கேரளாவில் டாலர் கடத்தல் விவகாரம் - ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 06:23 PM
கேரளாவின் தங்க கடத்தல் விவகாரம் தொடர்புடைய டாலர் கடத்தல் வழக்கில் ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரனுக்கு ஜாமின் வழங்கி நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.
கேரள தங்க கடத்தல் கும்பலுடன் தொடர்பில் இருந்ததாக ஐஏஎஸ் அதிகாரி சிவசங்கரன் மீது குற்றச்சாட்டுகள் எழுந்தன. இதனிடையே தங்க கடத்தல், டாலர் கடத்தல், கருப்பு பண விவகாரம் உள்ளிட்ட வழக்குகளில் சிவசங்கரன் கைது செய்யப்பட்டார். இதனிடையே 3 வழக்குகளிலும் ஜாமின் கேட்டு சிவசங்கரன் மனு தாக்கல் செய்தார். இதில் ஏற்கனவே சுங்கத்துறை பதிவு செய்த தங்க கடத்தல் வழக்கு, அமலாக்கத்துறை பதிவு செய்த கருப்பு பணம் தொடர்பான வழக்கில் ஜாமின் வழங்கப்பட்டது. இந்நிலையில் எர்ணாகுளம் பொருளாதார குற்றவியல் நீதிமன்றம் டாலர் கடத்தல் தொடர்பான வழக்கில் சிவசங்கரனுக்கு ஜாமீன் வழங்கியுள்ளது. 3 வழக்குகளிலும் ஜாமின் கிடைத்துள்ளதால் கடந்த அக்டோபர் 28ஆம் தேதி கைது செய்யப்பட்ட இவர் 98 நாட்கள் சிறைவாசத்திற்கு பிறகு விடுவிக்கப்படுகிறார். டாலர் கடத்தல் வழக்கில் 2 லட்ச ரூபாய் பிணைத்தொகையாக செலுத்த வேண்டும் என்றும் திங்கட்கிழமைகளில் சுங்கத்துறை அலுவலகத்தில் ஆஜராக வேண்டும் என்றும் உத்தரவிடப்பட்டுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

410 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

254 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

பிற செய்திகள்

டெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

கணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

23 views

காய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

9 views

அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ

பஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.

9 views

பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

25 views

காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

31 views

புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.