அப்பவே அப்படி... நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்கள்
பதிவு : பிப்ரவரி 17, 2021, 01:53 PM
தமிழக முதலமைச்சர்களில் நீண்ட நாள் பதவியில் இருந்தவர், குறைவான நாள் பதவியில் இருந்தவர் யார் யார் என இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.
அப்பவே அப்படி... நீண்ட காலம் பதவி வகித்த முதல்வர்கள் 

தமிழக முதலமைச்சர்களில் நீண்ட நாள் பதவியில் இருந்தவர், குறைவான நாள் பதவியில் இருந்தவர் யார் யார் என இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

சட்டப்பேரவை தேர்தல் என்றாலே எல்லோரின் மனதிலும் எழும் கேள்வி, முதல்வர் யார் என்பதுதான். ஒவ்வொரு அரசியல்  கட்சி தலைவர்களின் தீவிர பிரசாரத்தின் இலக்கும் கூட புனித ஜார்ஜ் கோட்டையை பிடித்து ஆட்சி அதிகாரத்தை கைப்பற்றுவது தான்.இந்தியாவிலேயே மிக நீண்ட பாரம்பரியம் கொண்ட தமிழகத்தில் மிக அதிக காலம் முதல்வர் பதவியில் இருந்தவர் யார் தெரியுமா? மறைந்த திமுக தலைவர் கருணாநிதி தான்.1969ம் ஆண்டில் தனது 45ஆவது வயதில் முதல்வரான அவர், அதன்பிறகு 1971, 1989, 1996, 2006 பேரவை தேர்தல்களில் வென்று ஐந்து முறை முதலமைச்சராகி இருக்கிறார். அப்படி முதல்வராக அவர் பதவி வகித்த மொத்த காலம் 19 ஆண்டுகள். கருணாநிதி கடைசியாக முதல்வர் பதவியில் இருந்தபோது, அவரது வயது 87. தமிழகத்தின் மிக வயதான முதல்வர் அவர் தான். இரண்டாவது இளம் வயது முதல்வரும் கருணாநிதி தான்.கருணாநிதிக்கு அடுத்தபடியாக தமிழகத்தின் முதல்வராக நீண்ட காலம் பதவி வகித்தவர் ஜெயலலிதா. 1991ல் பதவியேற்றபோது அவரது வயது 43. தமிழகத்தின் மிக இளம் வயது முதல்வர் ஜெயலலிதாதான். அதன்பிறகு 2001, 2011, 2016 என நான்கு சட்டப்பேரவை தேர்தல்களில் வெற்றி பெற்றாலும் அவர் பதவியில் இருந்தது 14 ஆண்டுகள் தான். வழக்கு, சிறை, மரணம் போன்ற காரணங்களால் அவரது பதவி காலம் சுருங்கியது. தமிழகத்தில் அதிக காலம் முதல்வராக இருந்தவர்களில் மூன்றாம் இடத்தில் இருப்பவர், எம்ஜிஆர். 1977, 1980, 1984 என தொடர்ந்து மூன்று தேர்தல்களில் வென்ற போதிலும் ஆட்சி கலைப்பு, உடல்நல குறைவு, மரணம் போன்ற பிரச்சினைகளால் 10 ஆண்டுகள் மட்டுமே முதல்வராக இருந்திருக்கிறார்.எம்ஜிஆருக்கு முன், அவரைப் போலவே, தொடர்ச்சியாக நீண்ட காலம் முதல்வராக இருந்தவர் காமராஜர். 1954ம் ஆண்டு ஏப்ரல் 13ம் தேதி பதவியேற்ற அவர், 1963ம் ஆண்டு காந்தி பிறந்த தினமான அக்டோபர் 2ம் தேதி வரை தொடர்ந்து ஒன்பதரை ஆண்டு காலம் முதல்வராக இருந்தார். அந்த நாள்தான் பின்னாளில் அவரது மறைவு தினமாகவும் அமைந்தது தான் சோகம்.தமிழக அரசியலின் இந்த நான்கு ஜாம்பவான்களுக்கு அடுத்தபடியாக ஐந்தாவது இடத்தை பிடித்திருப்பவர் யார் தெரியுமா? தற்போதைய முதல்வர் எடப்பாடி பழனிச்சாமி தான். 2017ம் ஆண்டு பிப்ரவரியில் பதவியேற்ற அவர் நான்கு ஆண்டுகளைக் கடந்து இதுவரையிலும் சுமார் 1500 நாட்கள் பதவியில் இருக்கிறார்.இவர்கள் ஐவரைத் தவிர பக்தவத்சலம், ராஜாஜி, ஓமந்தூர் ராமசாமி ரெட்டியார் போன்ற முதல்வர்களின் பதவி காலம் எல்லாம் நான்கு ஆண்டுகளுக்குள் தான் அமைந்தன.அதே நேரத்தில், சுதந்திரத்துக்கு முன், மிக நீண்ட காலம் ஒருவர் முதல்வராக இருந்திருக்கிறார். அவர், வேறு யாருமல்ல...  திராவிட இயக்கங்களின் தாய் கட்சியான நீதிக் கட்சியை சேர்ந்த பனகல் ராஜா. 1921ம் ஆண்டு ஜூலை முதல் 1926 டிசம்பர் வரை தொடர்ந்து ஐந்தரை ஆண்டு காலம் அவர் முதல்வராக இருந்திருக்கிறார்.சரி... தமிழகத்தில் மிக மிக குறுகிய காலம் முதல்வராக இருந்தவர் யார் தெரியுமா? அவர் தான் எம்ஜிஆரின் மனைவி ஜானகி அம்மாள். 1988ம் ஆண்டு ஜனவரியில் வெறும் 23 நாட்கள் மட்டுமே அவர் முதல்வராக இருந்தார். அவர்தான் தமிழகத்தின் முதலாவது பெண் முதல்வர் ஆவார்.தமிழக அரசியல் வரலாற்றை புரட்டினால் இன்னும் பல ருசிகர தகவல்கள் இருக்கின்றன. அடுத்தடுத்த நாட்களில் 'அப்பவே அப்படி' தொகுப்பில் அவற்றையும் பார்ப்போம்..


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

379 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

164 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

45 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

23 views

பிற செய்திகள்

ராஜினாமா செய்த எம்.எல்.ஏ தற்காலிக நீக்கம் - திமுக பொதுச்செயலாளர் துரைமுருகன் அறிவிப்பு

பதவியை ராஜினாமா செய்த, புதுச்சேரி முன்னாள் திமுக எம்.எல்.ஏ வெங்கடேசன், கட்சியில் இருந்து தற்காலிகமாக நீக்கம் செய்யப்பட்டுள்ளார்.

112 views

"பெட்ரோல் - டீசல் விலை உயர்வு : முதலமைச்சர் தான் காரணம்" - திமுக தலைவர் ஸ்டாலின் குற்றச்சாட்டு

பெட்ரோல், டீசல் விலை உயர்வுக்கு, முதலமைச்சர் பழனிசாமி தான் காரணம் என திமுக தலைவர் ஸ்டாலின் குற்றம்சாட்டி உள்ளார்.

18 views

இரண்டு கட்சிகள் துவக்கிய திரை நட்சத்திரம்...அப்பவே அப்படி

தமிழகத்தில் நடிகர்கள் பலர் தனிக்கட்சிகளை துவங்கி உள்ளனர்.

189 views

மேலும் ஒரு காங்கிரஸ் எம்.எல்.ஏ ராஜினாமா... பெரும்பான்மையை நிரூபிப்பாரா நாராயணசாமி?

புதுச்சேரி காங்கிரஸ் சட்டமன்ற உறுப்பினர் லட்சுமி நாராயணன், தனது பதவியை ராஜினாமா செய்தார்.

111 views

தி.மு.க பிரசாரப்பாடல் அறிமுக நிகழ்ச்சி... திமுக பொருளாளர் டி.ஆர்.பாலு வெளியிட்டார்

"ஸ்டாலின் தான் வராரு விடியல்தர போராரு" என்ற பாடலை, சட்டப்பேரவை தேர்தலுக்காக தி.மு.க. உருவாக்கியுள்ளது.

155 views

பிப்.24 - ஜெயலலிதா 73- வது பிறந்தநாள்...அதிமுக தலைமைக்கழகம் அறிவிப்பு...

மறைந்த முதலமைச்சர் ஜெயலலிதா, 73 வது பிறந்தநாளை முன்னிட்டு வருகிற 24 ஆம் தேதி, அதிமுக தலைமை அலுவலகத்தில் உள்ள அவரது உருவ சிலைக்கு மாலை அணிவிக்கப்படும் என அதிமுக தலைமைக்கழகம், அறிவித்துள்ளது.

60 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.