இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்... இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா
பதிவு : மார்ச் 06, 2021, 06:49 PM
இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 3 வது நாளிலே முடித்த இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது
இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 3 வது நாளிலே முடித்த இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது

இங்கிலாந்து அணிக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் புதிதாக உருவாகியுள்ள நரேந்திரமோடி மைதானத்தில் நடைபெற்றது. டாசில் வென்ற இங்கிலாந்து அணி முதலில் பேட் செய்ய தீர்மானித்த‌து.முதல் இன்னிங்சில் , இந்திய அணியின் பந்துவீச்சை தாக்குப்பிடிக்க முடியாமல் இங்கிலாந்து அணி 205 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் பறி கொடுத்த‌து. இந்திய அணியின் அக்சர் படேல் 4 விக்கெட்டுகளை கைப்பற்றினார்.தொடர்ந்து முதல் இன்னிங்சை தொடங்கிய இந்திய அணியில், கில், விராட் டக் அவுட் ஆக, அடுத்தடுத்து விக்கெட்டுகளை பறிகொடுத்த‌து. இதையடுத்து, ரிஷப் பண்ட் பொறுப்பாக விளையாடி சதம் விளாச, அவருடன் ஜோடி சேர்ந்த தமிழக வீர‌ர் சுந்தரும் 96 ரன்கள் விளாசினார். மற்ற வீர‌ர்கள் விக்கெட்டை பறிகொடுத்த‌தால் அவரது சதம் பறிபோனது.இதை அடுத்து 2 வது இன்னிங்சில் களமிறங்கிய இங்கிலாந்து அணி, அஸ்வின் மற்றும் அக்சர் படேலின் சுழலுக்கு ஈடு கொடுக்க முடியாமல் அடுத்தடுத்து பெவிலியன் திரும்பினர். 135 ரன்களில் அனைத்து விக்கெட்டுகளையும் இழந்த இங்கிலாந்து அணி, Card - 4 25 ரன்கள் பின்தங்கிய நிலையில் இன்னிங்ஸ் தோல்வியை சந்தித்த‌து. அக்சர் படேல் மற்றும் தமிழக வீர‌ர் அஸ்வின் தலா 5 விக்கெட்டுகளை கைப்பற்றினர். இந்த வெற்றி மூலம் 4 போட்டிகள் கொண்ட டெஸ்ட் தொடரை 3க்கு 1 என்ற கணக்கில் இந்திய அணி கைப்பற்றியுள்ளது. இதேபோல டெஸ்ட் தரவரிசை பட்டியலிலும் முதல் இடத்திற்கு முன்னேறியுள்ளது. மேலும், லார்ட்ஸ் மைதானத்தில் நடைபெற உள்ள, உலக டெஸ்ட் சாம்பியன்ஷிப் தொடரின் அறிமுக போட்டியில் விளையாடும் வாய்ப்பை பெற்றுள்ளது.முதல் போட்டியில் நியூசிலாந்து அணியை எதிர்கொள்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

(29/03/2021) தந்தி டிவி-யின் பிரமாண்ட கருத்துக்கணிப்பு முடிவுகள் : தமிழகத்தில் அடுத்து ஆட்சியமைக்கப் போவது யார் ?

5023 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

518 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

257 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

49 views

பிற செய்திகள்

தோனியை வாழ்த்தி பாடல் : தோனி ரசிகரின் புதிய முயற்சி - தோனிக்கு சமர்ப்பிப்பதாக ரசிகர் பெருமிதம்

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி கேப்டன் தோனிக்கு, அவரது தீவிர ரசிகர் ஒருவர், பாடல் ஒன்றை, தானே பாடியும், ஆடியும் உருவாக்கி உள்ளார்.

33 views

வாத்தி கம்மிங் பாடலுக்கு கிரிக்கெட் வீரர்கள் குத்தாட்டம்

வாத்தி கம்மிங் பாடலுக்கு டெல்லி அணி வீரர்கள் நடனமாடும் காட்சிகள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்துள்ளது.

1248 views

ஒலிம்பிக் தொடருக்கு மக்கள் எதிர்ப்பு? 70 சதவீதம் பேர் எதிர்ப்பு என தனியார் தொலைக்காட்சி கருத்துக்கணிப்பு

கொரோனா அச்சத்தால் ஜப்பானில் ஒலிம்பிக் நடத்துவதற்கு பெரும்பாலான மக்கள் எதிர்ப்பு தெரிவிப்பதாக அந்நாட்டு செய்தி நிறுவனம் தெரிவித்துள்ளது.

19 views

ஓட்டலில் சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் உற்சாகம்...

சென்னை சூப்பர் கிங்ஸ் அணி வீரர்கள் ஓய்வு நேரத்தில் கூடைபந்து விளையாடி மகிழ்ந்தனர்.

61 views

டோக்கியோ ஒலிம்பிக் பாய்மர படகு போட்டி - களமிறங்கும் தமிழர்கள்

ஒலிம்பிக் போட்டியின் பாய்மர படகுப்போட்டி பிரிவுக்கு தமிழ்நாட்டைச் சேர்ந்த வீரர்கள் தகுதி பெற்றுள்ளனர்.

80 views

(08.04.2021) விறு விறு விரைவுச் செய்திகள்

உத்தரப்பிரதேசத்தில், உயரமான பாலத்தில் இருந்து ஆற்றில் குதித்து 3 பேர் உயிரிழந்தனர்.

181 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.