சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையம்- உயர்நீதிமன்றத்தில் சூரப்பா சார்பில் வழக்கு
பதிவு : பிப்ரவரி 27, 2021, 05:27 PM
அண்ணா பல்கலைக்கழக துணைவேந்தர் சூரப்பாவுக்கு எதிரான விசாரணை ஆணையத்தின் அறிக்கை மீது அரசு எந்த உத்தரவையும் பிறப்பிக்க கூடாது என உயர்நீதிமன்றம் இடைக்கால உத்தரவை பிறப்பித்துள்ளது.
ஓய்வுபெற்ற நீதிபதி கலையரசன் தலைமையிலான விசாரணை ஆணையத்திற்கு தடை கோரி, துணை வேந்தர் சூரப்பா சார்பில் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடரப்பட்டுள்ளது.இவ்வழக்கின் விசாரணை,  நீதிபதி வைத்தியநாதன் முன்பு வந்தபோது, அரியர் தேர்வை ரத்து செய்தற்கு எதிர்ப்பு தெரிவித்ததாலும், பல்கலைகழகத்தை சீர்மிகு உயர்கல்வி நிறுவனமாக மாற்ற முயற்சித்ததாலும் இந்நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது என சூரப்பா தரப்பில் வாதிடப்பட்டது.மேலும், கர்நாடகாவை சேர்ந்தவர் என்பதாலும், அரசுக்கு அடிபணிய மறுத்ததாலும் உள்நோக்கத்துடன் விசாரணை ஆணையம் அமைக்கப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டது.
இதற்கு மறுப்பு தெரிவித்த அரசின் தலைமை வழக்கறிஞர் விஜய் நாராயண், விசாரணையை சந்திக்க சூரப்பா ஏன் அச்சம் கொள்ள வேண்டும் எனக் கேள்வியை எழுப்பினார்.மேலும், விசாரணை ஆணையம் அமைக்க அரசுக்கு அதிகாரம் உள்ளது என்றும் ஏற்கனவே முன்னாள் துணைவேந்தர்கள் ஊழல் வழக்குகளில் தண்டிக்கப்பட்டு உள்ளனர் என்றும் குறிப்பிட்டார்.
அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி, கல்வி நிறுவனத்தின் நற்பெயரை கருத்தில் கொண்டு சுமூக தீர்வு காண வேண்டும் எனவும் விசாரணை அறிக்கை மீது எந்த உத்தரவும் பிறப்பிக்க கூடாது எனவும் தமிழக அரசுக்கு இடைக்கால உத்தரவை பிறப்பித்தார்.மேலும் இந்த மனு குறித்து மார்ச் 15ஆம் தேதிக்குள் பதிலளிக்கும்படி, தமிழக அரசுக்கு உத்தரவிட்ட நீதிபதி, விசாரணையை அன்றைய தினத்துக்கு தள்ளிவைத்தார்.

தொடர்புடைய செய்திகள்

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

53 views

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

16 views

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

13 views

கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8 views

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

9 views

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு? - சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யகோரி, தமிழக தேர்தல் ஆணையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.