நாசாவின் வெற்றி - யார் இந்த சுவாதி மோகன்?
பதிவு : பிப்ரவரி 19, 2021, 04:49 PM
நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு மத்தியில் பிரத்யேகமாக கொண்டாடப்படும் சுவாதி மோகன் யார்? என்பதை தற்போது பார்க்கலாம்...
நாசாவின் வெற்றி - யார் இந்த சுவாதி மோகன்?

நாசாவின் "பெர்சவரன்ஸ்" ரோவர் வெற்றிகரமாக தரையிறங்கியதற்கு மத்தியில் பிரத்யேகமாக கொண்டாடப்படும் சுவாதி மோகன் யார்? என்பதை தற்போது பார்க்கலாம்... 

உலகம் திரும்பி பார்க்கும் விஞ்ஞானியாகி இருக்கும் சுவாதி மோகன், இந்தியாவில் இருந்து தன்னுடைய ஒரு வயதில் அமெரிக்காவிற்கு குடிபெயர்ந்தவர்.வடக்கு வர்ஜீனியாவில் வளர்ந்த அவர், தன்னுடைய 9 வயதில் 'ஸ்டார் ட்ரெக்' படத்தை பார்த்ததும் பிரபஞ்சத்தில் புதிய மற்றும் அழகான இடங்களை கண்டுபிடிக்க ஒரு விஞ்ஞானியாக விரும்பியவர்.ஆனால் 16 வயதில் சுவாதி மோகன் படிப்பு மருத்துவத்தை நோக்கி பயணித்தது. பள்ளிப் படிப்பின்போது, இயற்பியல் ஆசிரியரின் சிறப்பான கற்பித்தலால் மீண்டும் விண்வெளி பயணக் கனவுக்கு ஒளிவீச தொடங்கியது.அந்த வழியில் பயணிக்க கார்னெல் பல்கலைக்கழகத்தில் மெக்கானிக்கல் ஏரோஸ்பேஸ் இன்ஜினியரிங் பட்டப்படிப்பை முடித்தார், சுவாதி மோகன். பின்னர் ஏரோநாட்டிக்ஸ் மற்றும் ஆஸ்ட்ரோநாட்டிக்ஸ் பிரிவில் எம்.எஸ். ஆராய்ச்சி படிப்பை முடித்தார்.நாசாவில் பணியாற்ற தொடங்கிய சுவாதி மோகன்,  சனி கிரக ஆராய்ச்சிக்கான காசினி விண்கல திட்டம், நிலவுக்கான கிரெயில் இரட்டை செயற்கைக்கோள் திட்டத்தில் முக்கிய பணிகளை செய்தார்.செவ்வாய் கிரகத்தில் உயிரினங்கள் இருந்தனவா? என்பதை ஆய்வு செய்ய பெர்சவரன்ஸ் விண்கலம் அனுப்பும் திட்டத்தில் 2013-ஆம் ஆண்டில் சுவாதி மோகன் இணைக்கப்பட்டார்.இந்தத் திட்டத்தில் சுவாதி மோகனுக்கு விண்கலம் பயணிக்கும் பாதைக்கான வழிகாட்டல், கிரகத்திற்குள் நுழைதல் மற்றும் விண்கலகத்தை தரையிறங்குவதற்கான கட்டுப்பாட்டு கட்டமைப்பை உருவாக்குதல் மற்றும் பிற குழுவுடன் தகவல் பரிமாற்ற பணி வழங்கப்பட்டது.7 ஆண்டுகள் தொடர் பணிகள் முடிந்ததும் கடந்த ஜூலை 30 ஆம் தேதி நாசாவால் அனுப்பப்பட்ட விண்கலம், 7 மாத பயணத்திற்கு பின், கடந்த புதன்கிழமை தரையிறங்க சரியான திசையில் நிறுத்தப்பட்டது.அப்போது தரையிறங்குவதற்கு மிக முக்கியமான 7 நிமிடங்களை வெற்றிகரமாக பெர்சவரன்ஸ்  விண்கலம் கடந்து சாதனை படைத்தது.ரோவரின் உயரத்தை கையாண்டு கட்டுப்பாட்டுடன் தரையிறக்கிய சுவாதி மோகன், நாசா மையத்தில் " ரோவர் பாதுகாப்பாக தரையிறங்கியது, ஆய்வுகளை செய்ய தொடங்கும்...." என அறிவித்ததும் பிற விஞ்ஞானிகள் கைத்தட்டி மகிழ்ச்சியை தெரிவித்தனர்.  பலரும் சுவாதி மோகனை கொண்டாடினர்.சுவாதி மோகன் நிகழ்த்திய உரை நாசா டுவிட்டர் தளத்தில் வெளியானதும் இந்தியர்கள் அனைவரும் தங்களுடைய பாராட்டுக்களை தெரிவித்தனர். பலரும் அந்த வீடியோவை சமூக வலைதளங்களில் பகிர்ந்தும் வருகின்றனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

362 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

131 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

62 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

34 views

பிற செய்திகள்

பாதுகாப்புப் படை மீது துப்பாக்கிச் சூடு : துப்பாக்கிச் சூடு நடத்திய தீவிரவாதிகள்... அதிர்ச்சி தரும் சிசிடிவி காட்சிகள்

ஜம்மு காஷ்மீர் மாநிலம் ஸ்ரீநகரில் பாதுகாப்புப் படையினரை நோக்கி தீவிரவாதி துப்பாக்கிச் சூடு நடத்திய காட்சிகள் வெளியாகியுள்ளது.

7 views

எரிபொருட்கள் வரலாறு காணாத புதிய உச்சம் - மாற்று எரிபொருளுக்கான தேவை உருவானது

எரிபொருட்கள் வரலாறு காணாத புதிய உச்சத்தை நோக்கிச் சென்று கொண்டிருக்கின்றன. மாற்று எரிபொருளுக்கான தேவை உருவாகியுள்ளது. சாமானியர்களால் சமாளிக்க முடியுமா புதிய விலையேற்றத்தை? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு.

33 views

கோவிட் - 19 மருந்திற்கான ஆய்வு கட்டுரை - யோகா குரு பாபா ராம்தேவ் வெளியிட்டார்

யோகா குரு பாபா ராம்தேவ், கொரோனா தொற்றுக்கு எதிரான, முதல் மருந்து ஆராய்ச்சி அறிவியல் கட்டுரையை, வெளியிட்டுள்ளார்.

40 views

இந்தியா - ஆஸ்திரேலியா இடையே கருத்தரங்கு : காணொலி மூலம் பிரதமர் மோடி பங்கேற்பு

கொரோனாவுக்கு பிந்தைய உலகை வடிவமைப்பதில் இந்தியா - ஆஸ்திரேலியா இடையேயான, ஒற்றுமை முக்கிய பங்காற்றும் என, பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

8 views

இந்தியாவின் மிக நீளமான நதி மேம்பாலம் - அடிக்கல் நாட்டினார் பிரதமர் மோடி

அசாம் மாநிலம் பிரம்மபுத்ரா ஆற்றின் மீது அமைய இருக்கும் பாலங்கள் குறித்தும், அதன் சிறப்பம்சங்கள் என்ன என்பது குறித்தும் தற்போது பார்க்கலாம்

27 views

சமையலில் கலக்கி வரும் 9 வயது சிறுவன் - 60 நிமிடத்தில் 172 உணவுகளை சமைத்து அசத்தல்

கேரள மாநிலம் கோழிக்கோட்டில் 60 நிமிடத்தில் 172 உணவு வகைகளை சமைத்து 9 வயது சிறுவன் ஆசியா புக் ஆஃப் ரெக்கார்ட்ஸில் இடம்பெற்றுள்ளார்.

37 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.