மனித நேயம் மிக்கவர் - சிறந்த நண்பர்; உணர்ச்சி வசப்பட்டு கண்கலங்கிய பிரதமர் மோடி
பதிவு : பிப்ரவரி 09, 2021, 01:28 PM
காங்கிரஸ் எம்.பியும், மூத்ததலைவருமான குலாம் நபி ஆசாத், மனித நேய மிக்கவர், சிறந்த நண்பர் என, மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார்.
காங்கிரஸ் எம்.பியும், மூத்ததலைவருமான குலாம் நபி ஆசாத், மனித நேய மிக்கவர், சிறந்த நண்பர் என, மாநிலங்களவையில் பிரதமர் மோடி புகழாரம் சூட்டியுள்ளார். 

மாநிலங்களவை எதிர்க்கட்சி தலைவராக உள்ள குலாம் நபி ஆசாத்தின் பிரிவு உபசார நிகழ்வு நடைபெற்றது. இதில் பங்கேற்று பேசிய பிரதமர் மோடி, குலாம் நபி ஆசாத், பல்வேறு விவகாரங்களில் தமக்கு ஆலோசனைகள் வழங்கியுள்ளதாக தெரிவித்தார். மாநிலங்களவை எதிர்க்கட்சித் தலைவராக யார் வந்தாலும் அவர்களுடன், குலாம் நபி ஆசாத்தின் நடத்தையை ஒப்பிடுவது கடினமான ஒன்று என பிரதமர் மோடி குறிப்பிட்டார். ஜம்மு காஷ்மீர் மாநிலத்தில், யாத்ரீகர்கள் மீது தீவிரவாதிகள் நிகழ்த்திய தாக்குதல் குறித்து குலாம்நபி ஆசாத், மிகவும் வேதனை அடைந்ததாக கூறினார். தம்முடைய குடும்பத்தினர், மீது நிகழ்த்தப்பட்ட தாக்குதல் போல உணர்ந்து அவ்வபோது தமக்கு தொலைபேசி மூலம் விவரங்களை கேட்டறிந்ததாகவும் பிரதமர் மோடி உணர்ச்சி வசப்பட்டு கண்ணீர் விட்டு அழுதார். பின்னர், குலாம் நபி ஆசாத் மனித நேயம்மிக்கவர் என்றும் அவர் புகழாரம் சூட்டினார். 

முதல் முறை எம்.பி.க்களுக்கு ரோல் மாடலாக திகழ்ந்தவர் குலாம் நபி ஆசாத் என மாநிலங்களவை தலைவர் வெங்கய்யா நா​யுடு புகழாரம் சூட்டியுள்ளார். வரும் 15 ஆம் தேதி உடன் குலுாம் நபி ஆசாத்தின் பதவிக்காலம் முடிய உள்ள நிலையில், இன்று ஓய்வு பெறும் உறுப்பினர்களுக்கு மாநிலங்களவையில் பிரிவு உபசார விழா நடைபெற்றது. இந்நிகழ்வில் பேசிய மாநிலங்களவை தலைவர் வெங்கையா நாயுடு, பல்வேறு சிக்கலான சூழ்நிலைகளில் அவர் வழங்கிய கருத்துக்கள் மிகவும் ஆக்கபூர்வமானதாக இருந்துள்ளதாக பெருமிதம் தெரிவித்தார்.     அவையின் தலைவர் என்கிற முறையில் குலாம் நபி ஆசாத்தின் சேவையை தாம் பெருமளவில் இழக்க வேண்டிய நிலை உருவாகும் என வெங்கய்யா நாயுடு தெரிவித்தார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

421 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

73 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

பிப்ரவரி மாத ஜிஎஸ்டி வருவாய் ரூ.1,13,143 கோடி வசூல்

2021 ஆம், ஆண்டு பிப்ரவரி மாதத்தில் சரக்கு மற்றும் சேவை வரியாக ஒரு லட்சத்து 13 ஆயிரத்து 143 கோடி ரூபாய் வசூல் செய்யப்பட்டுள்ளது.

14 views

போராட்டத்தை தடுத்ததால் போலீசார் மீது கல்வீச்சு

உத்தரகாண்டில் போராட்டத்தை தடுத்த போலீசார் மீது கல்வீச்சு நடந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

23 views

60-வயதைக் கடந்தவர்களுக்கு தடுப்பூசி அனுமதி - தடுப்பூசி செலுத்திக் கொண்டார் மோடி

பிரதமர் மோடியைத் தொடர்ந்து மத்திய அமைச்சர்கள் தடுப்பூசி செலுத்திக் கொள்ள திட்டமிட்டு உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.

46 views

அயோத்தியில் ராமர் கோவில் கட்ட ரூ.2,100 கோடி நிதி வசூல்

அயோத்தியில் ராமர் கோவில் 2 ஆயிரத்து 100 கோடி நிதி நன்கொடையாக வழங்கப்பட்டுள்ளது. கோவில் கட்ட நிர்ணயிக்கப்பட்ட இலக்கைவிடவும் ஆயிரம் கோடி ரூபாய் அதிகமாக வசூலாகியுள்ளது என அறக்கட்டளை தெரிவித்துள்ளது.

20 views

"கிராமங்களுக்கு அருகில் குளிர்பதன கிடங்கு" - பிரதமர் மோடி

விவசாயிகளின் கிராமத்திற்கு அருகிலேயே நவீன குளிர்பதன கிடங்குகளை அமைக்க வேண்டும் என பிரதமர் மோடி கூறியுள்ளார்.

12 views

"கேரளாவில் சட்டம் ஒழுங்கு கடும் பாதிப்பு" - நிர்மலா சீதாராமன்

கடவுளின் தேசமான கேரளா, இடதுசாரிகளின் ஆட்சியில் அடிப்படைவாதிகளின் தேசமாகியுள்ளது என மத்திய அமைச்சர் நிர்மலா சீதாராமன் கடுமையாக விமர்சித்துள்ளார்.

12 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.