நாட்டின் பிரச்னைகள் குறித்து விவாதிப்போம் : விவசாயிகள் போராட்ட கேள்விக்கு பதில் - சென்னையில் விரோட்கோலி பேட்டி
பதிவு : பிப்ரவரி 05, 2021, 05:33 AM
நாட்டின் எந்த பிரச்சனை என்றாலும் போட்டியின் இடையே அது குறித்தும் வீரர்கள் விவாதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரோட்கோலி தெரிவித்தார்.
நாட்டின் எந்த பிரச்சனை என்றாலும் போட்டியின் இடையே அது குறித்தும் வீரர்கள் விவாதிப்போம் என்று இந்திய கிரிக்கெட் அணியின் கேப்டன் விரோட்கோலி தெரிவித்தார். டெல்லி விவசாயிகள் போராட்டம் குறித்த கேள்விக்கு இவ்வாறு பதிலளித்தார்.இந்தியா - இங்கிலாந்து அணிகளுக்கு இடையேயான முதல் டெஸ்ட் போட்டி, சென்னை சேப்பாக்கம் மைதானத்தில் நாளை தொடங்க இருக்கிறது. இந்நிலையில் இன்று செய்தியாளர்களை சந்தித்த விராட் கோலி, சென்னை சேப்பாக்கம் மைதானம்  பேட்டிங்க்கு சாதகமாக இருக்கும் என்றும் அதே நேரம் சுழற்பந்து வீச்சுக்கு கை கொடுக்கும் என்றும் நம்பிக்கை தெரிவித்தார்.  
மேலும் பேசிய அவர், ரிஷப் பண்ட் நாளை போட்டியில் விக்கெட் கீப்பராக செயல்படுவார். அவருக்கு கொடுக்கப்பட்ட வாய்ப்புகளை ஆஸ்திரேலியா தொடரில் சிறப்பாக பயன்படுத்தியுள்ளார். அவர் விளையாட்டில் தாக்கத்தை ஏற்படுத்தக் கூடியவர் என்றும் உறுதியளித்தார். ஜடேஜாவிற்கு மாற்றாக அக்ஸர் பட்டேல் அணியில் இடம் பெற காரணம், இருவருமே ஒரே மாதிரியான ஆட்ட திறனை கொண்டவர்கள், என்றார்.இந்திய அணியில் அனைவருமே உத்வேகத்துடன் உள்ளோம். எப்போதுமே இந்தியாவில் நாம் வலுவான அணியாகவே உள்ளோம். தற்போது வெளிநாடுகளிலும் சிறப்பாக செயல்படுகிறோம் என்றும், வேகப்பந்து வீச்சில் இந்திய அணி சிறப்பாக செயல்பட்டு வருகிறோம் என்றும் கூறினார்.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

397 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

198 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

98 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.

3 views

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

11 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

62 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

17 views

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

23 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.