அப்பவே அப்படி 29 : தமிழகமும்... தொகுதிகள் எண்ணிக்கையும்...
பதிவு : மார்ச் 10, 2021, 01:12 PM
தமிழக சட்டப்பேரவையின் தொகுதிகள் எண்ணிக்கை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..
அப்பவே அப்படி 29 : தமிழகமும்... தொகுதிகள் எண்ணிக்கையும்... 

தமிழக சட்டப்பேரவையின் தொகுதிகள் எண்ணிக்கை பற்றிய ஒரு ஃப்ளாஷ் பேக் தொகுப்பை தற்போது பார்க்கலாம்..

சட்டப்பேரவை தேர்தல் நெருங்கியதும் தொகுதிகளின் எண்ணிக்கை, உடன்பாடு, தொகுதி ஒதுக்கீடு, தனி தொகுதி, பொதுத் தொகுதி போன்ற வார்த்தைகளை அதிகமாக கேட்டிருப்போம். தமிழக சட்டப் பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை எப்போதுமே 234 என்ற எண்ணிக்கையில் இருந்தது இல்லை தெரியுமா? தொகுதி எண்ணிக்கையின் பரிணாம வளர்ச்சியை அறிவதற்கு, சுமார் 95 ஆண்டுகளுக்கு முந்தைய அரசியலை நோக்கி பயணிக்க வேண்டும். அப்போது சென்னை மாகாணமாக இருந்த தமிழகத்தில், 1926ம் ஆண்டு துவங்கி சுமார் 10 ஆண்டு காலத்துக்கு சட்ட  மேலவை மட்டுமே இருந்தது. அதன் உறுப்பினர் எண்ணிக்கை 132. அப்போதெல்லாம் அனைவருக்கும் வாக்குரிமை கிடையாது. சொத்து வைத்திருப்பவர்கள், படித்தவர்கள் என சில பிரிவினருக்கு மட்டுமே வாக்குரிமை உண்டு.இதுபோல, மொத்தம் உள்ள 132 பேரில் 98 பேர், வாக்காளர்களால் தேர்வு செய்யப்பட்டனர். மற்ற உறுப்பினர்கள் அனைவரும் ஆளுநர் நியமனம், ஜமீன்தார்கள் போன்ற ஒதுக்கீடுகளில் தேர்வாகினர். ஆங்கிலேய ஆட்சியின்போது, மாநில சுயாட்சி முறை அறிமுகப்படுத்தப்பட்ட பின், முதன் முதலாக, 1937ஆம் ஆண்டில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்பட்டது. அப்போது, சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை 215. இதில் 116 தொகுதிகள் மட்டுமே பொது தொகுதிகள். மற்ற தொகுதிகள் அனைத்தும் முஸ்லிம்கள், கிறிஸ்தவர்கள், தாழ்த்தப்பட்டோர், வியாபாரிகள், ஜமீன்தார்கள், ஐரோப்பியர்கள் என பல தரப்பட்ட பிரிவினருக்கு ஒதுக்கப்பட்டடன.இந்தியா சுதந்திரம் பெறும் வரை, இந்த எண்ணிக்கையிலேயே, சென்னை மாகாண சட்டப்பேரவை உறுப்பினர்கள் தேர்வு செய்யப்பட்டனர்.1951ம் ஆண்டில் குடியரசு நாடாக இந்தியா மாறிய பிறகு, நடந்த முதலாவது பொதுத் தேர்தலில் சென்னை மாகாண சட்டப்பேரவையின் மொத்த உறுப்பினர் எண்ணிக்க 375ஆக அதிகரிக்கப்பட்டது.  அன்றைய இந்தியாவில் உத்தர பிரதேசத்துக்கு அடுத்தபடியாக இரண்டாவது பெரிய மாநிலம், சென்னை மாகாணம்தான். அதனால் தான் இவ்வளவு எம்எல்ஏக்கள்.ஆனால், தொகுதிகள் என்று பார்த்தால் 309 தான். ஏனென்றால், அப்போதெல்லாம் தனி தொகுதிகள் என தனியாக கிடையாது. அதற்குப் பதிலாக, தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடி இன மக்களின் பிரதிநிதித்துவத்துக்காக இரட்டை உறுப்பினர் முறை அமலில் இருந்தது. அதன்படி, மக்கள் தொகை அடிப்படையில் 309 தொகுதிகளுக்குள் 66 தொகுதிகளில் இருந்து இரட்டை உறுப்பினரை தேர்வு செய்யும் முறை இருந்தது.இந்த 66 உறுப்பினர்களில் 62 எம்எல்ஏ பதவி தாழ்த்தப்பட்ட இனத்தவருக்கும் மீதி நான்கு எம்எல்ஏ பதவிகள் பழங்குடி இனத்தவருக்கும் வழங்கப்பட்டது. 1952 தேர்தலில் மட்டும்தான் இந்த நடைமுறை இருந்தது.அடுத்த சில ஆண்டுகளிலேயே மொழிகள் அடிப்படையில் மாநிலங்கள் பிரிக்கப்பட்டதால் சென்னை மாகாணத்தில் இருந்து ஆந்திரா, கர்நாடகம், கேரளா மாநிலங்கள் உருவானது. அந்தந்த பிராந்தியங்களில் இருந்த தொகுதிகள் அந்தந்த மாநிலங்களுக்குச் சென்றன.இதனால், 1957ம் ஆண்டு நடைபெற்ற சட்டப்பேரவை தேர்தலில் எம்எல்ஏக்களின் எண்ணிக்கை 205 ஆக குறைந்தது. இன்றைய தமிழக பரப்பளவைக் கொண்டு நடந்த முதலாவது பேரவை தேர்தல் அதுதான். அப்போதும் இரட்டை உறுப்பினர் நடைமுறை தொடர்ந்தது. அதன்படி தாழ்த்தப்பட்ட பிரிவினருக்கு 38, பழங்குடியினருக்கு ஒன்று என்ற அளவில் இடங்கள் ஒதுக்கப்பட்டிருந்தது. இதனால், 1957 தேர்தலில் தொகுதிகளின் எண்ணிக்கை என பார்த்தால் 167 மட்டுமே.பின்னர், 1961ஆம் ஆண்டில் இரட்டை வாக்குரிமை தொகுதி கலைப்பு சட்டம் நிறைவேற்றப்பட்டு அமலுக்கு வந்தது. இதனால், இரட்டை உறுப்பினர் முறை கைவிடப்பட்டு தாழ்த்தப்பட்ட, பழங்குடி இனத்தவருக்கென தனியாகவே தொகுதிகளை ஒதுக்கத் துவங்கினர். அதன்படி தனி தொகுதிகளுடன்  நடந்த முதலாவது தேர்தல், 1962ம் ஆண்டு பேரவை தேர்தல். 
முந்தைய தேர்தலின் மொத்த உறுப்பினர் எண்ணிக்கை அப்படியே இருந்தது. தொகுதிகளின் எண்ணிக்கை 167ல் இருந்து 205 ஆக உயர்ந்தது. அதில் 38 தொகுதிகள் தனி தொகுதிகளாக அறிவிக்கப்பட்ட,  தாழ்த்தப்பட்ட மற்றும் பழங்குடியினருக்காக  ஒதுக்கப்பட்டன.அதன்பிறகு, மக்கள் தொகை அடிப்படையில் தொகுதிகள் சீரமைக்கப்பட்டபோது, தமிழக சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 234 ஆனது. 1967ம் ஆண்டு சட்டப்பேரவை தேர்தல் துவங்கி, கடந்த 50 ஆண்டுகளுக்கு மேலாக 234 என்ற அளவிலேயே பேரவை உறுப்பினர்களின் எண்ணிக்கை நீடிக்கிறது. அவ்வப்போது தொகுதிகளின் பரப்பளவை மாற்றி அமைத்த போதிலும், புதிய தொகுதிகள் உருவான போதிலும், இந்த எண்ணிக்கை மட்டும் மாறவே இல்லை.தமிழக தேர்தல் வரலாற்றில் இதுபோன்று கொட்டிக் கிடக்கும் அரிய தகவல்களை, அடுத்து வரும் நாட்களின், 'அப்பவே அப்படி' தொகுப்பு வாயிலாக, நம்முடைய நினைவலைகளில் இருந்து எடுத்து அசைபோட்டு பார்ப்போம்... 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

4853 views

நாளை தேர்தலில் வாக்களிப்பது எப்படி? - விழிப்புணர்வு வீடியோ வெளியீடு

தமிழகத்தில் நாளை சட்டப்பேரவை தேர்தல் நடைபெற உள்ள நிலையில் வாக்களிப்பது எப்படி ? என்பது குறித்த விழிப்புணர்வு வீடியோவை தேர்தல் ஆணையம் வெளியிட்டுள்ளது.

463 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

248 views

பிற செய்திகள்

உரவிலை உயர்வுக்கு வைகோ கண்டனம்... உடனடியாக திரும்ப பெறக் கோரிக்கை

உரவிலை உயர்வுக்கு 58 சதவீதம் உயர்த்தப்பட்டதற்கு மதிமுக பொதுச்செயலாளர் வைகோ கண்டனம் தெரிவித்துள்ளார்.

77 views

அரக்கோணம் இரட்டை கொலை சம்பவம் - விடுதலை சிறுத்தைகள் கண்டன ஆர்ப்பாட்டம்

தலித் இளைஞர்கள் இரட்டை கொலையை கண்டித்து, விடுதலை சிறுத்தைகள் கட்சியினர் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

168 views

பாஜக எம்.பி.யின் கார் மீது தாக்குதல்.. லாக்கெட் சாட்டர்ஜிக்கு மக்கள் எதிர்ப்பு

மேற்கு வங்கம் மாநிலம் ஹூக்ளியில் பாஜக எம்பி லாக்கெட் சாட்டர்ஜியின் கார் மீது பொதுமக்கள் சரமாரி தாக்குதல் நடத்தியுள்ள சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

19 views

ஜெகன் தங்கை அரசியல் பிரவேசம் - சிங்கம் சிங்கிளாதான் வரும்" என முழக்கம்

தெலுங்கானாவில் புதிய அரசியல் கட்சியை தொடங்கப்போவதாக ஆந்திர மாநில முதல்வர் ஜெகன் மோகன் ரெட்டியின் தங்கை ஒய்.எஸ்.ஷர்மிளா அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளார்.

188 views

"பாஜக தூண்டுதல் காரணமாக தேர்தல் ஆணையம் நோட்டீஸ்" - மம்தா பானர்ஜி பிரசாரத்தில் பேச்சு

தேர்தல் ஆணையம் அனுப்பும் நோட்டீஸ்களுக்கு எல்லாம் கவலைப்பட மாட்டேன் என மேற்கு வங்க முதல்வர் மம்தா பானர்ஜி கூறியுள்ளார்.

11 views

திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா...

சென்னை தியாகராயநகர் திமுக வேட்பாளர் ஜெ.கருணாநிதிக்கு கொரோனா தொற்று உறுதியாகி உள்ளது

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.