயர்கள் வாக்காளர் பட்டியலில் இருந்து நீக்கப்பட்டுள்ளதாகக் கூறி வாக்காளர்கள் போராட்டத்தில் ஈடுபட்டனர்.

0 views

சாலையில் கிடந்த வாக்குப்பதிவு இயந்திரங்கள்

இருசக்கர வாகனத்தில் வாக்குப்பதிவு இயந்திரங்களை எடுத்துச் சென்ற மாநகராட்சி ஊழியர்களுக்கு, பொதுமக்கள் தர்ம அடி கொடுத்து போலீசாரிடம் ஒப்படைத்தனர்.

5 views

"தேர்தல் வேலை இன்னும் முடியவில்லை" - திமுக தலைவர் ஸ்டாலின்

மின்னணு வாக்குப் பதிவு இயந்திரங்கள் வைக்கப்பட்டிருக்கும் மையங்களை தொடர்ந்து கண்காணித்திட திமுக தலைவர் ஸ்டாலின் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

10 views

சுமூகமாக நடந்து முடிந்த வாக்குப்பதிவு - இயந்திரங்கள் பலத்த பாதுகாப்புடன் எடுத்துச் செல்லப்பட்டது

திருப்பரங்குன்றம் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு சுமூகமான நடைபெற்று முடிவுற்றது.

5 views

வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு

ஆலந்தூர் சட்டமன்ற தொகுதியில் வாக்குப்பதிவு இயந்திரங்களை சுற்றலா வேனில் ஏற்ற திமுகவினர் எதிர்ப்பு தெரிவித்தனர்.

6 views

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள் 3 மையங்களில் வைப்பு

சென்னையில் உள்ள 16 தொகுதிகளில் பதிவான வாக்குப்பதிவு இயந்திரங்கள், 3 வாக்கு எண்ணும் மையங்களுக்கு, பாதுகாப்பாக கொண்டு வரப்பட்டன.

6 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.