இன்று உலக வானொலி தினம் : பொழுதுபோக்கு தளங்களில் சிறப்பிடம்... தலைமுறை தாண்டி கவனம் பெறும் வானொலி
பதிவு : பிப்ரவரி 13, 2021, 04:01 PM
இன்று உலக வானொலி தினம். பொழுதுபோக்குத் தளங்கள் பல முளைத்தாலும், ஆண்டாண்டு காலமாய் நிலைத்து நிற்கும் வானொலி பற்றிய சிறப்பு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...
இன்று உலக வானொலி தினம். பொழுதுபோக்குத் தளங்கள் பல முளைத்தாலும், ஆண்டாண்டு காலமாய் நிலைத்து நிற்கும் வானொலி பற்றிய சிறப்பு தொகுப்பு உங்கள் பார்வைக்கு...

வானொலியை கண்டுபிடித்தவர் யார் தெரியுமா? என இந்த  தொகுப்பை ஆரம்பித்தால், "ஒன்னாம் வகுப்பு படிக்குற என் புள்ளைக்கே தெரியும்" என வீட்டிலிருந்தே சந்தானம் ஸ்டைல்  கவுன்ட்டர் கொடுப்பீர்கள் என்பதால், நேராக விஷயத்திற்கு வருவோம். எஸ்... இன்று வானொலி தினம். வானொலிக்கு வயது 100ஐ தாண்டினாலும், இன்றும் பொழுதுபோக்கு தளங்களில் முக்கிய பங்கு வகிக்கிறது, வானொலி.எப்படி இப்படி? என அட போடுவதற்குள் அதற்கான காரணத்தையும் சொல்லிவிடுகிறோம். காலத்திற்கு ஏற்றாற்போல தன்னை புதுப்பித்து கொண்டே இருப்பது ஒரு முக்கிய காரணமென்றாலும், இணைய வசதியில்லா கடைக்கோடியையும் இணைக்கும் சக்தி வானொலிக்கு உண்டு. பேரிடர்காலங்களிலும், மின்வசதியில்லா சூழலிலும், வானொலி ஆற்றிய, ஆற்றும் பணிகள் பெரிது. இந்த கொரோனா ஊரடங்கு காலம் உட்பட. பண்பலைகளின் வரவு, இந்த டிஜிட்டல் யுகத்திலும் வானொலிக்கு ஒரு நிரந்தர இடத்தை உறுதி செய்துவிட்டது என்பதே நிதர்சனம்."ஆகாஷ்வாணி செய்திகள் வாசிப்பது சரோஜ் நாராயணசாமி" என்ற குரல் எப்படி 70ஸ், 80ஸ் கிட்ஸை மயக்கியதோ, இன்று செய்திகளைத் தாண்டி, இசை, நாடகம் என்று சர்வத்தையும் ஒலிபரப்பு செய்யும் பண்பலைகளுடன் மக்களை இணைக்கின்றன பல இனிக்கும் குரல்கள், அதாங்க... நம்ம ரேடியோஜாக்கிஸ்.சமையல், சினிமா, கடிஜோக்குகள், அரசியல், காதல் அட்வைஸ், கிசுகிசு என சர்வத்திலும் சிக்ஸர் அடித்து நேயர்களை ரேடியோவோடு கட்டிபோடுவதில் இவர்களின் பங்கும் அளப்பரியது.வீட்டில் வேலை செய்துகொண்டே, வண்டி ஓட்டிக்கொண்டே, தேநீர் கடைகளில் சூடாக டீ அடித்துக்கொண்டே என, வானொலிக்கென பிரத்யேக பந்தம் வளர்த்துக்கொண்ட விசிறிகள் இன்னும் இருக்கத்தான் செய்கிறார்கள். இந்த பந்தம் தான் வானொலியை இன்றும் உயிர்ப்புடன் வைத்திருக்கிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

87 views

பனியைப் பார்த்து பரவசமடைந்த யானைக்குட்டி- தரையில் உருண்டு, புரண்டு உற்சாகம்

அமெரிக்காவின் அரிசோனா மாகாணத்தின் டுக்சன் நகரில் உள்ள வனவிலங்கு பூங்காவில் பராமரிக்கப்படும் யானைக்குட்டி, பனியில் உற்சாகமாக விளையாடி உள்ளது.

37 views

பிற செய்திகள்

பூதாகராமாக வெடிக்கும் அரண்மனை விவகாரம்... 25 ஆண்டுகளுக்கு பிறகு மீண்டும் சர்ச்சை

அமெரிக்க தொலைக்காட்சி ஒன்றில் இளவரசர் ஹாரி மற்றும் மேகன் தம்பதியர் பங்கேற்ற நேர்காணல் தற்போது பூதாகரமாக வெடித்துள்ளது.

21 views

வெடித்து சிதறும் சினாபங் எரிமலை - 5 கி.மீ உயரத்திற்கு எழும்பிய சாம்பல் துகள்

இந்தோனேசியாவில் 400 ஆண்டுகள் பழமையான சினாபங் எரிமலை கடந்த சில தினங்களாக வெடிக்கும் தருவாயில் இருந்தது.

10 views

உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயம் - சிட்னி உயிரியல் பூங்காவில் உருவாக்கம்

உலகின் முதல் பிளாட்டிபஸ் சரணாலயத்தை ஆஸ்திரேலியா உருவாக்கி வருகிறது.

11 views

ஈஸ்டர் தின தாக்குதல் சம்பவம் - இலங்கையில் கறுப்பு ஞாயிறு தினம் அனுசரிப்பு

கறுப்பு ஞாயிறு தினத்தை அடையாளப்படுத்தும் வகையில் கொழும்பு கொச்சிக்கடை தேவாலயத்தில் ஆர்ப்பாட்டம் நடைபெற்றது.

20 views

"இலங்கைக்கு எதிராக ஐ.நாவில் தீர்மானம்" - இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை

ஈழப்போர் தொடர்பாக இலங்கைக்கு எதிராக மனித உரிமை பேரவையில் தீர்மானம் கொண்டு வரப்பட்டால், அதற்கு இந்தியா எதிராக வாக்களிக்கும் என இலங்கை அமைச்சர் சரத் வீரசேகர நம்பிக்கை தெரிவித்துள்ளார்.

13 views

யானைகள் Vs அவகோடா பழம் - அவகோடாவால் சிக்கலில் ஆப்பிரிக்க யானைகள்

விவசாய நிலத்திற்குள் புகுந்து யானைகள் அட்டகாசம் என்ற நிலை மாறி, கென்யாவில் யானைகளின் இருப்பிடத்தில் விவசாய நிலம் அமைக்கப்படுவது சிக்கலை மேலும் அதிகரித்துள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.