ஆர்.எஸ்.பாரதி மீதான வழக்கிற்குத் தடை
பதிவு : பிப்ரவரி 15, 2021, 03:31 PM
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
திமுக அமைப்புச் செயலாளர் ஆர்.எஸ்.பாரதிக்கு எதிரான வன்கொடுமை தடைச் சட்ட  வழக்கு விசாரணைக்குத் தடை விதித்து சென்னை உயர்நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.கடந்த ஆண்டு பிப்ரவரி மாதம், கருத்தரங்கு ஒன்றில் பட்டியல் இனத்தவர் குறித்து கருத்துத் தெரிவித்ததாகக் கூறி ஆர்.எஸ். பாரதி மீது, ஆதி தமிழர் மக்கள் கட்சி சார்பில்  அளிக்கப்பட்ட புகாரின் பேரில், அவர் மீது வன்கொடுமை தடுப்புச் சட்டத்தின் கீழ் வழக்குப்பதிவு செய்யப்பட்டது.இந்த வழக்கு மத்திய குற்றப்பிரிவுக்கு மாற்றப்பட்டதை அடுத்து, கடந்த ஆண்டு மே மாதம் ஆர்.எஸ். பாரதி கைது செய்யப்பட்டு, பின் ஜாமீனில் விடுதலை ஆனார்.சென்னையில் உள்ள எம்.பி - எம்.எல்.ஏ க்கள் மீதான வழக்குகளை விசாரிக்கும் சிறப்பு நீதிமன்றத்தில், இந்த வழக்கு நிலுவையில் உள்ளது.சென்னை உயர் நீதிமன்றத்தில், ஆர்.எஸ்.பாரதி தரப்பில் இந்த வழக்கு விசாரணைக்குத் தடை கோரப்பட்டிருந்தது.முதல்வர் மற்றும் அமைச்சர்களுக்கு எதிராக தொடர்ந்து புகார் அளித்து வருவதால் பழி வாங்கும் நோக்குடன் வழக்குத் தொடரப்பட்டுள்ளதாக அந்த மனுவில் குறிப்பிடப்பட்டிருந்தது.அரசியல் உள்நோக்கம் இருப்பதால் இந்த வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதிக்கக் கோரி ஆர்.எஸ்.பாரதி தரப்பில் கேட்கப்பட்டது.இந்த மனுவை விசாரித்த நீதிபதி சதீஷ் குமார், வழக்கு விசாரணைக்கு இடைக்காலத் தடை விதித்து உத்தரவிட்டுள்ளார்.இந்த மனுவுக்கு பதிலளிக்கும்படி, மத்திய குற்றப்பிரிவு போலீசாருக்கு உத்தரவிடப்பட்ட நிலையில், நீதிபதி இந்த வழக்கு விசாரணையை பிப்ரவரி 25ம் தேதிக்குத் தள்ளி வைத்துள்ளார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

கொல்கத்தாவில் பிரதமர் மோடி பிரசாரம்

மேற்கு வங்க மக்களின் நம்பிக்கையை மம்தா பானர்ஜி சிதைத்து விட்டார் என ​பிரதமர் நரேந்திர மோடி, குற்றஞ்சாட்டியுள்ளார்.

22 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி காலங்கள்...

புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.

95 views

பாஜக - அதிமுக - பாமக கூட்டணி தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் - அமித்ஷா

தமிழகத்தில் அ.தி.மு.க., பா.ஜ.க., பா.ம.க. கூட்டணி ஆட்சி அமையும் என உள்துறை அமைச்சர் அமித்ஷா நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

93 views

திமுகவின் பிரம்மாண்ட பிரசார பொதுகூட்டத்தை தொடங்கி வைத்தார் ஸ்டாலின்

தேர்தல் களம் சூடுபிடித்துள்ள நிலையில், திருச்சியில் திமுக சார்பில் பிரம்மாண்ட பொதுக்கூட்டம் நடைபெற்று வருகிறது.

72 views

"தேர்தலில் யாருக்கும் ஆதரவு இல்லை" - ரஜினி திட்டவட்டமாக இருப்பதாக தகவல்

அரசியல் கட்சி தொடங்குவதில் இருந்து பின்வாங்கிய நடிகர் ரஜினி, வரும் சட்டமன்ற தேர்தலில் யாருக்கு ஆதரவு அளிப்பார் என்று எதிர்பார்ப்பு எழுந்துள்ளது.

36 views

ஜெயலலிதா போன்று சாதிப்பாரா...? கேரளாவின் "கேப்டன்" பினராயி விஜயன்

கேரளாவில் பினராயி விஜயன் ஜெயலலிதா போன்று 2-வது முறையாக ஆட்சியை கைப்பற்றி சாதிப்பாரா? பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

45 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.