ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கு விசாரணை
பதிவு : மார்ச் 12, 2021, 04:32 PM
இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.
இடைக்கால தடை விதிக்க உச்சநீதிமன்றம் மறுப்பு ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வழக்கில், 2 வாரத்தில் பதில் அளிக்க தமிழக அரசுக்கு, உச்சநீதிமன்றம் நோட்டீஸ் அனுப்ப உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு பிப்ரவரியில் நடந்த கருத்தரங்கு ஒன்றில், பட்டியல் இனத்தவர்களுக்கு எதிராக கருத்து தெரிவித்ததாகக் கூறி, தி.மு.க. அமைப்புச் செயலாளர் ஆர் எஸ் பாரதி எதிராக, ஆதி தமிழர் மக்கள் கட்சி புகார் அளித்தது. அந்த புகாரின் பேரில் அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின்கீழ் சென்னை தேனாம்பேட்டை காவல் நிலையத்தில் பதிவு செய்யப்பட்டது. பின்னர் இந்த வழக்கு, மத்திய குற்றப் பிரிவுக்கு மாற்றப்பட்டது. 2020ஆண்டு மே மாதம் கைது செய்யப்பட்ட ஆர்.எஸ். பாரதி, பின்னர் ஜாமீனில் விடுதலை செய்யப்பட்டார். இந்த வழக்கை ரத்து செய்யக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் சென்னை ஐகோர்ட்டில் மனுத்தாக்கல் செய்யப்பட்டது. இந்த மனுவை உயர்நீதிமன்றம் வன்கொடுமை தடைச் சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்ததுடன், வழக்கு விசாரணையை நாள்தோறும் நடத்தி விரைவாக தீர்வுகாண விசாரணை நீதிமன்றத்துக்கு உத்தரவிட்டது.இந்நிலையில், 
ஆர்.எஸ்.பாரதி தாக்கல் செய்த மேல்முறையீடு மனு  இன்று உச்சநீதிமன்ற நீதிபதி எல். நாகேஸ்வர ராவ் தலைமையிலான அமர்வு முன் விசாரணைக்கு வந்தது. ஆர்.எஸ். பாரதி சார்பில் மூத்த வக்கீல் கபில்சிபல் ஆஜராகி, விசாரணை நீதிமன்றத்தில் நடைபெறும் விசாரணைக்கு தடை விதிக்க வேண்டும். குற்றச்சாட்டு பதிவுக்கு இடைக்கால தடை விதிக்க வேண்டும் என வாதிட்டார்.மனுதாரர் தரப்பு வாதங்களை ஏற்க மறுத்த நீதிபதிகள், வழக்கு விசாரணைக்கு இடைக்கால தடை விதிக்க மறுத்ததுடன், இந்த மேல்முறையீடு மனு தொடர்பாக 2 வாரங்களுக்குள் பதில் அளிக்க தமிழக அரசுக்கு உத்தரவிட்டனர்.

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5090 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

260 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

கேரளா - ராஜ்யசபா எம்.பி. தேர்தல் - இடது முன்னணி சார்பில் இருவர் போட்டி

13 views

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

தமிழக ஆளுநர் பன்வாரிலால் பிறந்த தினம் - முதல்வர் மற்றும் திமுக தலைவர் ஸ்டாலின் வாழ்த்து

14 views

முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளா கைது

தெலுங்கானா மாநில எல்லையில், உண்ணாவிரதப் போராட்டத்தில் ஈடுபட்ட ஆந்திரா முதல்வர் ஜெகன்மோகன் ரெட்டியின் சகோதரி ஷர்மிளாவை போலீசார் கைது செய்தனர்.

147 views

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

சென்னையில் முக்கிய சாலை பெயர் மாற்றம் தலைமை செயலாளரிடம் திமுக எம்.பி.க்கள் மனு

74 views

"தேர்வை நடத்த இது சரியான நேரமா?" - திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி

முதுநிலை மருத்துவ படிப்புகளுக்கான நீட் தேர்வினை நடத்துவதற்கு இது சரியான நேரமா? என திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி எழுப்பியுள்ளார்.

39 views

"தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு" - மத்திய அரசு மீது ராகுல் காந்தி தாக்கு

நாட்டில் தடுப்பூசி திருவிழா என்ற பெயரில் பாசாங்கு மட்டுமே நடைபெறுகிறது என மத்திய அரசை காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

40 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.