மியான்மரில் ஆட்சியை கைப்பற்றிய ராணுவம் - மருத்துவ பணியாளர்கள் பணி நிறுத்தம்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 06:33 PM
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு எதிர்ப்பு தெரிவித்து, மருத்துவ பணியாளர்கள் பணி புறக்கணிப்பில் ஈடுபட்டுள்ளனர் என தகவல் வெளியாகியுள்ளது. 70 மருத்துவமனைகள் மற்றும் சுகாதார மையங்களில் மருத்துவர்கள், பணியாளர்கள் பணியை நிறுத்தியுள்ளனர் என ராணுவ புரட்சிக்கு எதிரான இயக்கம் தெரிவித்துள்ளது. ராணுவ உத்தரவை ஏற்க மாட்டோம் என அவர்கள் கூறியுள்ளனர்.
ஐநா நடவடிக்கைக்கு தடை -  ரஷ்யா-சீனா அணி திரண்டு எதிர்ப்பு
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றியதற்கு கண்டனம் தெரிவிக்கும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் தீர்மானத்தை ரஷ்யா, சீனா தடுத்து நிறுத்தியது.
மியான்மரில் ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி, அதிபர் வின் மின்டை கைது செய்த ராணுவம் ஆட்சியை கைப்பற்றியது. இதற்கு பல உலக நாட்டு தலைவர்கள் கண்டனம் தெரிவித்த நிலையில் சீனா அமைதி காத்தது. இந்நிலையில் மியான்மர் விவகாரம் தொடர்பாக ஆலோசிக்க ஐ.நா. பாதுகாப்பு கவுன்சிலின் சிறப்பு ஆலோசனைக் கூட்டம் நடந்தது. அப்போது ராணுவ நடவடிக்கைக்கு கண்டனம் தெரிவிக்கும் வகையில் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் கண்டனம் தெரிவிக்கும் நடவடிக்கையை ரஷ்யாவும், சீனாவும் தடுத்து நிறுத்தியுள்ளது. 2017 ஆம் ஆண்டு ரோஹிங்கியா இஸ்லாமியர்கள் மீது மியான்மர் ராணுவம் நடவடிக்கையை மேற்கொண்ட போதும் ஐ.நா. பாதுகாப்பு கவுன்சில் நடவடிகையை இரு நாடுகளும் தடுத்து நிறுத்தின என்பது குறிப்பிடத்தக்கது.
ஆஸ்திரேலிய வாழ் மியான்மர் மக்கள் ஆர்ப்பாட்டம்
 மியான்மர் நாட்டில் ராணுவ ஆட்சி அமல்படுத்தப்பட்டதை கண்டித்து ஆஸ்திரேலியாவின் சிட்னி நகரில் உள்ள மியான்மரை பூர்விகமாக கொண்டவர்கள் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர். ஆங் சான் சூகியின் புகைப்படம்  கொண்ட பதாகைகளை ஏந்திய அவர்கள் முழக்கங்களை எழுப்பினர். உடனடியாக அனைத்து அரசியல் கைதிகளையும் விடுதலை செய்ய வேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தியுள்ளனர்.



தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

451 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

பிற செய்திகள்

விண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் உணவகம் - கட்டுமானப் பணிகள் 2025ல் துவக்கம்

விண்வெளியில் திறக்கப்படவுள்ள முதல் ஹோட்டல் குறித்து விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

42 views

வாட்ஸ் அப் - கடந்து வந்த பாதை

தொடர் சிக்கல்களைச் சந்தித்து வரும் வாட்ஸ் அப் செயலி கடந்து வந்த பாதையை சுருக்கமாக பார்க்கலாம்...

23 views

ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் - இழுத்து செல்லப்படும் சடலங்கள்

ரத்த வெள்ளமாக காட்சியளிக்கும் மியான்மர் நகரங்கள் காண்போரின் நெஞ்சை பதைபதைக்க வைக்கின்றன.

192 views

உயிரைக் கொல்லும் பட்டன் பேட்டரி - பலியான 17 மாத குழந்தை

அமெரிக்காவில், 17 மாத குழந்தை ஒன்று பட்டன் பேட்டரியை விழுங்கியதால் உயிரிழந்த நிலையில், உயிரைப் பறிக்கும் அளவிற்கு அவை ஆபத்தானதா... பார்க்கலாம் இந்த செய்தித் தொகுப்பில்...

144 views

ஈராயிரம் ஆண்டுகளுக்கு முன் ஓர் பயணம்... - எரிமலைக் குழம்பில் புதைந்த நகரம்

2,000 ஆண்டுகள் பழமையான தேர் ஒன்றினை எரிமலை சாம்பலில் இருந்து தொல்லியல் ஆய்வாளர்கள் இத்தாலியின் பாம்பெய் நகரில் கண்டறிந்துள்ளனர்.விளக்குகிறது இந்த செய்தித் தொகுப்பு...

109 views

குடியிருப்பு அருகே சுற்றிய கரடிக் குடும்பம் - சண்டையிட்டு மகிழ்ந்த கரடிக் குட்டிகள்

அமெரிக்காவில் குடியிருப்புப் பகுதிக்குள், தனது குட்டிகளுடன் கரடி ஒன்று நுழைந்த நிலையில், வீட்டின் வாசலில் அதன் குட்டிகள் செல்லமாக சண்டையிட்டு மகிழ்ந்தன.

35 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.