வேதாளம் பட தோற்றத்தில் அஜித் - சமூக வலைதளங்களில் பரவும் புகைப்படம்
பதிவு : மார்ச் 03, 2021, 04:19 PM
நடிகர் அஜித், ஹெச்.வினோத் இயக்கத்தில் வலிமை என்ற படத்தில் நடித்து வருகிறார்.
இதனிடையே அவர் தொடர்ந்து துப்பாக்கி சுடும் பயிற்சியிலும் ஈடுபட்டு வருகிறார். அவரின் லேட்டஸ்ட் புகைப்படங்கள் தினமும் வெளியாகி சமூக வலைதளங்களில் டிரெண்டாகி வருகிறது. அந்த வரிசையில் தற்போது வேதாளம் திரைப்பட தோற்றத்தில் உள்ளது போன்ற அஜித்தின் புகைப்படங்கள் வெளியாகி சமூக வலைதளங்களில் பரவி வருகிறது.

கண்டா வரச்சொல்லுங்க -1 கோடி பார்வையாளர்கள்
அடுத்த பாடல் - 'பண்டாரத்தி புராணம்'

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ண‌ன் திரைப்படத்தின் கண்டா வரச்சொல்லுங்க பாடல், 1 கோடி பார்வையாளர்களை தாண்டியுள்ளது. இந்த நிலையில், இரண்டாவது சிங்கிள் டிராக்காக பண்டாரத்தி புராணம் என்ற பாடல் வெளியாகியுள்ளது. இந்தப் பாடலை இசையமைப்பாளர் தேவா பாடி உள்ளார்

முடிவுக்கு வந்தது 'மாமனிதன்' பட பிரச்சினை - இயக்குனர் சீனு ராமசாமி தகவல்

இயக்குனர் சீனு ராமசாமி இயக்கத்தில் விஜய் சேதுபதி நடித்துள்ள திரைப்படம் மாமனிதன். யுவன்சங்கர் ராஜா இந்த படத்தை தயாரித்துள்ளார். இந்நிலையில், படத்தின் தலைப்புக்கான உரிமை குறித்து சர்ச்சை எழுந்தது. இதையடுத்து படத்தின் தலைப்பை, முறைப்படி யுவன்சங்கர்ராஜா பெற்றுவிட்டதாக இயக்குனர் சீனு ராமசாமி கூறியுள்ளார். மேலும், படத்தின் முதல் பார்வை மற்றும் பாடல் விரைவில் வெளியாகும் என்று தெரிவித்துள்ளார்..

த்ரிஷ்யம்-3 கதைகளை அனுப்பாதீர்கள்" - இயக்குனர் ஜீத்து ஜோசப் வேண்டுகோள்

சமீபத்தில் வெளியான த்ரிஷ்யம்-2 திரைப்படம், அதன் முதல் பாகத்தை போலவே பெரும் வெற்றி பெற்றது. இதனிடையே த்ரிஷ்யம்-3 குறித்து இயக்குனர் ஜீத்து ஜோசப் வீடியோ மூலம் வேண்டுகோள் ஒன்றை விடுத்துள்ளார். அதில், பலரும், த்ரிஷ்யம் மூன்றாம் பாகத்திற்கான கதை என கூறிகொண்டு தொடர்ந்து பல மெயில்கள் அனுப்பி வருவதாக குறிப்பிட்டுள்ளார். இதனால் தனது மெயில் நிரம்பி வழிவதாகவும், தயவு செய்து யாரும் இனி கதைகளை அனுப்பாதீர்கள் என்றும் வேண்டுகோள் விடுத்துள்ளார்.

மாஸ்டர் படத்தின் 'போனா போகட்டும்' பாடல் - போனா போகட்டும்' பாடல் வீடியோ வெளியீடு

விஜய்யின் மாஸ்டர் படம் வெற்றி பெற்ற நிலையில், அதன் பாடல்களும் ஹிட்டானது. இந்த நிலையில், பாடல் வீடியோக்களை தொடர்ந்து படக்குழு வெளியிட்டு வருகிறது. தற்போது போனா போகட்டும் என்ற பாடல் வீடியோவை படக்குழு வெளியிட்டுள்ளது. இதனை விஜய் ரசிகர்கள் பலரும் பகிர்ந்து வருகின்றனர்...

10 கோடி பார்வைகளை பெற்ற 'செல்லம்மா' - நடிகர் சிவகார்த்திகேயன் மகிழ்ச்சி

நடிகர் சிவகார்த்திகேயனின், டாக்டர் படத்தில் இடம்பெற்றுள்ள செல்லம்மா என்ற பாடல் 10 கோடி பார்வைகளை கடந்து சாதனை படைத்துள்ளது. சிவகார்த்திகேயன் எழுதியிருந்த இந்த பாடலுக்கு அனிருத் இசையமைத்து பாடியிருந்தார். இதுகுறித்து தனது டுவிட்டர் பக்கத்தில் மகிழ்ச்சி தெரிவித்துள்ள சிவகார்த்திகேயன், அனிருத்தின் மற்றொரு செஞ்சூரி என்று குறிப்பிட்டுள்ளார். மேலும், இந்த பாடலுக்கு ஆடி ரசிகர்கள் வெளியிட்டிருந்த வீடியோக்களை தொகுத்து, புதிய வீடியோ ஒன்றையும் சிவகார்த்திகேயன் பதிவிட்டுள்ளார்.

தெலுங்கில் சாய் பல்லவி குத்தாட்டம் - வரவேற்பை பெற்றுள்ள சாரங்கா பாடல்

தெலுங்கில் நடிகை சாய் பல்லவி நடனத்தில் கலக்கியுள்ள பாடல் மிகுந்த வரவேற்பை பெற்றுள்ளது. LOVE STORY என்ற தெலுங்கு படத்தில் நாக சைத்தன்யாவுடன் சாய் பல்லவி நடித்து வருகிறார். இந்த படத்தில் இடம்பெற்றுள்ள SARANGA DARIYA பாடல் 28ஆம் தேதி வெளியான நிலையில், வெளியான இரண்டே நாட்களில் 12 மில்லியன் பார்வைகளை கடந்து வரவேற்பை பெற்றுள்ளது. குறிப்பாக சாய் பல்லவியின் நடனம் ரசிகர்களிடம் தனிகவனத்தை பெற்றுள்ளது

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

"வெற்றி - அனைவருக்கும் நன்றி" - இயக்குனர் மாரி செல்வராஜ் ட்வீட்

கர்ணன் திரைப்படத்தை வெற்றி பெற செய்த அனைவருக்கும் நன்றி தெரிவிப்பதாக, இயக்குனர் மாரி செல்வராஜ் தெரிவித்துள்ளார்.

36 views

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

278 views

அருமையான படம் என சிலாகித்த விஜய் சேதுபதி...மாரி செல்வராஜை பாராட்டிய விஜய் சேதுபதி...

கர்ணன் படத்தை பார்த்த பின்னர் இயக்குனர் மாரி செல்வராஜை ஆரத்தழுவி நடிகர் விஜய் சேதுபதி பாராட்டு தெரிவித்தார்.

75 views

தனுஷ் கட்அவுட்டுக்கு பால் அபிஷேகம்...

தனுஷின் கர்ணன் படம் ரிலீஸை தொடர்ந்து, தியேட்டர் முன்பு குவிந்த ரசிகர்கள் மேளதாளம் முழங்க உற்சகமாக கொண்டாடினர்.

59 views

தனுஷின் கர்ணன் படம் வெளியானது - ரசிகர்கள் உற்சாக கொண்டாட்டம்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடித்துள்ள கர்ணன் திரைப்படம் தியேட்டரில் இன்று வெளியானது.

43 views

மீண்டும் அண்ணாத்த படப்பிடிப்பில் ரஜினிகாந்த்

அண்ணாத்த படப்பிடிப்பில் கலந்துகொள்ள ஹைதராபாத் சென்றுள்ளார், நடிகர் ரஜினிகாந்த்.

198 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.