பணப்பட்டுவாடாவை தடுக்க தீவிர நடவடிக்கை - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா
பதிவு : பிப்ரவரி 11, 2021, 05:56 PM
நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்
நடக்க உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது பண விநியோகம் மற்றும் பரிசுப் பொருள் விநியோகத்தை தடுக்க கடும் நடவடிக்கை எடுக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்தார்.தமிழக சட்டப்பேரவை தேர்தல் முன்னேற்பாடுகள் குறித்த ஆய்வுக்கு பிறகு செய்தியாளர்களிடம் பேசிய தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா, தேர்தல் விதிமீறல்கள், பண விநியோகம் உள்ளிட்டவை தமிழகத்தில் அதிகளவில் நடந்ததாகவும்,இதன் காரணமாகவே ஆர்.கே.நகர் தொகுதி இடைத் தேர்தல் 2 முறை ரத்து செய்யப்பட்டதாகவும் கூறினார்.மேலும் வேலூர் தொகுதியில் நாடாளுமன்ற தேர்தல் ரத்து செய்யப்பட்டதற்கும் காரணம் இதுவே என்றார்.நடைபெற உள்ள சட்டப்பேரவை தேர்தலின் போது விதிமீறல் தொடர்பான விபரங்கள் 24 மணி நேரத்திற்குள் இணையதளத்தில் பதிவேற்றம் செய்யப்படும் என்றும்,அந்த புகாரின் மீது எடுக்கப்பட்ட நடவடிக்கைகள் குறித்து முறையாக தமிழக தலைமை தேர்தல் ஆணையர் கண்காணித்து உரிய நடவடிக்கை எடுப்பார் என்றார்.பண விநியோகம் மற்றும் பரிசுப்பொருள் விநியோகம் போன்றவற்றை கண்காணிப்பதற்கும், உரிய நடவடிக்கை எடுப்பதற்கும் சிறப்பு பார்வையாளர்கள் 2 பேர் நியமிக்கப்படுவார்கள் என்றும், அவர்களோடு மாவட்ட அளவிலான அதிகாரிகளும் இணைந்து செயல்படுவார்கள் என்றார். 
நேர்மையான, வெளிப்படையான முறையில் தமிழகத்தில் சட்டப்பேரவை தேர்தல் நடத்தப்படும் என்றும் அவர் தெரிவித்தார்.தமிழகத்தில் பணப்பட்டுவாடாவை தடுக்க அனைத்து அரசியல் கட்சிகளும் வலியுறுத்தியதாகவும்,தேர்தல் பார்வையாளர்கள் வேறு மாநிலத்தை சேர்ந்தவர்களாக இருக்க வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டதாகவும் சுனில் அரோரா தெரிவித்தார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

322 views

"முன்னோடி மாநிலம் தமிழகம்" ராகுல் காந்தி புகழாரம்

அனைத்து விஷயத்திலும் இந்தியாவுக்கு முன்னோடியாக தமிழகம் இருப்பதாக காங்கிரஸ் எம்பி ராகுல்காந்தி தெரிவித்துள்ளார்.

289 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

38 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

38 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

10 views

பிற செய்திகள்

வாக்களிக்க கூடுதலாக ஒரு மணி நேரம் - தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா

தமிழக சட்டமன்ற தேர்தலில் வாக்களிப்பதற்காக கூடுதலாக ஒரு மணி நேரம் ஒதுக்கப்படும் என, தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

10 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

54 views

கொஞ்சும் அழகி கோமதி - காலில் கொலுசு, நீளமான முடி என அசத்தும் யானை

தேக்கம்பட்டி யானைகள் புத்துணர்வு முகாமில் உற்சாகமாக வளைய வரும் சங்கரன்கோவில் கோமதி குறித்து இந்த செய்தித் தொகுப்பில் பார்க்கலாம்

28 views

ரூ.90-ஐ கடந்தது பெட்ரோல் விலை

தமிழகத்தில் பெட்ரோல் விலை 90 ரூபாயை கடந்துள்ளது.

98 views

குடிபோதையில் தகராறு செய்த மகனால் ஆத்திரம் - மற்றொரு மகனுடன் சேர்ந்து கொலை செய்யும் தாய்

கடலூர் அருகே குடித்து விட்டு வந்து தகராறு செய்த மகனை தாயும், சகோதரனும் சேர்ந்து அடித்தே கொன்ற சிசிடிவி காட்சிகள் பார்ப்போரை பதற வைக்கிறது.

105 views

வைகோ உள்ளிட்டவர்களின் விடுப்பு கோரிக்கை

மாநிலங்களவை உறுப்பினர்கள் வைகோ உள்ளிட்ட சிலர், உடல் நல காரணங்களால் நடப்பு கூட்டத் தொடரின் முதல் பாகம் முழுவதும் விடுமுறை அளிக்குமாறு கோரிக்கை விடுத்திருந்தனர்.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.