உத்தரகாண்ட் வெள்ளம் : 4 ஆவது நாளாக தொடரும் மீட்பு நடவடிக்கை
பதிவு : பிப்ரவரி 10, 2021, 08:00 PM
மாற்றம் : பிப்ரவரி 10, 2021, 08:51 PM
அள்ள அள்ள வழிந்து வரும் சேறு, சகதிக்கு மத்தியில் 37 பேரை மீட்க உயிரை பணயம் வைத்து போராடி வருகிறது இந்திய ராணுவம்... தபோவான் சுரங்கத்தில் நடப்பது என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்...
அள்ள அள்ள வழிந்து வரும் சேறு, சகதிக்கு மத்தியில் 37 பேரை மீட்க உயிரை பணயம் வைத்து போராடி வருகிறது இந்திய ராணுவம்...  தபோவான் சுரங்கத்தில் நடப்பது என்ன? என்பதை தற்போது பார்க்கலாம்...

உத்தரகாண்ட் மாநிலம் சமோலியில் ஞாயிறு அன்று பனிப்பாறைகள் சரிந்து தாலி கங்கா, அலக்நந்தா ஆறுகளில் திடீரென வெள்ளம் பெருக்கெடுத்தது. பெருவெள்ளத்தில் பாறைகள், கற்கள் அடித்துவரப்பட்டது. இதில் தாலி கங்கா ஆற்றின் குறுக்கே அமைக்கப்பட்ட தபோவான் மற்றும் ரிஷிகங்காவில் நீர் மின்நிலைய அணைகள் அடித்துச் செல்லப்பட்டது.ஆற்றின் ஆக்கோஷத்தில் 5 கிலோ மீட்டர் தொலைவிற்கு அணைகள் இடிபாடுகளாக கிடக்கின்றன.இந்த கோரச் சம்பவத்தில் 32 பேர் உயிரிழப்பு வெள்ளத்தில் சிக்கிய 193 பேர காணவில்லை என்று தெரிவிக்கப்பட்டு உள்ளது.காணாமல் போனவர்களை தேடும் பணிகள் போர்க்கால அடிப்படையில் நடக்கிறது.தபோவான் சுரங்கம் பகுதியில் மொத்த மீட்பு படைகளும் முடுக்கிவிடப்பட்டுள்ளது.நீர்மின் நிலைய அணையில் இருந்து உபரி நீரை வெளியேற்ற 2 சுரங்கங்கள் கட்டும் பணி நடைபெற்று வந்தது.அவற்றில் ஒரு சுரங்கத்தின் பணி சுமார் இரண்டரை கிலோ மீட்டர் தொலைவுக்கு முடிந்துள்ளது. ஞாயிற்று கிழமை இந்த சுரங்கப்பகுதியில் தொழிலாளர்கள் பணியாற்றிய போதுதான் வெள்ளம் நேரிட்டது.குப்பை கூழங்களுடன் சேறும் சகதியுமாக வெள்ளம் சுரங்கத்திற்குள் புகுந்துவிட்டது.சில மணி துளிகளில் இந்த சம்பவம் நடந்ததால், உள்ளிருந்தவர்கள் சுதாரித்துகொண்டு வெளியே ஓடிவர முடியவில்லை... அங்கேயே சிக்கிக்கொண்டனர்.தற்போது சுரங்கத்திற்குள் சுமார் 37 பேர் வரையில் சிக்கியிருக்கலாம் என தெரிவிக்கப்படுகிறது. ஏற்கனவே சுரங்கத்தில் இருந்து சிலர் மீட்கப்பட்ட நிலையில் மற்றவர்களையும் மீட்டுவிடலாம் என அதிதீவிரமாக மீட்பு பணி நடக்கிறது. அள்ள அள்ள வரும் சேறும் சகதிக்கும் மத்தியில் அவர்களுடைய போராட்டம் இரவும் பகலுமாக நடந்து வருகிறது.இந்தோ - திபெத்திய எல்லைப் படையினர், மத்திய, மாநில பேரிடர் படையை சேர்ந்தவர்கள் என சுமார் 1000 வீரர்கள் துளிநேர உறக்கமின்றி சேறுகளை அகற்றி வருகிறார்கள்...ஒரு கட்டத்தில் இந்தோ திபெத்திய படை வீரர்கள் பாதுகாப்பு உபகரணங்கள், பிரகாசிக்கும் லைட்களுடன் சுரங்கத்திற்குள் செல்ல முயன்றனர். அப்போது சுரங்கத்தின் மேற்பகுதி இடிபாடுகள் தண்ணீருக்குள் விழும் சப்தம் கேட்டதால் சுதாரித்து வெளியேறினர். எவ்வளவு தொலைவு சேறு உள்ளது என்பதை கண்டுபிடிக்க முடியாத சூழல் நிலவுவதாக மீட்பு குழுவினர் தெரிவிக்கின்றனர். இடிபாடுகளை அகற்றும் போது உள்ளிருக்கும் நீர் சீற்றத்துடன் வெளியேறினால், மீட்பு பணியில் ஈடுபடுபவர்களுக்கும் ஆபத்து நேரிடும் என்ற எச்சரிக்கையும் நிலவுகிறது.இந்திய விமானப்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர்களும் மீட்பு படை வீரர்களுக்கு தேவையான உபகரணங்களை வழங்கி வருகின்றன.4 நாட்கள் ஆன நிலையில் கடும் குளிர் நிலவும் மலைப்பகுதியில் வீரர்கள் போராடி வருகின்றனர். 37 பேரை மீட்டுவிடலாம் என்ற போராட்டம் வெற்றிபெற வேண்டும் என்பதே அனைவருடைய எதிர்பார்ப்பாக உள்ளது.


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

408 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

244 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

68 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

55 views

பிற செய்திகள்

புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

23 views

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

தமிழகம், புதுச்சேரியில் ஒரே கட்டமாக ஏப்ரல் 6ந் தேதி வாக்குப்பதிவு நடைபெறும் - சுனில் அரோரா

53 views

"பெட்ரோல் விலை உயர்வு : தர்மசங்கடமானது" - நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன்

பெட்ரோல் விலை உயர்வு தர்ம சங்கடமான பிரச்னை எனவும், இதுகுறித்து கருத்து கூற முடியவில்லை என மத்திய நிதி அமைச்சர் நிர்மலா சீதாராமன் தெரிவித்துள்ளார்.

27 views

வன்முறை உறவை பாதிக்கும் - சீனாவுக்கு எச்சரிக்கை

எல்லையில் வன்முறையின் மூலம் அமைதியை சீர்குலைத்தால் இருதரப்பு உறவில் மேலும் பாதிப்பு ஏற்படும் என சீனாவை இந்தியா எச்சரித்துள்ளது.

26 views

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடு..! காரணம் என்ன?

ஒடிடி தளங்களுக்கு அதிரடியாக கட்டுப்பாடுகள் விதிக்கப்பட்டுள்ள நிலையில், அதற்கான காரணம் குறித்து விளக்குகிறது இந்த செய்தி தொகுப்பு...

70 views

சமுதாயத்தில் நிரூபிக்க வேண்டிய நேரம் வந்துவிட்டது - மருத்துவ மாணவர்களிடம் பிரதமர் பேச்சு

இந்திய சுகாதார கட்டமைப்பு புதிய கண்ணோட்டத்துடனும், நம்பகத்தன்மையுடன் விளங்குவதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார்.

149 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.