ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஓர் சோக செய்தி "எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது"
பதிவு : மார்ச் 07, 2021, 06:19 PM
ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.
ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.2021 ஆம் ஆண்டுக்கான ஐ.பி.எல் போட்டி ஏப்ரல் 9 ஆம் தேதி தொடங்க உள்ளதாக அதிகாரப்பூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது. சென்னையில் தொடங்கும் முதல் போட்டியில் மும்பை இந்தியன்ஸ் அணியும், ராயல் சேலஞ்சர்ஸ் பெங்களூரு அணியும் பலப்பரீட்சை நடத்துகின்றன. மற்ற தொடரை போல இல்லாமல், இந்த ஐ.பி.எல் தொடரில் ஓர் வினோத முயற்சியை மேற்கொண்டுள்ளது பிசிசிஐ...அதன் படி, எந்த அணியும், அதன் சொந்த மண்ணில் விளையாடாது. உதாரணமாக சென்னை மும்பை அணிகள் மோதும் போட்டி சென்னையிலோ அல்லது மும்பையிலோ நடைபெறுவது வழக்கம். ஆனால் இந்த முறை, சென்னை மும்பை தவிர்த்து வேறு மைதானத்தில் தான் போட்டி நடத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா பரவல் சூழலில் இந்திய மண்ணில் போட்டியை நடத்த வேண்டும் என்ற எண்ணத்தில் இத்தகைய முடிவை எடுத்துள்ளதாக தெரிவித்துள்ள பிசிசிஐ, ரசிகர்களை அனுமதிப்பது குறித்து பின்னர் முடிவெடுக்கப்படும் என கூறியுள்ளது.சேப்பாக்கம் மைதானம் உள்பட மொத்தம்  6 மைதானங்களில் போட்டிகள் நடத்தப்பட உள்ளன.இதில் தற்போது புதிதாக தொடங்கப்பட்டுள்ள உலகின் மிகப்பெரிய மைதானமான அகமதாபாத் நரேந்திர மோடி கிரிக்கெட் மைதானத்தில் ப்ளே ஆப் சுற்றுகளும், மே 30 ஆம் தேதி இறுதி போட்டியும் நடைபெற இருப்பது குறிப்பிடத்தக்கது.சென்னையை சூப்பர் கிங்ஸ் அணி, 10 ஆம் தேதி டெல்லி அணியுடன் மும்பை மைதானத்தில் தங்கள் ஆட்டத்தை தொடங்குகிறது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5090 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

260 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

டெல்லி அணியை வீழ்த்திய ராஜஸ்தான் அணி

மும்பை வான்கடே மைதானத்தில் நேற்று நடைபெற்ற ஐபிஎல் கிரிக்கெட் போட்டியில், டெல்லி அணியை 3 விக்கெட்டுகள் வித்தியாசத்தில் ராஜஸ்தான் அணி வீழ்த்தியது

10 views

புத்தாண்டு கொண்டாடிய சிஎஸ்கே வீரர்கள் - வேஷ்டியில் வலம் வந்த சுரேஷ் ரெய்னா

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் தமிழ் புத்தாண்டை கொண்டாடினர்.

16 views

தோனியை வாழ்த்தி பாடல் : தோனி ரசிகரின் புதிய முயற்சி - தோனிக்கு சமர்ப்பிப்பதாக ரசிகர் பெருமிதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு, அவரது தீவிர ரசிகர் ஒருவர், பாடல் ஒன்றை, தானே பாடியும், ஆடியும் உருவாக்கி உள்ளார்.

55 views

வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் குத்தாட்டம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி அணி வீரர்கள் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1481 views

ஒலிம்பிக் தொடருக்கு மக்கள் எதிர்ப்பு? 70 சதவீதம் பேர் எதிர்ப்பு என தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு

கொரோனா அச்சத்தால் ஜப்பானில் ஒலிம்பிக் நடத்துவதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

22 views

ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உற்சாகம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.