பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் கொள்ளை - சிசிடிவி காட்சிகளின் அடிப்படையில் விசாரணை
பதிவு : பிப்ரவரி 28, 2021, 12:57 PM
திருப்பூர் கூலிபாளையத்தில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர்.
திருப்பூர் கூலிபாளையத்தில் பொதுத்துறை வங்கியின் ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்ட சம்பவம் குறித்து போலீசார் விசாரணை மேற்கொண்டு வருகின்றனர். 

கூலிபாளையம் பகுதியில் செயல்பட்டு வரும் பொதுத்துறை வங்கியின் தனியறையில் ஏடிஎம் இயந்திரம் வைக்கப்பட்டிருந்தது. இதில், கடந்த 22ஆம் தேதி ஆறு லட்சம் ரூபாய் பணம்  வைக்கப்பட்ட நிலையில், இன்று அதிகாலை ஏடிஎம் இயந்திரம் கொள்ளையடிக்கப்பட்டது. தவலறிந்து சம்பவ இடத்துக்கு சென்ற போலீசார், மோப்ப நாய் மற்றும் தடயவியல் நிபுணர்கள் வரவழைக்கப்பட்டு தடயங்களை சேகரித்தனர்.  இதனிடையே, சிசிடிவி கேமராவை கைப்பற்றி சோதனை செய்ததில், காரில் வந்த முகமூடி அணிந்த நபர்கள், சிசிடிவி கேமராவில் பெயிண்ட் ஸ்ப்ரே அடித்துவிட்டு, காரில் இருந்த  கயிறு மூலம் ஏடிஎம் இயந்திரத்தை இழுத்து உடைத்து, தூக்கிச் சென்ற காட்சி பதிவாகியுள்ளது. இதைத் தொடர்ந்து போலீசார் மேற்கொண்ட விசாரணையில், ஏடிஎம் இயந்திரத்தை எடுத்துச் சென்ற காரை விஜயமங்களம் அருகே கொள்ளையர்கள் நிறுத்திவிட்டு சென்றது தெரியவந்தது. மேலும், மின்வாரியத்துக்கு வாடகைக்கு இயக்கப்பட்ட ரோப் உடன் கூடிய காரை திருடி, அதன் மூலம் ஏடிஎம் இயந்திரத்தை கொள்ளையடித்துவிட்டு, பின்னர் இயந்திரத்தை தங்கள் வாகனத்தில் மாற்றி எடுத்துச் சென்றது கண்டறிப்பட்டது. 

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

279 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

பிற செய்திகள்

தமிழகத்தில் 6,618 பேருக்கு கொரோனா - அதிகபட்சமாக சென்னையில் 2,124 பேர் பாதிப்பு

தமிழகத்தில் ஒரு நாள் கொரோனா பாதிப்பு அதிகமாக உள்ள 5 மாவட்டங்களின் நிலவரத்தை தற்போது பார்க்கலாம்..

66 views

"கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டம் அவசியம்" - பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தல்

சென்னை - கன்னியாகுமரி கிழக்குக் கடற்கரை ரயில் பாதை திட்டத்தை அரசு கைவிடக் கூடாது என்று, பா.ம.க. நிறுவனர் ராமதாஸ் வலியுறுத்தியுள்ளார்.

308 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

21 views

முறையற்ற உறவால் நடந்த விபரீதம் - கள்ளக்காதலி தீ வைத்து எரித்துக் கொலை

திருமண பந்தத்தை மீறிய உறவில் இருந்த 2 பேருக்கு இடையே நடந்த பிரச்சினை அவர்களின் உயிரை கொடூரமாக பறித்திருக்கிறது. இந்த சம்பவத்தின் பின்னணி குறித்து பார்க்கலாம்....

31 views

கடற்கரைக்கு மக்கள் வருகை குறைந்த‌து... வெறிச்சோடிய மாமல்லபுரம் கடற்கரை

தமிழக அரசு விதித்துள்ள கட்டுப்பாடுகள் காரணமாக மாமல்லபுரம் கடற்கரைக்கு சுற்றுலா பயணிகளின் வரத்து குறைந்து காணப்பட்டது.

21 views

ஸ்ரீவில்லிபுத்தூர் காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் காலமானார்

நுரையீரல் தொற்று காரணமாக மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்த ஸ்ரீவில்லிபுத்தூர் தொகுதி காங்கிரஸ் வேட்பாளர் மாதவராவ் சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

97 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.