ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை - சட்டப்பேரவையில் மசோதா தாக்கல்
பதிவு : பிப்ரவரி 04, 2021, 02:52 PM
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.
தமிழகத்தில் ஆன்லைன் சூதாட்டத்திற்கு தடை விதிக்கும் மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது.

கேள்வி நேரத்திற்கு பிறகு, துணை முதலமைச்சர் பன்னீர்செல்வம் இந்த மசோதாவை தாக்கல் செய்தார்.  அந்த சட்டமசோதாவில் பணம் வைத்து சூதாடுவோரையும், அதில் ஈடுபடுத்தப்படும் கணினி  போன்ற உபகரணங்களை தடை செய்ய வழிவகை செய்யப்பட்டுள்ளது.  மேலும் இந்த தடையை மீறி விளையாடுபவர்களுக்கு ஐந்தாயிரம் ரூபாய் அபராதமும், ஆறு மாத சிறைதண்டனை வழங்கவும் அதிகபட்சமாக பத்தாயிரம் ரூபாய் வரை அபராதமும் இரண்டு ஆண்டுகள் வரை சிறைதண்டனை வழங்கவும்  மசோதாவில் வழிவகை செய்யப்பட்டுள்ளது. இந்த மசோதா நாளைய தினம் சட்டப்பேரவையில் ஒரு மனதாக நிறைவேற்றப்பட உள்ளது

முதலமைச்சர், அமைச்சர்கள் மற்றும் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு கொரோனா தடுப்பூசி போடுவதற்கு மத்திய அரசிடம் அனுமதி கோரப்பட்டுள்ளதாக சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர் தெரிவித்துள்ளார்.  சட்டப்பேரவை கூட்டத் தொடரின் கேள்வி நேரத்தில் பேசிய மேட்டூர் எம்எல்ஏ செம்மலை, அடிக்கடி மக்களை சந்திக்கும் மக்கள் பிரதிநிதிகளான சட்டமன்ற உறுப்பினர்களுக்கு எப்போது தடுப்பூசி போடப்படும் என்று கேள்வி எழுப்பினார். இதற்கு பதில் அளித்த சுகாதாரத்துறை அமைச்சர் விஜயபாஸ்கர், தமிழகத்தில் தற்போது வரை ஒரு லட்சத்து 33 ஆயிரம் முன்களப்பணியாளர்களுக்கு தடுப்பூசி போடப்பட்டிருப்பதாக கூறினார். முதலமைச்சர், அமைச்சர்கள் சட்டமன்ற உறுப்பினர்களுக்கு தடுப்பூசி போடுவது தொடர்பாக ஓரிரு வாரங்களில் மத்திய அரசிடம் இருந்து பதில் வரும் என்றார்.

நகர்ப்புற உள்ளாட்சி அமைப்புகளுக்கான தனி அலுவலர்களின் பதவிக்காலத்தை நீட்டிப்பதற்கான மசோதா சட்டப்பேரவையில் தாக்கல் செய்யப்பட்டது. உள்ளாட்சித்துறை அமைச்சர் எஸ்.பி.வேலுமணி, இந்த மசோதாவை தாக்கல் செய்துள்ளார். இதன் மூலம், ஏற்கனவே டிசம்பர் 31 ஆம் தேதியுடன் நிறைவடைந்த நகர்புற தனி அலுவலர்களின் பதவிக்காலம், ஜீன் 30ஆம் தேதி வரை 6 மாத காலத்திற்கு நீட்டிக்கப்பட்டுள்ளது. 

தமிழகத்தின் நாளைய முதல்வராகவும், நிரந்தர முதல்வராகவும் எடப்பாடி பழனிசாமி தான் இருப்பார் என அமைச்சர் செங்கோட்டையன் தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்று கவுண்டம்பாளையம் சட்டமன்ற உறுப்பினர் ஆறுக்குட்டியின் கேள்விக்கு பதிலளித்த அவர், தமிழகத்தில் அரசு பள்ளி மாணவர்களுக்கு 7.5% சிறப்பு உள் ஒதுக்கீடு வழங்கி மக்களிடையே எடப்பாடி பழனிசாமி நீங்கா இடம் பெற்றுள்ளதாக கூறினார்.  2011ம் ஆண்டு முதல் தற்போது வரை 273 புதிய பள்ளிகள் தொடங்கப்பட்டுள்ளதாக தெரிவித்தார்.

சென்னை முழுவதும் புதைவட கம்பிகள் அமைக்கும் பணிகள் விரைவில் முடிவடையும் என மின்சாரத்துறை அமைச்சர் தங்கமணி தெரிவித்துள்ளார். சட்டப்பேரவையில் இன்றைய கேள்வி நேரத்தில், சட்டமன்ற உறுப்பினர் விருகை ரவியின் கேள்விக்கு பதிலளித்து பேசிய அமைச்சர் தங்கமணி, மார்கழி மாதத்தில் கூட வானம் மும்மாரி பொழியும் ராசிக்கு சொந்தக்காரர் முதலமைச்சர் எடப்பாடி பழனிசாமி என்றார். சட்டமன்றத்தை புறக்கணித்த எதிர்க்கட்சிகளை வரும் தேர்தலில் மக்கள் புறக்கணிப்பார்கள் என்றும் கூறினார்.

சட்டப்பேரவைக்கு சட்டமன்ற உறுப்பினர் ஒருவர் சேதம் அடைந்த நெற்பயிருடன் வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது. தமிழக சட்டப்பேரவை கூட்டம் கடந்த 2-ம் தேதி தொடங்கி நடைபெற்று வருகிறது. இதனிடையே இன்று மனித நேய ஜனநாயக கட்சி எம்.எல்.ஏ. தமிமுன் அன்சாரி சேதம் அடைந்த நெற்பயிருடன் சட்ட பேரவைக்கு வந்தார். மேலும் தண்ணீரில் பயிர்கள் கண்ணீரில் விவசாயிகள் என்ற பதாகையையும் அவர் எடுத்து வந்ததால் பரபரப்பு ஏற்பட்டது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

465 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

88 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

86 views

பிற செய்திகள்

இ பாஸ் கட்டாயம் - தமிழக அரசு அறிவிப்பு

வெளிமாநிலங்களில் இருந்து தமிழகம் வருவோருக்கு இ-பாஸ் கட்டாயம் என தமிழக அரசு அறிவித்துள்ளது

115 views

அண்ணா பல்கலை.யில் பொருளாதாரத்தில் நலிந்த உயர்சாதியினருக்கு 10% இடஒதுக்கீடு

2021ஆம் ஆண்டுக்கான ஐபிஎல் தொடர் ஏப்ரல் 9ஆம் தேதி சென்னையில் தொடங்கும் என்று அறிவிக்கப்பட்டுள்ளது.

24 views

அப்பவே அப்படி... தமிழகத்தில் ஆளுநர் ஆட்சி காலங்கள்...

புதுச்சேரியைப் போலவே, தமிழகத்திலும் குடியரசு தலைவர் ஆட்சி 5 முறை அமலில் இருந்திருக்கிறது.

95 views

"அதிமுகவில் கூட்டணியில் இணைய விருப்பம்" - இந்து மக்கள் கட்சித் தலைவர் பேட்டி

சட்டமன்றத் தேர்தலில், அதிமுக கூட்டணியில் அங்கம் வகிக்க, கடிதம் அளித்து உள்ளதாக இந்து மக்கள் கட்சித் தலைவர் அர்ஜுன் சம்பத் கூறி உள்ளார்.

62 views

காங். இல்லாமல் புதுவையில் வெற்றி சாத்தியமா? நேர்காணலில் திமுக தலைவர் ஸ்டாலின் கேள்வி?

காங்கிரஸ் கூட்டணியில் இல்லாமல் புதுச்சேரியில் வெற்றி பெற முடியுமா என்று நிர்வாகிகளிடம் திமுக தலைவர் ஸ்டாலின் கேட்டதாக தகவல் வெளியாகி உள்ளது.

292 views

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

156 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.