தேர்தல்களில் கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம்
பதிவு : பிப்ரவரி 09, 2021, 06:20 PM
தமிழக சட்டப்பேரவை தேர்தல்களில் கூட்டணிகளின் ஆதிக்கம் பற்றிய ஒரு செய்தி தொகுப்பு...
தேர்தல் காலம் துவங்கி விட்டால் போதும்... கூட்டணி கட்சிகளின் ஆதிக்கம் கோலாகலமாக துவங்குவது வழக்கம். பெரிய கட்சிகள் செல்வாக்குடன் இருந்தாலும் வெற்றிக்கு அணில் போல உதவுவது கூட்டணி கட்சிகள் தான். தமிழக சட்டமன்ற தேர்தல் களமும் இதற்கு விதிவிலக்கு இல்லை.1967ம் ஆண்டு முதன் முறையாக ஆட்சியை திமுக கைப்பற்றியபோது, ராஜாஜியின் சுதந்திரா கட்சி, மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட், சி.பா.ஆதித்தனாரின் நாம் தமிழர் கட்சி போன்றவை, அதன் கூட்டணியில் இருந்தன.அடுத்தடுத்த ஒவ்வொரு தேர்தலிலும் பிரதான கட்சிகளுடன் பிற கட்சிகள் கூட்டணி சேரும் வழக்கமும் தொடர்ந்து வருகிறது. 1991 வரையிலும் இரண்டு கம்யூனிஸ்டு கட்சிகளும் ஒரே அணியில் பெரும்பாலும் இருந்ததில்லை. எதிர் எதிர் அணிகளில் தான் இருந்தன.கூட்டணிகள் தான் எப்போதுமே வெற்றி தோல்வியை நிர்ணயித்து வருகிறது. அது கூட்டணி அமைத்த அணிக்கு அல்லது எதிர் அணிக்கு கூட சாதகமாக அமைந்து விடும். தமிழக தேர்தல் வரலாறும் இதைத்தான் சொல்கிறது. அப்படி ஒரு தேர்தல் தான், 1996 சட்டப்பேரவை தேர்தல்.1991 முதல் 1996 வரை ஆட்சியில் இருந்த அப்போதைய முதல்வர் ஜெயலலிதா மீது ஏராளமான ஊழல் புகார்கள் கும்மிக் கொண்டிருந்த நேரம் அது. ஆனாலும், அதற்கு முந்தைய தேர்தலை போலவே அதிமுகவுடன் கூட்டணியை தொடருவதாக அறிவித்தது, அப்போதைய பிரதமர் நரசிம்மராவின் டெல்லி காங்கிரஸ்.மேலிடத்தின் அறிவிப்பால், தமிழக காங்கிரஸ் கட்சியினர் கடும் கோபம் அமைந்தனர். அதன் விளைவு... சென்னை சத்தியமூர்த்தி பவனில் மிகப் பெரிய கலவரத்துடன் மூப்பனார் தலைமையில் ப.சிதம்பரம் போன்றவர்களால் உருவானது தமிழ் மாநில காங்கிரஸ் கட்சி.1996ம் ஆண்டு மே முதல் வாரம் சட்டப்பேரவை தேர்தல் என அறிவிக்கப்பட்ட நிலையில், மார்ச் 26ம் தேதி, புதிய கட்சியை ஆரம்பித்தார், மூப்பனார். தேர்தலுக்கு நாற்பது நாளே இருந்த நிலையில், கட்சிக்கு அங்கீகாரம் பெற்றதோடு, சைக்கிள் சின்னத்தையும் பெற்றது, தமாகா. அந்த கையோடு, திமுகவுடன் கைகோர்த்து அந்த தேர்தலை சந்தித்தது தமாகா.சட்டப்பேரவை, நாடாளுமன்றம் என இரண்டுக்கும் சேர்ந்து நடைபெற்ற அந்த தேர்தலில் புதிய கட்சியாக இருந்தாலும் சட்டப்பேரவையில் 40 தொகுதிகளையும் நாடாளுமன்றத்துக்கு 20 தொகுதிகளையும் தமாகாவுக்கு ஒதுக்கியது, திமுக.இந்த கூட்டணிக்கு அமெரிக்காவில் இருந்தபடியே, வீடியோ மூலம் ரஜினி வாய்ஸ் கொடுக்க, அன்று பிரபல நடிகராக இருந்த சரத்குமார், நேரடியாகவே வீதிவீதியாக சென்று பிரசாரத்தில் ஈடுபட்டார். தேர்தலுக்கு ஓராண்டுக்கு முன்புதான் கருணாநிதிக்கு தங்க பேனா அளித்து மறைமுகமாக விஜயகாந்த்தும் தனது ஆதரவை தெரிவித்திருந்தார்.இப்படி திரும்பிய திசையெங்கும் ஆதரவு கரம் நீள, கிட்டத்தட்ட ஒட்டு மொத்த தொகுதிகளையும் அள்ளியது,  திமுக, தமாகா கூட்டணி. முதல்வராக இருந்த ஜெயலலிதாவே பர்கூர்  தொகுதியில் தோல்வியை தழுவினார். இந்த இரண்டு அணிகள் தவிர, தனி அணிகளாக நின்ற மதிமுக, வாழப்பாடி ராமமூர்த்தி தலைமையிலான காங்கிரஸ், பாமக எல்லாம்  கிட்டத்தட்ட காணாமல் போயின.இப்படியாக, 1996ம் ஆண்டு தேர்தல், தமிழக வரலாற்றில் ஒரு பிரளயத்தையே ஏற்படுத்தியது. அதிமுகவுடன் காங்கிரஸ் அமைத்த கூட்டணியானது, எதிரணியான திமுகவின் அமோக வெற்றிக்கு அடிக்கல் நாட்டி வைத்தது. நாற்பதே நாளில் மிகப்பெரிய வெற்றியை தமாகா பெற்றதெல்லாம் யாருமே எதிர்பார்க்காதது, இன்று வரை நம்ப முடியாத அதிசயம்... அற்புதம்....தமிழக சட்டப்பேரவை வரலாற்றில் இதுபோல கூட்டணி  கோலங்கள் நிகழ்த்திய அற்புதங்கள் இன்னும் ஏராளம். அடுத்தடுத்த நாட்களில் அவற்றையும் பார்க்கலாம்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

397 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

198 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

98 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயில் - பொங்கல் வைத்து வழிபட்ட தொண்டர்கள்

ஜெயலலிதா பிறந்த நாளையொட்டி, மதுரையில் ஜெயலலிதாவுக்கு அமைக்கப்பட்ட கோயிலில் தொண்டர்கள் பொங்கல் வைத்து வழிபட்டனர்.

11 views

மயூரநாதசுவாமி கோயில் யானை அபயாம்பிகை... துள்ளித்திரியும் அபயாம்பிகையின் வயது 56

மயிலாடுதுறை மக்களின் நேசத்தை பெற்ற அபயாம்பிகை யானை, இப்போது தேக்கம்பட்டி முகாமில் துறுதுறுப்பாக சுற்றி வருவதை விவரிக்கிறது இந்த செய்தித் தொகுப்பு.

19 views

பள்ளிக் கல்வித்துறை செயலாளர் ஆலோசனை - ஏப்.15க்குள் பாடங்களை முடிக்க அறிவுறுத்தல்

பொது தேர்வை சந்திக்க உள்ள மாணவர்களுக்கான பாட திட்டங்களை ஏப்ரல் 15 ஆம் தேதிக்குள் முடிக்க வேண்டும் என, பள்ளிக் கல்வித்துறை செயலாளர், முதன்மை கல்வி அலுவலர்களுக்கு உத்தரவிட்டுள்ளார்.

30 views

குட்கா சட்டசபைக்கு கொண்டு வந்த விவகாரம் - 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து தீர்ப்பு

சட்டமன்றத்திற்குள் குட்கா கொண்டு வந்த விவகாரத்தில் திமுகவுக்கு எதிரான 2-வது உரிமை மீறல் நோட்டீஸ் ரத்து செய்யப்பட்டது.

21 views

"சசிகலா விடுத்த அழைப்பு அதிமுகவிற்கு பொருந்தாது" - அமைச்சர் ஜெயக்குமார்

சசிகலாவின் அழைப்பு அமமுகவிற்கு தான் பொருந்தும் என்றும், அதிமுகவிற்கு அது பொருந்தாது எனவும் அமைச்சர் ஜெயக்குமார் தெரிவித்துள்ளார்.

64 views

ஜெயலலிதா நினைவிட அருங்காட்சியகம் - முதல்வர் திறந்து வைத்தார்

முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதாவின் நினைவிடத்தில் அமைக்கப்பட்டுள்ள அருங்காட்சியகம் மற்றும் அறிவு சார் பூங்காவை முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி திறந்து வைத்து பார்வையிட்டார்.

25 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.