பழம்பெரும் நடிகை வாணிஸ்ரீயிடம் மோசடி...ரூ.6 கோடி மதிப்பிலான நிலம் மோசடி
பதிவு : பிப்ரவரி 17, 2021, 02:21 PM
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயிடம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு போலீசார் கைது செய்தனர்.
பழம்பெரும் நடிகையான வாணிஸ்ரீயிடம் 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை போலி ஆவணம் மூலம் மோசடி செய்த நபரை மத்திய குற்றப்பிரிவு  போலீசார் கைது செய்தனர்.

வசந்த மாளிகை, வாணி ராணி உள்ளிட்ட  படங்களில்  நடித்தவர்  வாணிஸ்ரீ.  இவர், சென்னை நெல்சன் மாணிக்கம் சாலையில் 3 கிரவுண்ட் 1902 சதுர அடி நிலத்தை பத்மினி என்பவரிடமிருந்து வாங்கி உள்ளார். இதனிடையே கடந்த 2012ல் தன்னுடைய நிலத்தை சிலர் மோசடி செய்ததாக வாணிஸ்ரீ புகார் அளித்திருந்தார். இந்த வழக்கை விசாரித்த மத்திய குற்றப்பிரிவு போலீசார் 2013ல் 4 பேரை கைது செய்தனர். இதனிடையே மீண்டும் அதே நிலத்தை மோசடி செய்து அபகரித்ததாக 2018ல் வாணிஸ்ரீ புகார் அளித்தார். இதுதொடர்பாக மீண்டும் விசாரணை நடத்தியதில் போலி ஆவணங்களை தயாரித்து தமீம் அன்சாரி என்பவர் மோசடி செய்தது உறுதியானது. 6 கோடி ரூபாய் மதிப்பிலான நிலத்தை விற்க முயன்ற தமீம் அன்சாரியை கைது செய்த போலீசார் அவரை சிறையில் அடைத்தனர்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

392 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

180 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

51 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

43 views

பிற செய்திகள்

தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதா

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதாவின் பிறந்த நாளான இன்று அவரது 35 ஆண்டு கால அரசியல் பயணத்தை திரும்பிப் பார்க்கலாம்...

33 views

தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2021

தமிழக இடைக்கால பட்ஜெட் தாக்கல் 2021

111 views

கலைமாமணி விருதுகள் தொடர்பான வழக்கு - தமிழக கலை -கலாச்சாரத்துறைக்கு நோட்டீஸ்

கலைமாமணி விருதுகள் நடப்பாண்டு அவசர அவசரமாக பரிந்து செய்யப்பட்டு வழங்கப்பட்டு உள்ளதாக தொடரப்பட்ட வழக்கில், தமிழக கலை கலாச்சாரத் துறை இயக்குநருக்கு நோட்டீஸ் அனுப்ப உயர்நீதிமன்ற மதுரைக் கிளை உத்தரவிட்டுள்ளது.

25 views

சாட்டிங் செயலி மூலம் பெண்ணுடன் பழக்கம் - தாலியுடன் வந்த இளைஞர் தற்கொலை

திருவண்ணாமலை அருகே சாட்டிங் செயலிமூலம் அறிமுகமாகி, திருமணமான பெண்ணை காதலித்த இளைஞர், மர்மமான முறையில் உயிரிழந்து இருப்பது அதிர்ச்சியை ஏற்படுத்தி உள்ளது.

553 views

யானைகளை பராமரிக்க புதிய கொள்கைகள் - உயர்நீதிமன்றம் உத்தரவு

தமிழகத்தில் தனியார் மற்றும் கோவில்களில் வளர்க்கப்படும் யானைகளை பராமரிக்க, புதிய கொள்கைகளை வகுக்குமாறு, அரசுக்கு, சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டு உள்ளது.

35 views

தமிழக அரசின் கடன் சுமை ரூ.5.70 லட்சம் கோடியாக இருக்கும் என இடைக்கால பட்ஜெட்டில் தெரிவிக்கப்பட்டுள்ளது.

தமிழக அரசின் இடைக்கால பட்ஜெட்டை தாக்கல் செய்த பேசிய துணை முதல்வரும், நிதியமைச்சருமான ஓ. பன்னீர் செல்வம், நடப்பு நிதியாண்டில் அதிகரித்துள்ள நிதி பற்றாக்குறையை தவிர்க்க இயலாது என்றார்.

88 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.