வழக்கறிஞர் தம்பதி கொடூர கொலை... பட்டப்பகலில் சாலையின் நடுவே பயங்கரம்
பதிவு : பிப்ரவரி 18, 2021, 06:40 PM
தெலங்கானா மாநிலத்தில் வழக்கறிஞர் தம்பதியர் கூலிப்படையால் கொடூரமாக சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...
தெலங்கானா மாநிலத்தில் வழக்கறிஞர் தம்பதியர் கூலிப்படையால் கொடூரமாக சாலையின் நடுவே வெட்டிக் கொல்லப்பட்ட சம்பவம் அதிர்ச்சியில் உறைய வைத்துள்ளது. இதுபற்றி பார்க்கலாம்...

தெலங்கானா மாநிலம் பெடப்பள்ளி மாவட்டத்தை சேர்ந்தவர் வாமன் ராவ்.  இவரின் மனைவி நாகமணி. இவர்கள் தெலங்கானா உயர்நீதிமன்றத்தில் வழக்கறிஞர்களாக பணிபுரிந்து வந்தனர்.சம்பவத்தன்று இருவரும் நீதிமன்றத்திற்கு சென்று விட்டு காரில் வந்த போது திடீரென காரில் வந்த ஒரு கும்பல் இவர்களை வழிமறித்துள்ளது. பின்னர் தாங்கள் வைத்திருந்த ஆயுதங்களால் இருவரையும் சாலையின் நடுவே சரமாரியாக வெட்டி சாய்த்தது.நடந்த இந்த சம்பவங்களை எல்லாம் சாலையில் சென்ற ஒருவர் தன் செல்போனில் படம் பிடித்துள்ளார். இந்த காட்சிகள் சமூக வலைதளங்களில் வேகமாக பரவி வருகிறது.இதனிடையே ரத்த வெள்ளத்தில் கிடந்த 2 பேரும் உடனடியாக மீட்கப்பட்டு மருத்துவமனைக்கு கொண்டு ​செல்லப்படும் வழியிலேயே உயிரிழந்தனர்.இதனிடையே வாமன் ராவின் தந்தை கிஷன் ராவ் காவல் நிலையத்தில் புகார் மனு ஒன்றை அளித்துள்ளார். அதில் அதே ஊரை சேர்ந்த சில பெரும்புள்ளிகளுக்கு இதில் தொடர்பு இருப்பதாகவும், கூலிப்படையை வைத்து அவர்கள் இந்த கொடூரத்தை அரங்கேற்றி இருப்பதாகவும் குற்றச்சாட்டு முன்வைத்தார்.வழக்கறிஞர்களாக இருந்த போதிலும் பல்வேறு பொது பணிகளில் ஆர்வமாக இருந்தவர்கள் வாமன்ராவ் - நாகமணி தம்பதியர். பட்டியலினத்தை சேர்ந்த சீலம் ரங்கையா என்பவர் காவல் துறை கஸ்டடியில் இருந்த போது உயிரிழந்த சம்பவத்தை கையில் எடுத்து இவர்கள் வழக்கு நடத்தி வந்தனர்.இந்த வழக்கை விசாரித்த உயர்நீதிமன்றம், ஹைதராபாத் காவல் ஆணையரை பதிலளிக்க உத்தரவிட்டது. மேலும் தங்களின் உயிருக்கு அச்சுறுத்தல் இருப்பதால் பாதுகாப்பு வேண்டும் என பலமுறை இவர்கள் கோரிக்கை விடுத்தும் எந்த வித நடவடிக்கையும் எடுக்கவில்லை என தெரிகிறது.பட்டப்பகலில் சாலையின் நடுவே 2 பேரையும் வெட்டிச் சாய்த்த கும்பல், வழக்கறிஞர்களுக்கு சொந்தமான காரை எடுத்துச் சென்றதும் வீடியோவில் பதிவாகி உள்ளது. இந்த கொடூர சம்பவம் தெலங்கானாவில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தி இருக்கும் நிலையில் கொலையாளிகளை பிடிக்க தனிப்படை அமைக்கப்பட்டு தேடுதல் வேட்டையும் நடத்தப்பட்டு வருகிறது.வழக்கறிஞர்களின் இந்த  கொடூர மரணத்திற்கு மாநிலத்தின் வழக்கறிஞர்கள் சங்கம் கடும் கண்டனத்தை பதிவு செய்துள்ளது. கொரோனாவால் வருமானமின்றி தவித்த பல வழக்கறிஞர்களுக்கு பல்வேறு வாய்ப்புகளை ஏற்படுத்திக் கொடுத்த இந்த தம்பதியர் இப்போது கொடூரமாக கொலை செய்யப்பட்டிருப்பதால் பெரும் பரபரப்பு நிலவி வருகிறது....

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

359 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

125 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

60 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

31 views

பிற செய்திகள்

சென்னையில் அமேசான் உற்பத்தி ஆலை

சென்னையில் அமேசான் நிறுவனம் மின்னணு பொருள் உற்பத்தி ஆலையை தொடங்க உள்ளது. இதனால் ஏற்படும் நன்மைகள் என்ன? வேலைவாய்ப்பு அதிகரிக்குமா? அது பற்றி விரிவாக பார்ப்போம்

22 views

புதுச்சேரி ஆளுநராக தமிழிசை பொறுப்பேற்பு

புதுச்சேரியின் 31வது துணைநிலை ஆளுநராக தமிழிசை சவுந்தரராஜன் பதவி ஏற்றுக்கொண்டார்.

63 views

ரயில் மறியல் போராட்டம்: "பயணிகளுக்கு சிரமம் ஏற்படுத்தாதீர்கள்" - ரயில்வே துறை அறிவுரை

ரயில் பயணிகளுக்கு சிரமத்தை ஏற்படுத்தாமல் அமைதியான முறையில் விவசாயிகள் போராட்டத்தில் ஈடுபட வேண்டும் என்று ரயில்வே துறை அறிவுறுத்தியுள்ளது.

13 views

பாஸ் டேக் - ஒரே நாளில் ரூ.87.16 கோடி வசூல்

பாஸ்டேக் மூலம் ஒரே நாளில் 87 கோடி ரூபாய் வசூலாகி உள்ளது.

14 views

ராமநாதபுரம் - தூத்துக்குடி எரிவாயு குழாய் - காணொலி மூலம் துவக்கி வைத்தார் மோடி

சென்னை எண்ணூர், மதுரை, தூத்துக்குடியில் எரிவாயு குழாய் பதிப்பு திட்டங்களை பிரதமர் நரேந்திர மோடி காணொலி மூலம் நாட்டுக்கு அர்ப்பணித்தார்.

14 views

செங்கோட்டை வன்முறை விவகாரம் - கத்தியை சுழற்றியவர் கைது

டெல்லி செங்கோட்டையில் முற்றுகை போராட்டத்தின்போது கத்தியை சுழற்றியவர் கைது செய்யப்பட்டுள்ளார்.

16 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.