"மத்திய அரசு இட ஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக தொடர்ந்து செயல்படுகிறது" - மு.க. ஸ்டாலின் கண்டனம்
பதிவு : பிப்ரவரி 08, 2021, 04:14 PM
மத்திய அரசின் முக்கிய துறைகளில் இணைச் செயலாளர் பதவிகளுக்கு தனியார் துறையிலிருந்து 30 பேரை நியமிக்க முடிவு செய்திருப்பதற்கு திமுக தலைவர் ஸ்டாலின் கண்டனம் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் வெளியிட்டுள்ள அறிக்கையில், மத்திய பாஜக அரசு ஆட்சிக்கு வந்ததில் இருந்து சமூகநீதியின் அடிப்படையான இடஒதுக்கீட்டு கொள்கைக்கு எதிராக தொடர்ந்து செயல்பட்டு வருகிறது எனக் குற்றம் சாட்டியுள்ளார். நீட், யூபிஎஸ்சி, ரெயில்வே போன்ற மத்திய அரசு துறைகளுக்கான தேர்வுகளில் இட ஒதுக்கீட்டில் சமூகநீதிக்கு சாவுமணி அடித்திருக்கும் பாஜக அரசு, இந்திய அரசமைப்பு சட்டத்திற்கு எதிராகவே செயல்படுகிறது என ஸ்டாலின் கூறியுள்ளார். தற்போது பாஜக ஆர்.எஸ்.எஸ். சித்தாந்தத்தில் ஊறிப்போனவர்களை இணை செயலாளர்களாக கொண்டுவந்து, எஞ்சியிருக்கும் சமூகநீதிக் கட்டமைப்பையும் தகர்க்க முயற்சிக்கிறது என குற்றம் சாட்டியுள்ளார்.  இடஒதுக்கீட்டு கொள்கையை சீரழிக்கும் முயற்சியை திமுக ஒரு போதும் ஏற்காது எனக் கூறியிருக்கும் அவர், மத்திய அரசு தன்னுடைய முடிவை கைவிட வேண்டும் எனவும்  இதர பிற்படுத்தப்பட்டோர், பட்டியலின - பழங்குடியின மக்களின் இட ஒதுக்கீட்டு கொள்கையை முழுமையாக அமல்படுத்திட வேண்டும் எனவும் பிரதமர் மோடியை கேட்டுக் கொள்வதாக கூறியிருக்கிறார்.  நீண்ட போராட்டத்திற்கு பிறகு கிடைத்த இடஒதுக்கீட்டு கொள்கையை நிறைவேற்ற மறுப்பதும், அதற்கு எதிராக நடப்பதும், எரிமலையுடன் விளையாடுவதற்கு சமமானது என்று  மத்திய அரசுக்கு எச்சரிக்கை விடுத்துள்ளார். 


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

421 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

73 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

யார் யார் தபால் வாக்கு அளிக்கலாம்?

வாக்குப்பதிவு அன்று மேலும் பலருக்கு அத்தியாவசிய சேவையின் கீழ் தபால் வாக்களிக்க தேர்தல் ஆணையம் அனுமதி அளித்துள்ளது.

45 views

வேட்பாளர் நேர்காணல் - தேமுதிக அறிவிப்பு

வரும் 6ஆம் முதல் முதல் 8 தேதி வரை 3 நாட்கள், விருப்ப மனு அளித்தவர்களிடம் நேர்காணல் நடத்தப்படுமென தேமுதிக தெரிவித்துள்ளது.

34 views

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு - இன்று மீண்டும் பேச்சுவார்த்தை என தகவல்

அதிமுக-பாஜக தொகுதி பங்கீடு குறித்து இன்று மீண்டும் பேச்சுவார்த்தை நடைபெறுகிறது.

197 views

"30 குழுக்கள் அமைத்து தேர்தல் பணி" - நீலகிரி ஆட்சியர் செய்தியாளர் சந்திப்பு

நீலகிரி மாவட்டத்தில் 30 குழுக்கள் அமைத்து தேர்தல் கண்காணிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாக, ஆட்சியர் இன்னசென்ட் திவ்யா தெரிவித்தார்

20 views

திமுக தலைவர் ஸ்டாலின் பிறந்தநாள் - பெரியார் நினைவிடத்தில் ஸ்டாலின் மரியாதை

திமுக தலைவர் ஸ்டாலின், தனது பிறந்தநாளை முன்னிட்டு, சென்னை வேப்பேரி, பெரியார் திடலில் உள்ள பெரியார் நினைவிடத்தில் மலர்தூவியும், மலர் வளையம் வைத்தும் மரியாதை செலுத்தினார்.

35 views

டோல்கேட்டை தாக்கும் த.வா.க நிர்வாகிகள் - அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பு

சேலம் மாவட்டம் தலைவாசல் பகுதியில் உள்ள டோல்கேட்டை தமிழக வாழ்வுரிமை கட்சியினர் அடித்து நொறுக்கும் வீடியோ வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

31 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.