5 ஆண்டில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி ரூ.9 ஆயிரம் கோடியாக உயர்வு - மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் பேச்சு
பதிவு : பிப்ரவரி 05, 2021, 05:34 PM
கடந்த 5 ஆண்டுகளில் இந்தியாவின் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி 2 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்துள்ளது என மத்திய பாதுகாப்பு துறை அமைச்சர் ராஜ்நாத் சிங் தெரிவித்துள்ளார்.
பெங்களூருவில் நடைபெற்ற ஸ்டார்ட் அப் மந்தன் 2021 நிகழ்ச்சியில் மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கலந்து கொண்டார்.  அப்போது அவர் பேசும்போது, கடந்த 2015ம் ஆண்டு முதல் 2020ம் ஆண்டு காலகட்டத்தில் பாதுகாப்பு உபகரணங்கள் ஏற்றுமதி 2 ஆயிரம் கோடி ரூபாயில் இருந்து 9 ஆயிரம் கோடி ரூபாயாக உயர்ந்து இருப்பதாக பெருமிதம் தெரிவித்தார்.நமது உள்நாட்டு பாதுகாப்பு உபகரணங்களின் உற்பத்தியை வரும் 2025ம் ஆண்டுக்குள், 2,500 கோடி அமெரிக்க டாலராக உயர்த்த இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும்,
இவற்றின் ஏற்றுமதியை 500 கோடி அமெரிக்க டாலரை வரும் 2025ம் ஆண்டுக்குள் அடைய இலக்கு நிர்ணயம் செய்துள்ளதாகவும் ராஜ்நாத்  சிங் குறிப்பிட்டார்.இந்த இலக்கை அடைந்து விட்டால், ஏவுகணை, ராணுவம் மற்றும் வர்த்தக விமானம் உள்ளிட்ட வான்வெளி துறையில் இந்தியா முக்கிய பங்கு வகிக்கும் என்றும் அவர் தெரிவித்தார்.பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் இணைந்து செயல்பட சர்வதேச அளவில் பல்வேறு முக்கிய நிறுவனங்களுக்கு அழைப்பு விடுக்கப்பட்டு வருவதாகவும்,அதற்கு ஏற்றாற்போல், பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தியில் வெளிநாட்டு நேரடி முதலீட்டை 49 சதவீதத்தில் இருந்து 74 சதவீதமாக உயர்த்தி இருப்பதாகவும் ராஜ்நாத் சிங் தெரிவித்தார்.


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

468 views

சொல்லைக் காட்டிலும் செயல் பெரிது என்பதற்கு இலக்கணம் - மநீம தலைவர் கமல்ஹாசன் கருத்து

ஊரடங்கு காலத்தில், இலவச கற்பித்தலில் ஈடுபட்டு வரும் இளைஞர்களை மக்கள் நீதி மய்யம் தலைவர் கமல்ஹாசன் பாராட்டி உள்ளார்.

237 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

89 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

87 views

பிற செய்திகள்

போர் படையில் 34 பெண்கள் - வல்லமை பெற்ற ஆளுமை பெண்

சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து மகளிர் தினமான இன்று பார்க்கலாம்....

15 views

மீண்டும் போட்டியிட வாய்ப்பு மறுப்பு - திரிணாமுல் காங். கட்சியினரின் அதிருப்தி பாஜகவிற்கு சாதகமாக அமையுமா ?

மேற்கு வங்கத்தில் திரிணாமுல் காங்கிரஸ் சார்பில் போட்டியிட மீண்டும் வாய்ப்பு வழங்கப்படாததால் கட்சியின் மீது எம்எல்ஏக்கள், எம்பிக்கள் பலர் அதிருப்தியில் உள்ளனர்.

63 views

சர்வதேச மகளிர் தினக் கொண்டாட்டம் - வலிகள் நிறைந்த கொண்டாட்டம்

மார்ச் 8 ஆன இன்று சர்வதேச மகளிர் தினம் உலகமெங்கும் கொண்டாடப்படும் நிலையில், மகளிர் தினம் பற்றிய செய்தித் தொகுப்பைப் பார்க்கலாம்...

18 views

தீவிரவாதத்தை எதிர்கொள்ளும் மனோதிடம் - பெண்களை பொறுத்தே நாட்டின் முன்னேற்றம்

சகலகலா வல்லவர்கள் என்பதை நிரூபிக்கும் வகையில் நாட்டின் பாதுகாப்பை பெண்கள் தங்கள் கையில் எடுத்து வீரமங்கைகளாக வலம் வருவது குறித்து மகளிர் தினமான இன்று பார்க்கலாம்.

55 views

என். ஆர். காங்கிரஸில் இணைந்தார் ஆறுமுகம்

புதுச்சேரி காங்கிரஸ் கமிட்டியின் செயல் தலைவர் ஏ.கே.டி ஆறுமுகம் கட்சியில் இருந்து நீக்கப்பட்டுள்ளார்.

38 views

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களியுங்கள் - மம்தா பானர்ஜி பிரசாரம்

பாஜக தரும் பணத்தை வாங்கிக் கொண்டு, திரிணாமுல் காங்கிரசுக்கு வாக்களிக்க வேண்டும் என மம்தா பானர்ஜி வாக்காளர்களை கேட்டுக் கொண்டார்.

26 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.