கேரள சட்டமன்றத் தேர்தல் : காங்கிரஸ் கூட்டணி தொகுதி பங்கீடு... 91 இடங்களில் காங்கிரஸ் போட்டி
பதிவு : மார்ச் 13, 2021, 06:24 PM
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் 91 இடங்களில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது.
கேரளாவில் காங்கிரஸ் கூட்டணியில் தொகுதி பங்கீடு நிறைவடைந்தது. மொத்தம் உள்ள 140 தொகுதிகளில் காங்கிரஸ் 91 இடங்களில் போட்டியிடுகிறது என தெரிவிக்கப்பட்டுள்ளது. டெல்லியில் செய்தியாளர்களிடம் பேசிய கேரள காங்கிரஸ் தலைவர் முல்லப்பள்ளி ராமச்சந்திரன், 81 இடங்களில் போட்டியிடும் வேட்பாளர்கள் இறுதி செய்யப்பட்டுவிட்டனர் என்றும் கடந்த முறை பாஜக வென்ற நேமம் தொகுதியில் வலுவான வேட்பாளர் நிறுத்தப்படுவார் என்றும் கூறினார். காங்கிரஸ் வேட்பாளர்கள் பட்டியலை கட்சி தலைமை நாளை டெல்லியில் வெளியிடலாம் என எதிர்பார்க்கப்படுகிறது. 


நேமம் தொகுதியில் போட்டி? "வேட்பாளரை காங்கிரஸ் அறிவிக்கும்" உம்மன் சாண்டி பதில்
 
கேரளாவில் கடந்த சட்டமன்றத் தேர்தலில் பாஜக வெற்றிப்பெற்ற நேமம் தொகுதியில் வலுவான வேட்பாளரை களமிறக்க காங்கிரஸ் திட்டமிட்டுள்ளது. அங்கு முன்னாள் முதல்வர் உம்மன் சாண்டியை காங்கிரஸ் களமிறக்கலாம் என தகவல்கள் வெளியாகின. இந்நிலையில் இதுதொடர்பான செய்தியாளர்களின் கேள்விக்கு பதில் அளித்துள்ள உம்மன் சாண்டி, கட்சி வேட்பாளரை அறிவிக்கும், அதுவரையில் பொறுத்திருங்கள் எனக் கேட்டுக்கொண்டுள்ளார். 


கேரள சட்டமன்றத் தேர்தல் : காங்கிரஸ் கட்சியில் பாஜக டெபாசிட்...  முதல்வர் பினராயி விஜயன் பிரச்சாரம்

கேரளாவில் ஆட்சியமைக்க காங்கிரஸ் கட்சியி எம்எல்ஏக்களை பாஜக எதிர்பார்த்துள்ளது செய்துள்ளது என கேரள முதல்வர் பினராயி விஜயன் நகைச்சுவையாக கூறியுள்ளார். கண்ணூரில் பிரசாரம் செய்து பேசிய அவர், 35 தொகுதிகளில் வென்றால்கூட கேரளாவில் ஆட்சியமைத்துவிடலாம் என பாஜக தலைவர்கள் நம்பிக்கை தெரிவித்து வருகிறார்கள் எனக் கூறினார். 71 தொகுதிகளில் வெற்றிப்பெறாமல் அவர்களால் எப்படி ஆட்சியமைக்க முடியும் எனக் கேள்வியை எழுப்பிய அவர், மீதம் உள்ள எம்.எல்.ஏ.க்களுக்கு காங்கிரசில் முதலீடு செய்துள்ளனர் என நகைச்சுவையாக பேசியுள்ளார். மேலும் இதையெல்லாம் அறிந்த கேரள மக்கள் இடதுசாரிகளுக்கே ஆதவளிப்பார்கள் எனக் கூறியுள்ளார்.


கேரள சட்டமன்றத் தேர்தல் : 25 ஆண்டுகளுக்கு பின்னர் பெண் வேட்பாளர்... இந்திய யூனியன் முஸ்லிம் லீக்  அறிவிப்பு

கேரளாவில் இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கட்சி 25 வருடங்களுக்கு பின்னர் சட்டமன்றத் தேர்தலில் பெண் ஒருவர் போட்டியிட வாய்ப்பளித்திருக்கிறது. கட்சியின் பெண்கள் அணி தலைவர் நூர்பினா ராஷித்தை கோழிக்கோடு தெற்கு தொகுதியில் களமிறங்கியுள்ளது. கட்சியின் முடிவு மகிழ்ச்சி அளிப்பதாக கூறியிருக்கும் ராஷித், மக்கள் அதிகமான பெண்கள் சட்டமன்றத்திற்கு செல்ல வேண்டும் என பெரிதும் எதிர்பார்க்கிறார்கள் எனக் கூறினார். இதற்கு முன்னதாக 1996 -ல் கமருன்நிஷா அன்வரை இந்திய யூனியன் முஸ்லிம் லீக் கோழிக்கோடு தொகுதியில் களமிறக்கியிருந்தது என்பது குறிப்பிடத்தக்கது.


சட்டமன்றத் தேர்தலை முன்னிட்டு அசாம் பிரசார களம் சூடுபிடித்துள்ள நிலையில், 3 எஸ் என்ற திட்டத்தை முன்வைத்து பாஜகவும், 5-ஜி என்ற திட்டத்தை முன்வைத்து காங்கிரசும் பிரசாரத்தில் ஈடுபட்டு வருகின்றன.126 தொகுதிகளைக் கொண்ட அசாம் மாநிலத்துக்கு 3 கட்டங்களாக சட்டமன்றத் தேர்தல் நடைபெற உள்ளது. முதற்கட்ட தேர்தல் வருகிற 27-ஆம் தேதி தொடங்க உள்ள நிலையில், அங்கு தேர்தல் பிரசாரம் சூடுபிடித்து உள்ளது. ஆளும் பாஜக, பாதுகாப்பு, நிலையான வளர்ச்சி, பாரம்பரியம் மற்றும் நாகரிகம் உள்ளிட்டவற்றை ஒருங்கிணைத்த 3-எஸ் திட்டத்தை முன்வைத்து பிரசாரம் செய்து வருகிறது. மறுமுனையில் காங்கிரஸ் கட்சி, அசாமில் குடியுரிமை திருத்த சட்டத்தை நீக்குதல், தேயிலை ஊழியர்களின் ஊதிய உயர்வு, வேலை வாய்ப்பு உள்ளிட்ட 5-ஜி என்ற திட்டத்தை முன்வைத்து தீவிர பிரசாரத்தில் ஈடுபட்டு உள்ளது.


அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் வெளியீடு... அசாம் தேர்தல் களம் - பாஜக ஆலோசனை 

அடுத்த கட்ட வேட்பாளர் பட்டியல் குறித்து அசாம் மாநில தலைவர்களுடன் பாஜக தலைமை ஆலோசனை நடத்தியது.அசாம் மாநில தேர்தலில் 126 இடங்களில் பாஜக கட்சி 92 இடங்களில் போட்டியிடுகிறது. இதுவரைக்கும் 73 வேட்பாளர் பட்டியலை வெளியிட்டுள்ளது. நேற்றைய தினம் அசாம் மாநிலத்திற்கான மூன்றாம் கட்ட வேட்புமனு தாக்கல் தொடங்கியது. இந்நிலையில், டெல்லியில் பாஜக தலைவர் ஜே.பி.நட்டா வீட்டில் வைத்து நடைபெற்ற ஆலோசனையில் மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ஜிதேந்திர சிங், அசாம் முதலமைச்சர் சர்பானந்தா சோனோவால் ஆகியோர் கலந்து கொண்டனர். 

  

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

269 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"ராஜினாமா செய்ய தயாராகுங்கள்" - அமித்ஷா

மே 2-ஆம் தேதி ராஜினாமா செய்ய மம்தா பானர்ஜி தயாராக இருக்க வேண்டுமென மத்திய உள்துறை அமைச்சர் அமித்ஷா தெரிவித்துள்ளார்.

388 views

கோயில் உண்டியல் உடைப்பு - சிசிடிவி காட்சிகளை வைத்து விசாரணை

புதுச்சேரி அருகே கோயில் உண்டியலை உடைத்து 1 லட்சம் பணத்தை கொள்ளையடித்தவர்களை சிசிடிவி கேமரா காட்சிகளைகொண்டு காவல்துறையினர் தேடி வருகின்றனர்

14 views

வாக்குச்சாவடியில் துப்பாக்கி சூடு விவகாரம் - இன அழிப்பு என மம்தா பானர்ஜி காட்டம்

வாக்குச்சாவடியில் மக்கள் நெஞ்சில் சுட்டுக் கொல்லப்பட்டுள்ளனர் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி குற்றம் சாட்டியுள்ளார்.

15 views

கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லை - மத்தியப் பிரதேச முதல்வர் தெரிவிப்பு

மத்திய பிரதேசத்தில் கொரோனா தடுப்பூசி தட்டுப்பாடு இல்லையென முதலமைச்சர் சிவ்ராஜ் சிங் சவ்ஹான் தெரிவித்துள்ளார்

10 views

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

(11/04/2021) முழு ஊரடங்கால் வெறிச்சோடிய மும்பை... | விறுவிறு செய்திகள்

152 views

சக்திவாய்ந்த வெடிகுண்டுகள்,தோட்டாக்கள் - காவல்துறையினர் மீட்பு

மேற்கு வங்கம் மாநிலம் வடக்கு 24 பர்கானஸ் மாவட்டத்தில் சக்தி வாய்ந்த வெடிகுண்டுகள், தோட்டாக்கள், வெடிகுண்டு தயாரிப்பிற்குத் தேவையான உபகரணங்கள் உள்ளிட்டவற்றைக் காவல் துறையினர் மீட்டனர்.

13 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.