குழந்தைக்கு இனிப்பு வாங்க பணம் கேட்ட மனைவி - சுவற்றில் முட்டி குழந்தையை கொன்ற கொடூரம்
பதிவு : பிப்ரவரி 06, 2021, 03:45 PM
மகாராஷ்டிராவில் 20 மாதங்கள் ஆன பச்சிளம் குழந்தையை தந்தையே கொன்ற சம்பவம் இதுவரை பார்த்திராத கொடூரம் என உணர வைத்திருக்கிறது...கொலைக்கான காரணம் என்ன? விரிவாக பார்க்கலாம்...
மும்பை அருகே கோண்டியா மாவட்டத்தில் உள்ள லொனாரா என்ற கிராமத்தை சேர்ந்தவர் விவேக். இவரின் மனைவி வர்ஷா. இவர்களுக்கு 20 மாதங்களே ஆன வைஷ்ணவி என்ற பெண் குழந்தை இருந்தது. 
சம்பவத்தன்று வேலைக்கு சென்றுவிட்டு விவேக் வந்த போது குழந்தை வைஷ்ணவி அழுதுள்ளார். அப்போது குழந்தையை சமாதானப்படுத்த வர்ஷா, தன் கணவரிடம் 5 ரூபாய் பணம் கேட்டுள்ளார். கோதுமையில் செய்யப்படும் காஜா என்ற இனிப்பை வாங்கிக் கொடுத்தால் குழந்தை சமாதானமாகி விடுவார் என்பதால் 5 ரூபாய் பணம் கேட்டுள்ளார். ஆனால் மனைவி பணம் கேட்ட போது தன்னிடம் சில்லறை இல்லை என கூறியிருக்கிறார் விவேக். ஆனாலும் குழந்தையின் அழுகையை நிறுத்த வேண்டும் என்பதே வர்ஷாவின் எண்ணமாக இருந்ததால் மீண்டும் பணம் கேட்டுள்ளார் அவர். 
இதனால் கடும் ஆத்திரமடைந்த விவேக், அழுது கொண்டிருந்த தன் குழந்தையை கையில் எடுத்து சுவற்றில் வேகமாக முட்டியுள்ளார். பின்னர் தரையில் போட்டு குழந்தையை கொடூரமாக தாக்கியுள்ளார் விவேக். 
என்னவென்று சுதாரிப்பதற்குள் அத்தனையும் நடந்து முடிந்தது. வீறிட்டு அழுது கொண்டிருந்த குழந்தை, கடைசியில் தன் மூச்சை அடக்கி உயிரையும் விட்டது. தன்  கண் முன்னே நடந்த இந்த கொடூரத்தை கண்டு மூர்ச்சையாகிப் போனார் வர்ஷா. மயக்கம் தெளிந்து எழுந்த அவர், குழந்தையின் சடலத்தை கண்டு கண்ணீர் விட்டு கதறினார். இந்த சம்பவம் குறித்து வர்ஷா அளித்த புகாரின் பேரில் விவேக் கைது செய்யப்பட்டார். 2018ல் இவர்களுக்கு திருமணம் நடந்த போதிலும், குடிபோதையில் மனைவியை தாக்குவது விவேக்கின் வழக்கமாம்.. ஆனால் அப்போதெல்லாம் பொறுத்துப்போன வர்ஷாவால் இப்போது தன் மகளின் மரணத்தை ஏற்றுக் கொள்ளவே முடியவில்லை. அழும் பிள்ளைக்காக எதுவும் செய்யும் பெற்றோருக்கு மத்தியில் வெறும் 5 ரூபாய்க்காக குழந்தையை தந்தையே கொடூரமாக கொன்று போட்டிருப்பது இதுவரை யாரும் கேட்டிராத அதிர்ச்சி செய்தியே... 
தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

396 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

197 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

53 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

16 views

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

22 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

17 views

மாநில தேர்தல் தேதி குறித்து ஆலோசனை - எத்தனை கட்டமாக நடத்துவது என ஆலோசனை

5 மாநில சட்டமன்றத் தேர்தல் தேதியை இறுதி செய்வது குறித்து அம்மாநில தலைமை தேர்தல் அதிகாரிகளுடன் தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா ஆலோசனையை மேற்கொண்டார்.

27 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் - முதல் சர்வதேச போட்டியை நடத்த தயார்

இந்தியா இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான 3வது டெஸ்ட் போட்டி அகமதாபாத்தில் உள்ள மொட்டேரா மைதானத்தில் தொடங்குகிறது

244 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.