ஒரு அங்குலம் நிலம் கூட விட்டு தர மாட்டோம் -ராஜ்யசபாவில், ராஜ்நாத் சிங் திட்டவட்டம்
பதிவு : பிப்ரவரி 11, 2021, 04:44 PM
ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்கள​வையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார்.
ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்கள​வையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் திட்டவட்டமாக தெரிவித்துள்ளார். 

கிழக்கு லடாக் பகுதியில் நிலவும் எல்லை பிரச்சினை தொடர்பாக மாநிலங்களவையில் பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங், விளக்கம் அளித்துள்ளார்.கிழக்கு லடாக்கில் உள்ள பாங்காங் சோ ஏரி பகுதியில் படைகளை விலக்கிக் கொள்ள இந்தியா, சீனா ஆகிய இருநாடுகளும் சம்மதம் தெரிவித்துள்ளதாக ராஜ்நாத் சிங் கூறினார்.எல்லைப்பகுதியில் அமைதியான சூழல் நிலவ இந்தியா உறுதி பூண்டுள்ளதாக அவர் குறிப்பிட்டார்.எந்தக் கட்சியை  சேர்ந்தவராக இருந்தாலும், தேசப் பாதுகாப்பு என்று வரும் போது ஒட்டு மொத்த தேசமே ஒன்றுபட்டு நிற்கும் என்றும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.இரு நாடுகள் இடையே நிலவி வரும் பிரச்சினைகளுக்கு, பேச்சுவார்த்தை மூலமாக மட்டுமே தீர்வு காணப்படும் என சீனாவிடம் இந்தியா உறுதி அளித்துள்ளதாக அவர் குறிப்பிட்டார்.கடந்தாண்டு லடாக் பகுதியில் சீன அத்துமீற முயன்றபோது சீனாவுக்கு இந்திய வீரர்கள் தக்க பதிலடி கொடுத்ததாக குறிப்பிட்ட மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங்,சீனா அதிக அளவில் படைகளைக் குவித்ததை இந்தியா கடுமையாக எதிர்ப்பதாக தெரிவித்தார்.இந்திய எல்லைப் பகுதியை ஒட்டியுள்ள அனைத்து பகுதிகளிலும் படைகளை விலக்கிக் கொள்ள வேண்டும் என சீனாவிடம் தெரிவித்ததாக ராஜ்நாத் சிங் கூறினார்.எல்லைக் கட்டுப்பாட்டு கோட்டை இரு நாடுகளும் மதிக்க வேண்டும் என்றும், மீண்டும் முந்தைய நிலையே தொடர வேண்டும் என்றும் வலியுறுத்தியதாக அவர் தெரிவித்தார்.ஒரு அங்குலம் நிலத்தை கூட சீனாவிடம் விட்டுக் கொடுக்க மாட்டோம் என மாநிலங்கள​வையில், மத்திய பாதுகாப்புத்துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் குறிப்பிட்டார்
 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

409 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

250 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

103 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

57 views

பிற செய்திகள்

பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

18 views

காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

30 views

புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

31 views

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

55 views

"பெட்ரோல் விலை உயர்வு : தர்மசங்கடமானது" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமான பிரச்னை எனவும், இதுகுறித்து கருத்து கூற முடியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

28 views

வன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை

எல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.