ஆர்.எஸ். பாரதி மீதான வழக்கை ரத்து செய்ய மறுப்பு
பதிவு : பிப்ரவரி 27, 2021, 02:27 PM
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ். பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய சென்னை உயர்நீதிமன்றம் மறுத்துவிட்டது.

திமுக அமைப்பு செயலாளர் ஆர்.எஸ்.பாரதி பட்டியலின மக்களை அவமதித்ததாக கூறி அளிக்கப்பட்ட புகாரின் மீது வன்கொடுமை சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது. 

இவ்வழக்கு குறித்து சிறப்பு நீதிமன்றத்தில் விசாரணை நிலுவையில் இருக்கும் நிலையில், வழக்கை தள்ளுபடி செய்யக்கோரி ஆர்.எஸ். பாரதி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுதாக்கல் செய்தார்.

இந்த வழக்கு தொடர்பான விசாரணை நீதிபதி சதிஷ்குமார் முன்பு நடைபெற்ற போது, அரசியல் காரணங்களுக்காக உள்நோக்கத்துடன் வழக்கு போடப்பட்டுள்ளது என்றும் பட்டியலின மக்களை புண்படுத்தும் விதமாக பேசவில்லை என்றும் ஆர்.எஸ். பாரதி தரப்பில் வாதிடப்பட்டது.  

புகார் தாரர் தரப்பில் வாதிடுகையில், ஆர்.எஸ்.பாரதியின் பேச்சு மக்களை பிளவுபடுத்தும் வகையிலும், நல்லிணக்கத்தை சீர்குலைக்கும் வகையிலும் இருந்ததாக கூறப்பட்டது. 

இவ்வழக்கில் அனைத்து தரப்பு வாதங்களையும் கேட்ட நீதிபதி சதிஷ்குமார், ஆர்.எஸ்.பாரதி மீதான வன்கொடுமை தடை சட்ட வழக்கை ரத்து செய்ய மறுத்துவிட்டார்.

மேலும், வழக்கை ரத்து செய்ய கோரிய ஆர்.எஸ்.பாரதி மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டார்.

வழக்கு விசாரணையை தினமும் நடத்தி தாமதமின்றி முடிக்க சிறப்பு நீதிமன்றத்திற்கு உத்தரவிட்டார்.  

மேலும் அறிவுப்பூர்வமான விவாதங்களை நடத்தாமல், கருத்து சுதந்திரம் என்ற பெயரில் அரசியல் தலைவர்கள், எதிர்தரப்பினர் மீது விஷத்தை கக்குவது வழக்கமாகி விட்டதாகவும் கருத்து தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

அமெரிக்காவில் கர்ணனை பார்த்த தனுஷ் - இயக்குனருடன் வீடியோ காலில் உரையாடல்

மாரி செல்வராஜ் இயக்கத்தில், தனுஷ் நடிப்பில் வெளியாகி உள்ள கர்ணன் திரைப்படம் பல்வேறு தரப்பினர் இடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது.

542 views

குடும்பத் தகராறில் புதுப்பெண் மாயம் - கணவர் குடும்பத்தினருக்கு அரிவாள் வெட்டு

தேனி மாவட்டம் ஆண்டிப்பட்டி அருகே புதுப்பெண் மாயமானதால் ஏற்பட்ட தகராறில், அவரது கணவரின் குடும்பத்தினர் 5 பேருக்கு அரிவாள் வெட்டு விழுந்தது.

76 views

பிற செய்திகள்

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

டாஸ்மாக் கடைகளுக்கு எதிர்ப்பு - சென்னை உயர்நீதிமன்றம் அதிரடி தீர்ப்பு

53 views

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

மெரினாவில் 900 தள்ளு வண்டி கடைகள்.. மாற்றுதிறனாளிகளுக்கு 5% ஒதுக்க கோரி மனு

16 views

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

அண்ணா பல்கலை தேர்வு முடிவுகளில் குளறுபடி - மறு ஆய்வு செய்ய வைகோ வலியுறுத்தல்

13 views

கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளது - சுகாதாரத்துறை

தமிழகத்தில் கடந்த 2 நாட்களில் இரண்டு லட்சத்தி 91 ஆயிரம் பேருக்கு தடுப்பூசி செலுத்தப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை தெரிவித்துள்ளது.

8 views

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

திமுக எம்எல்ஏ தங்கும் விடுதியில் டிவி, மிக்ஸி, சிலிண்டர் திருட்டு

9 views

வாக்கு எண்ணிக்கை மையங்களில் பாதுகாப்பு? - சத்யபிரதா சாகுவிடம் திமுகவினர் புகார்

தமிழகம் முழுவதும் உள்ள வாக்கு எண்ணிக்கை மையங்களில் கூடுதல் பாதுகாப்பை உறுதி செய்யகோரி, தமிழக தேர்தல் ஆணையத்தில் திமுகவினர் புகார் அளித்தனர்.

8 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.