இந்தியா Vs இங்கிலாந்து டெஸ்ட் போட்டி - இந்தியா 337 ரன்களுக்கு ஆல் அவுட்
பதிவு : பிப்ரவரி 08, 2021, 04:27 PM
இங்கிலாந்துக்கு எதிரான முதல் டெஸ்ட் போட்டியின் முதல் இன்னிங்ஸ் முடிவில் 337 ரன்களுக்கு இந்தியா ஆல் அவுட் ஆனது.
 சென்னை சேப்பாக்கத்தில் நடைபெறும் போட்டியில், முதலில் பேட்டிங் செய்த இங்கிலாந்து அணி 578 ரன்கள் குவித்தது. இதையடுத்து விளையாடிய இந்திய அணி 337 ரன்களுக்கு அனைத்து விக்கெட்டையும் இழந்தது. இந்திய அணியில், ரிஷப் பண்ட் 91 ரன்கள் மற்றும் வாஷிங்டன் சுந்தர் 85 ரன்கள் அடித்தனர். இதை தொடர்ந்து இரண்டாவது இன்னிங்சை தொடங்கியுள்ள இங்கிலாந்து அணி, சற்று முன் வரை 5 விக்கெட் இழப்பிற்கு 119 ரன்கள் எடுத்துள்ளது

300 விக்கெட் வீழ்த்திய இஷாந்த் சர்மா- 300 விக்கெட் வீழ்த்திய 6வது இந்திய வீரரானார்
டெஸ்ட் போட்டிகளில் 300 விக்கெட்டுகளை வீழ்த்திய 3வது இந்திய வேகப்பந்துவீச்சாளர் என்ற சாதனையை இஷாந்த் சர்மா படைத்துள்ளார். சென்னையில் நடைபெற்று வரும் முதல் டெஸ்ட் போட்டியில், இங்கிலாந்து வீரர் லாரன்ஸை வீழ்த்தியதன் மூலம் இந்த சாதனையை இஷாந்த் படைத்தார். இவருக்கு முன்னதாக அணில் கும்ப்ளே, கபில்தேவ், ஹர்பஜன், அஸ்வின், ஜாஹிர் கான் ஆகியோர் 300 விக்கெட்டுகளுக்கு மேல் வீழ்த்தியுள்ளனர். தற்போது 6வது வீரராக அந்த பட்டியலில் இஷாந்த் இணைந்துள்ளார்.  

இந்தியா Vs இங்கிலாந்து 2வது டெஸ்ட் - 50 சதவீத பார்வையாளர்களுக்கு அனுமதி ;சில நிமிடங்களில் விற்று தீர்ந்த டிக்கெட்
இந்தியா - இங்கிலாந்து இடையேயான  இரண்டாவது டெஸ்ட் போட்டிக்கான டிக்கெட் விற்பனை, தொடங்கிய சில நிமிடங்களில் முழுமையாக விற்று தீர்ந்தது. சென்னையில் வரும் 13ஆம் தேதி நடைபெற உள்ள இரண்டாவது டெஸ்ட் போட்டியை நேரில் காண 50 சதவீத ரசிகர்களுக்கு அனுமதி வழங்கப்பட்டுள்ளது. இதையடுத்து, இந்த போட்டிக்கான டிக்கெட் விற்பனை இன்று காலை 10 மணிக்கு ஆன்லைனில் தொடங்கியது. டிக்கெட் விற்பனைக்கான கட்டணம் 100 முதல் 200 ரூபாய் வரை நிர்ணயிக்கப்பட்டிருந்த நிலையில்,  தொடங்கிய சில நிமிடங்களில் அனைத்து டிக்கெட்டுகளும் விற்று தீர்ந்தன...

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

ஐ.பி.எல் ரசிகர்களுக்கு ஓர் சோக செய்தி "எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது"

ஐ.பி.எல் போட்டிக்கான அட்டவணை வெளியிடப்பட்டுள்ள நிலையில், எந்த அணியும் சொந்த நகரில் விளையாடாது என்ற தகவல் கிரிக்கெட் ரசிகர்களை சோகத்தில் ஆழ்த்தி உள்ளது.

15 views

ஏப்ரல் 9-ம் தேதி தொடங்குகிறது ஐபிஎல்

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

54 views

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட்... இன்னிங்ஸ் வெற்றி பெற்ற இந்தியா

இங்கிலாந்துக்கு எதிரான 4 வது டெஸ்ட் போட்டியில் 3 வது நாளிலே முடித்த இந்திய அணி, இன்னிங்ஸ் வெற்றி பெற்று அசத்தியுள்ளது

25 views

ராட்டர்டேம் ஏ.டி.பி. டென்னிஸ் தொடர் - முதல் சுற்றில் வாவ்ரின்கா அதிர்ச்சி தோல்வி

ராட்டர்டேம் ஏடிபி டென்னிஸ் தொடரில், சுவிட்சர்லாந்தை சேர்ந்த முன்னணி வீரர், ஸ்டான் வாவ்ரின்கா, அதிர்ச்சி தோல்வி அடைந்து உள்ளார்.

25 views

பின்வாங்காதீர்கள் -உணர்ச்சி பொங்கிய ச‌ச்சின்

ச‌றுக்கல்களை கடந்து ச‌ச்சின் சரித்திரம் படைத்த‌தை நினைவு கூறும் விதமாக வீடியோ ஒன்று டுவிட்டரில் பரவி வந்த‌து.

50 views

மியாமி ஓபன் டென்னிஸ் தொடர் - ரோஜர் பெடரர் பங்கேற்க மாட்டார்

அமெரிக்காவில், மியாமி ஓபன் டென்னிஸ் தொடர், வருகிற 22-ஆம் தேதி தொடங்க உள்ளது.

23 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.