வேளாண் சட்டத்தை திரும்ப பெற வேண்டும் - ராகுல் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு
பதிவு : பிப்ரவரி 12, 2021, 01:24 PM
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், நாட்டில் பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, தற்கொலைக்கே வழிவகுக்கும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.
மத்திய அரசின் வேளாண் சட்டங்கள், நாட்டில் பஞ்சம், வேலைவாய்ப்பின்மை, தற்கொலைக்கே வழிவகுக்கும் என மக்களவையில் காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி கடுமையாக விமர்சித்துள்ளார்.

மத்திய பட்ஜெட் மீது மக்களவையில் விவாதம் நடைபெற்றது. இதில் கலந்து கொண்டு பேசிய காங்கிரஸ் எம்.பி. ராகுல் காந்தி வேளாண் சட்டங்களை கடுமையாக எதிர்த்ததுடன், மத்திய அரசையும் கடுமையாக விமர்சித்தார்.வேளாண் சட்டங்கள் மூலம் விவசாயிகளின் வாழ்வாதாரம் பாதிக்கப்படும் எனக்கூறிய ராகுல் காந்தி,3 வேளாண் சட்டங்களும் உணவு தானிய பதுக்கலுக்கே வழிவகுக்கும் என்றும்,இதன் மூலம் நாட்டில் பஞ்சம், வேலை வாய்ப்பின்மை, தற்கொலை உருவாகும் வாய்ப்பு ஏற்படும் எனவும் குறிப்பிட்டார்.நாம் இருவர், நமக்கு இருவர் என்ற கொள்கையின் அடிப்படையிலேயே மத்திய அரசு செயல்படுவதாக சாடிய ராகுல் காந்தி,இந்த சட்டங்கள் மூலம், விவசாயிகள் தங்கள் விளை பொருட்களை விற்க தொழிலதிபரை அணுக வேண்டிய சூழல் வரும் என குறிப்பிட்டார். பிரதமர் மோடியின் 4 நண்பர்களுக்காகவே வேளாண்  சட்டங்கள் இயற்றப்பட்டுள்ளதாக விமர்சித்த ராகுல் காந்தி, பெரு முதலாளிகளுக்காகவே பணமதிப்பிழப்பு மற்றும் ஜிஎஸ்டியை பிரதமர் கொண்டு வந்ததாக குற்றம்சாட்டினார்.வேளாண் சட்டங்களுக்கு எதிர்ப்பு தெரிவித்து போராடும் விவசாயிகள், ஒரு இன்ச் கூட பின்வாங்க மாட்டார்கள் எனக்கூறிய ராகுல் காந்தி, இந்த போராட்டம் நாட்டுக்கான போராட்டம் என்று குறிப்பிட்டார்.ராகுல் காந்தியின் பேச்சுக்கு பாஜக எம்.பி.க்கள் எதிர்ப்பு தெரிவித்த நிலையில், மக்களவையில் கடும் அமளி நிலவியது...அமளியை தொடர்ந்து பேசிய ராகுல் காந்தி, வேளாண் சட்டங்களை மத்திய அரசு திரும்ப பெற வேண்டும் என கூறினார்...


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

421 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

223 views

சாதனை மனிதர் 'ஜெப் பெசோஸ்'... கடந்துவந்த பாதை

அமேசான் நிறுவனத்தின் தலைமை செயல் அதிகாரி பொறுப்பிலிருந்து விலகுவதாக அறிவித்திருக்கும் ஜெப் பெசோஸ் கடந்துவந்த பாதையை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்.

100 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

73 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

38 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

199 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

35 views

"பிரசாரத்துக்கு அழைப்பார்கள் என நம்புகிறேன்"-நடிகர் எஸ்.வி. சேகர் பேச்சு

அதிமுக-பாஜக கூட்டணி தன்னை தேர்தல் பிரசாரத்துக்கு அழைக்கும் என்ற நம்பிக்கை உள்ளதாக நடிகர் எஸ்.வி. சேகர் தெரிவித்து உள்ளார்.

46 views

ம.நீ.மவிற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு - தேர்தலில் சீட் வழங்குமாறு கோரிக்கை

தேர்தலில் மக்கள் நீதி மய்யத்திற்கு பல்வேறு சிறிய கட்சிகள் ஆதரவு தெரிவித்துள்ளன.

95 views

"இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்தமே" - பாமக நிறுவனர் ராமதாஸ் மகிழ்ச்சி

10.5 சதவீத இடஒதுக்கீடு அரசிதழில் வெளியிடப்பட்டதால், இனி வன்னியர்கள் வாழ்வில் வசந்த காலமே என பாமக நிறூவனர் ராமதாஸ் மகிழ்ச்சி தெரிவித்துள்ளார்

28 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.