சுரானா நிறுவனத்தில் அமலாக்கத்துறை சோதனை
பதிவு : பிப்ரவரி 05, 2021, 01:12 PM
சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்
சிபிஐ வசம் இருந்த 103 கிலோ தங்கம் மாயமான விவகாரத்தில் அமலாக்கத் துறையினர் அதிரடி சோதனை மேற்கொண்டு வருகின்றனர்.

சட்டவிரோதமாக தங்கத்தை இறக்குமதி செய்ததாக எழுந்த புகாரின் பேரில் 2012ல் சுரானா நிறுவனத்தில் சிபிஐ அதிகாரிகள் சோதனை நடத்தினர். 

அப்போது அங்கே பதுக்கி வைக்கப்பட்டிருந்த 400 கிலோ தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. 

ஆனால் லாக்கரில் இருந்த 103 கிலோ தங்கம் மாயமானதாக வெளியான தகவல் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்திய நிலையில் இந்த வழக்கு சிபிசிஐடி வசம் ஒப்படைக்கப்பட்டது. 

இதனடிப்படையில் கடந்த டிசம்பர் மாதம் 24ஆம் தேதி சிபிஐ மீது திருட்டு வழக்கு பதிவு செய்த சிபிசிஐடி போலீசார் விசாரணை நடத்தி வருகின்றனர். 

இதனிடையே அமலாக்கத்துறையினர் சுரானா நிறுவனம் மற்றும் அதன் உரிமையாளர்களுக்கு  சொந்தமான 20 இடங்களில் அதிரடியாக சோதனை மேற்கொண்டு வருகின்றனர். 

சுரானா நிறுவனம் தங்க ஏற்றுமதி, இறக்குமதி மட்டுமின்றி ,சுரானா  பவர் ப்ளாண்ட் நிறுவனத்தையும் நடத்தி வருகிறது. இந்த நிறுவனம் ஐடிபிஐ கன்சார்டியத்தில் 1727 கோடி ரூபாய் கடன் வாங்கி  மோசடி செய்த விவகாரத்தில் கடந்த ஆண்டு செப்டம்பர் மாதம் சிபிஐ வழக்கு பதிவு செய்தது.

2008 முதல் 2017 வரையிலான  நிதியாண்டில் பல மோசடி நடத்திருப்பதாகவும் குற்றச்சாட்டு உள்ளது. 

இத்துடன் 250 கோடி ரூபாய் ஜிஎஸ்டி மோசடியிலும் சுரானா நிறுவனம் சிக்கியுள்ளது. 

இந்த மோசடிகளில் கிடைத்த பணத்தை சட்டவிரோதமாக பணபரிமாற்றம் செய்துள்ளது கண்டுபிடிக்கப்பட்டது.

இதனையடுத்து அமலாக்கத்துறை சுரானா நிறுவனத்திற்கு சொந்தமான இடங்களில் சோதனை நடத்தி வருகிறது. குறிப்பாக சட்டவிரோத தங்க ஏற்றுமதி இறக்குமதி, வங்கி மோசடி, ஜிஎஸ்டி மோசடியில் பெறப்பட்ட பணத்தை வெளிநாட்டில் முதலீடுகளாகவோ ,சொத்துக்களாக வாங்கியுள்ளார்களா? என அமலாக்கத்துறை சோதனை நடத்தி வருகிறது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

454 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

84 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

77 views

பிற செய்திகள்

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

31 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

241 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

135 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

314 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

80 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.