78 வது கோல்டன் குளோப் விருது விழா - காணொலி மூலம், கலைஞர்கள் பங்கேற்பு
பதிவு : மார்ச் 01, 2021, 08:00 PM
அமெரிக்காவின் லாஸ் ஏஞ்சல்ஸ் மற்றும் கலிபோர்னியாவில், காணொலி மூலம் 78 வது, கோல்டன் குளோப் விருதுகள் வழங்கும் விழா நடைபெற்றது.
ஆஸ்கருக்கு இணையாகப் போற்றப்படும் இது, 78 வது விழாவாகும். இணையம் மூலமாக இரண்டு வெவ்வேறு இடங்களிலிருந்து இரண்டு தொகுப்பாளர்கள் வழங்க, இணையம் மூலமாகவே நேரலையில் விருதுகள் அறிவிக்கப்பட்டு அந்தந்தக் கலைஞர்கள் கவுரவிக்கப்பட்டனர். கடந்த 2020 ஆம் ஆண்டின் சிறந்த திரைப்படம், டிராமா பிரிவில் நோமேட்லேண்ட் படத்திற்கும், இசை மற்றும் நகைச்சுவை பிரிவில் போரட் சப்ஸிக்யூண்ட் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த நடிகையாக தி யூனைடேட் ஸ்டேட் வெர்சஸ் பில்லி ஹாலிடே படத்தின் நாயகி, ஆன்ட்ரா டேக்கு வழங்கப்பட்டது. சிறந்த நடிகராக, மா ரெய்னீஸ் ப்ளாக் பாட்டம் படத்தின், சாட்விக் போஸ்மேன் தேர்வு செய்யப்பட்டார். இசை நகைச்சுவை பிரிவு படங்களின் சிறந்த நடிகர், நடிகையாக, ஸச்சா பேரன் ஜோஹன் மற்றும் ஜோடி ஃபாஸ்டர் ஆகியோர் தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. சிறந்த இயக்குநராக நோமேட்லேண்ட் படத்தை இயக்கிய க்ளோ ஸாவோ தேர்வு செய்யப்பட்டு விருது வழங்கப்பட்டது. 

சிறந்த தொலைக்காட்சி தொடர் - "தி கிரவுன்"

கோல்டன் குளோப் விருது விழாவில் சிறந்த தொலைக்காட்சி தொடருக்கான விருதை, பிரிட்டன் அரசு குடும்பத்தின் கதையை விளக்கும், தி கிரவுன் தொடர் பெற்றுள்ளது. இந்த தொடரில் இளவரசி டயானா வேடத்தில் நடித்த எம்மா காரினுக்கு, சிறந்த நடிகைக்கான விருது வழங்கப்பட்டுள்ளது. தொலைக்காட்சி தொடருக்கான சிறந்த நடிகருக்கான விருது சார்லஸ் வேடத்தை ஏற்று நடித்த, ஜோஷ் ஒ கானருக்கு வழங்கப்பட்டது. சிறந்த துணை நடிகைக்கான விருது மார்க்ரெட் தாட்சர் வேடத்தில் நடித்த, கிலியன் ஆன்டர்சனுக்கு வழங்கப்பட்டது. 


தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

கிம் 2 சங்க்-இன் 109 வது பிறந்த நாள் - வட கொரிய அதிபர் மரியாதை

வட கொரிய அதிபர் கிம் ஜா உங் தனது தாத்தாவின் கல்லறைக்கு சென்று மரியாதை செலுத்தினார்.

8 views

சிங்கம் செல்லப்பிராணியா?! குழந்தையைப் போல் வளர்க்கும் ரஷ்ய தம்பதி

சிங்கத்தை செல்லப்பிராணியாக வளர்க்க முடியுமா?? கடந்த 5 ஆண்டுகளாக அதை சாத்தியமாக்கியிருக்கும் ரஷ்ய தம்பதி குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

11 views

பிரேசில் - மயக்க மருந்து பற்றாக்குறை : குவியும் மருத்துவர்களின் குற்றச்சாட்டு

பிரேசிலில் தொடர்ந்து கொரோனா பரவல் அதிகரித்து வரும் நிலையில், மருத்துவமனைகளில் நோயாளிகளுக்குத் தேவையான மயக்க மருந்துகள் பற்றாக்குறை ஏற்பட்டு பெரும் சிரமத்திற்குள்ளாகி இருப்பதாக மருத்துவர்கள் குற்றம் சாட்டியுள்ளனர்.

11 views

மீனவர்கள் பிரச்சினை; முதலை கண்ணீர் வடித்து வருகிறார்கள் - தமிழக அரசியல் தலைவர்கள் மீது குற்றச்சாட்டு

இந்தியா - இலங்கை மீனவர்கள் விவகாரத்தில், தமிழக அரசியல் தலைவர்கள் முதலைக் கண்ணீர் வடிப்பதாக, மக்கள் விடுதலை முன்னணியைச் சேர்ந்தவரும், முன்னாள் எம்.பி.யுமான ராமலிங்கம் சந்திரசேகரன் தெரிவித்துள்ளார்.

13 views

இந்திய - இலங்கை மீனவர் பிரச்சனைக்கு உரிய தீர்வு வேண்டும் - செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தல்

இந்திய - இலங்கை மீனவர்களின் பிரச்சினைக்கு உரிய தீர்வை பெற, இலங்கை அரசு உரிய நடவடிக்கை மேற்கொள்ள வேண்டும் என, இலங்கை எம்.பி. செல்வம் அடைக்கலநாதன் வலியுறுத்தி உள்ளார்.

11 views

பாகிஸ்தானில் தொடரும் போராட்டம்: "பிரான்ஸ் நாட்டவர்கள் வெளியேறவும்" - பிரான்ஸ் தூதரகம் உத்தரவு

பாகிஸ்தானில் பல்வேறு இடங்களில் நடைபெற்ற போராட்டத்தில் வன்முறை வெடித்ததில் 10-க்கும் மேற்பட்டோர் உயிரிழந்து உள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது.

139 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.