காதலர் தினத்தை கலாய்க்கும் மீம்ஸ்கள் : மீம்ஸ்களில் எதிரொலிக்கும் 90's கிட்ஸ் புலம்பல்... காதலின்றி சிக்கித் தவிக்கும் சிங்கிள்கள்
பதிவு : பிப்ரவரி 14, 2021, 04:19 PM
காதலர் தினத்தை, உற்சாகமாக ஒரு தரப்பினர், இன்று கொண்டாடிவரும் நிலையில், மற்றொரு தரப்பினர் திண்டாடி வருகின்றனர். யார் அவர்கள்?... பார்க்கலாம் இந்த தொகுப்பில்...
காதலர் தினத்தை, உற்சாகமாக ஒரு தரப்பினர், இன்று கொண்டாடிவரும் நிலையில், மற்றொரு தரப்பினர் திண்டாடி வருகின்றனர். யார் அவர்கள்?... பார்க்கலாம் இந்த தொகுப்பில்... 

பிப்ரவரி மாதத்துக்கு பெருமை சேர்ப்பது காதலர் தினம்... 
வழக்கம்போல், காதலர்களுக்கு கொண்டாட்டம் தரும் காதலர் தினம் சிங்கிள்ஸ்களுக்கு திண்டாத்தை தந்துள்ளது...ஒருபுறம், காதல் மழையில் நனைந்து மகிழ்கிறார்கள், காதல் ஜோடிகள்.... மறுபுறம், வெறுமையின் தகிப்பில் வெந்து புலம்பிக் கொண்டுள்ளார்கள் சிங்கிள்ஸ்கள்...அதுவும் குறிப்பாக, தங்களின் அவலத்தை விவரிக்க வார்த்தைகளே இல்லை என்பது 90's கிட்ஸ்களின் புலம்பல். 80's-சில் பிறந்தவர்கள், கல்யாணம் முடிந்து, குழந்தைகளோடு, குதூகலமாக வாழும் நிலையில்... 2k- வில் பிறந்தவர்களோ, குழந்தைகளுக்குப் பின்னரே கல்யாணம் என்ற பேச்சுக்கே வருவதாக விமர்சனத்தை உருவாக்கியுள்ளது தற்கால சூழல்.ஆனால், இவர்களுக்கு இடைப்பட்ட காலத்தில் பிறந்த, தங்களுக்கு கல்யாணமும் அமையவில்லை.... காதலும் கைகூடவில்லை என்பது 90s கிட்ஸ்களின் புலம்பல்... அவர்கள் கண்ணீர்விடாத குறைதான்.... காதலுக்கு மரியாதை, அலைபாயுதே, மின்னலே உள்ளிட்ட காதல் படங்களை, சலிக்காமல் பார்த்து வளர்ந்தவர்கள் 90's கிட்ஸ்கள்... ஆனால், அவர்களில் பலருக்கு, காதல் என்பது எட்டாக்கனியாகவே ஏமாற்றுகிறது.... தங்களின் காதல் கனவு, கடைசிவரை கனவாகவே போய்விடுமோ, என்பதே பெரும்பாலான 90's கிட்ஸ்களின் ஏகோபித்த கவலை...பள்ளிக் காதல், கல்லூரிக் காதல், அலுவலகக் காதல் என பலதரப்பட்ட தளங்களில் காதலிக்க 90's கிட்ஸ்கள் ஆசைப்பட்டிருக்கிறார்கள். காதலை வெளிப்படுத்தவும் முற்பட்டிருக்கிறார்கள். ஆனால், அவர்களின் காதல் முயற்சி, பெரும்பாலும் தோல்வியையே தழுவுகிறது என்பது அவர்களின் பொதுவான வாதம் எதிர்வீட்டுப் பையன், பக்கத்து வீட்டுப் பையன், டியூசன் செல்லும் சிறுவன் உள்ளிட்டோரை காதல் தூதுவராகப் பயன்படுத்தி, தோல்வி அடைந்தவர்கள் 90's கிட்ஸ்கள் என்பது பொதுவாக முன்வைக்கப்படும் கிண்டல்...கடைசி வரை ஒருதலைபட்சமாக காதலித்து பரிதவித்த 90's கிட்ஸ்களே ஏராளம் என சொல்லப்படுவதும் உண்டு... காதலுக்கும் 90's கிட்ஸ்களுக்கும் ஏணி வைத்தாலும் எட்டாது என்பது வரலாறாகிவரும் நிலையில், காதல்தான் வரவில்லை... சரி... மீம்ஸ்தான் வருகிறதே என்று, தங்கள் மீது எய்யப்படாத காதல் அம்புகளுக்கு, மீம்ஸ்களை கேடயமாக்கி தற்காத்துக் கொள்கின்றனர்.இந்த ஆண்டும், கலகலப்பான மீம்ஸ்கள் மூலம், தங்களை காதலர் தினத்தில் ஆசுவாசப்படுத்தி வருகின்றனர் 90's கிட்ஸ்....காதலர் தினத்தை பகடி செய்தும், காதல் கைகூடவில்லையே என்று ஆதங்கப்பட்டும், சமூக வலைதளங்களில், மீம்ஸ் மழை பொழிந்து வரும் 90's கிட்ஸ்களுக்கு, அடுத்தடுத்த ஆண்டுகளிலாவது காதல் கைகூடுமா?... காலம்தான் பதில் சொல்ல வேண்டும்.....

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

338 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

305 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

73 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

53 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

13 views

பிற செய்திகள்

காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்?

காதலின் சின்னமாக ரோஜாப் பூக்கள் விளங்குவது ஏன்? விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

19 views

பட்டாசு ஆலை வெடி விபத்தால் தாய், தந்தையை பறிகொடுத்த 12 வயது சிறுமி....அரசு உதவிக்கரம் நீட்ட வலுக்கும் கோரிக்கை

சாத்தூர் அருகே நடந்த வெடிவிபத்தில் தாய், தந்தையை இழந்து 12 வயது சிறுமி நிர்கதியாகி இருக்கிறார்.

96 views

பட்டாசு ஆலை வெடி விபத்து-19பேர் பலி...மருத்துவமனைக்கு படையெடுக்கும் உறவினர்கள்

பட்டாசு ஆலை வெடி விபத்தில் உயிரிழந்த தொழிலாளர்களின் உடல்களுக்கு சிவகாசி அரசு மருத்துவமனையில் பிரேத பரிசோதனை நடைபெற்று வரும் நிலையில் அங்கு போலீசார் குவிக்கப்பட்டுள்ளனர்.

99 views

1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி

1100 சேவை எண் துவக்கி வைப்பு... பொதுமக்கள் எளிதில் உதவி பெற வசதி அதனை தொடர்ந்து, பொதுமக்கள் வீட்டிலிருந்தபடியே அரசின் உதவியைப் பெறுவதற்கான 1100 என்ற சேவை எண்ணை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி துவக்கி வைத்தார்.

75 views

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தியவர்கள்... 2வது தவணை செலுத்திக் கொள்ள வேண்டும்

முதல் தவணை கொரோனா தடுப்பூசி செலுத்தி கொண்டு 28 நாட்கள் முடிந்தவர்கள், தவறாமல் இரண்டாம் தவணை தடுப்பூசி செலுத்தி கொள்ள வேண்டும் என சுகாதாரத்துறை செயலர் ராதாகிருஷ்ணன் அறிவுறுத்தி உள்ளார்.

26 views

3 பேரை கொன்ற யானை 'சங்கர்' பிடிபட்டது - கும்கி யானைகளின் உதவியுடன் நடவடிக்கை

நீலகிரி மாவட்டம் பந்தலூரில் மூன்று பேரை கொன்ற காட்டு யானை சங்கரை மயக்க மருந்து செலுத்தி வனத்துறையினர் பிடித்துள்ளனர்.

63 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.