மருத்துவரை தாக்கி செல்போன் பறிப்பு... சி.சி.டி.வி. காட்சிகள் வெளியீடு
பதிவு : மார்ச் 16, 2021, 12:53 PM
மருத்துவர் உள்பட பலரை தாக்கி செல்போன் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவர் ஒருவரை தாக்கி செல்போன் பறித்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.
மருத்துவர் உள்பட பலரை தாக்கி செல்போன் பறிக்கும் கும்பலை போலீசார் கைது செய்துள்ளனர். மருத்துவர் ஒருவரை தாக்கி செல்போன் பறித்து செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது.

சென்னை அடையார் கஸ்தூரிபாய் நகரில் வசித்து வரும் விவேக் பட்டேல், அடையார் புற்றுநோய் மருத்துவமனையில் மருத்துவராக பணியாற்றி வருகிறார். கடந்த 11 ஆம் தேதி  அதிகாலை சாந்தோம் நெடுஞ் சாலையில் சைக்கிள் பயிற்சியில் ஈடுபட்டுக் கொண்டிருந்த போது, இருசக்கர வாகனத்தில் வந்த 3 பேர்  அவரை  தாக்கி செல்போனை பறிக்க முயன்றுள்ளனர். செல்போனை விடாமல் கெட்டியாக பிடித்துக் கொண்டு போராடியதால் ஆத்திரமடைந்த அந்த கும்பல் அவரை கத்தியால் சரமாரியாக வெட்டியதில், அலறித் துடித்து அவர் சாலையில் விழுந்தார். இதனைத் தொடர்ந்து அந்த கும்பல் அன்று இரவு மட்டும் மேலும் இரண்டு பேரிடம் கைவரிசையை காட்டிவிட்டு தப்பியுள்ளது. இதுதொடர்பாக,   மருத்துவர் விவேக் பட்டேலின் மனைவி அஞ்சலி அளித்த புகாரின் பேரில், மயிலாப்பூர் போலீசார் வழக்குப்பதிவு செய்து, சி.சி.டி.வி. காட்சிகளை அடிப்படையாகக் கொண்டு விசாரணை மேற்கொண்டனர். இதில் மண்ணடி, திருவள்ளுவர் நகரை சேர்ந்த பிரதீப், திருவல்லிக்கேணி, தீர்த்தாராயப்பன் தெருவை சேர்ந்த அஜய் மற்றும் ஐஸ் அவுசை சேர்ந்த மனோஜ் ஆகிய 3 பேரும் திருட்டு சம்பவத்தில் ஈடுபட்டு இருப்பது தெரிய வந்தது.அவர்களை கைது செய்த போலீசார்,  மூவரையும் நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தி சிறையில் அடைத்தனர். மருத்துவரை தாக்கிவிட்டு தப்பிச்செல்லும் காட்சிகள் தற்போது வெளியாகி உள்ளது. அதனை பார்ப்போம்....





தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

269 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..

62 views

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

254 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....

31 views

கடற்கரைக்கு மக்கள் வருகை குறைந்த‌து... வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

20 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

94 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.