ரஜினி மன்றத்தினரை குறிவைக்கும் கட்சிகள் : சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சரணடைவதா? - தமிழருவி மணியன் கடும் காட்டம்
பதிவு : பிப்ரவரி 03, 2021, 03:53 AM
ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து மாற்று கட்சிகளில் இணைந்து கொண்டிருக்க, ரஜினியை நேசிப்பவர்கள், யார் வலையிலும் சிக்க மாட்டார்கள் என்று தமிழருவி மணியன்வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.
ரஜினி மக்கள் மன்றத்தினர் தொடர்ந்து மாற்று கட்சிகளில் இணைந்து கொண்டிருக்க, ரஜினியை நேசிப்பவர்கள், யார் வலையிலும் சிக்க மாட்டார்கள் என்று தமிழருவி மணியன்வெளியிட்டுள்ள அறிக்கை சலசலப்பை ஏற்படுத்தியுள்ளது.அரசியலுக்கு வரப்போவதில்லை என ரஜினி அறிவித்த பிறகும், ரசிகர்கள் தொடர்ந்து அவரை அரசியலுக்கு வர வலியுறுத்திப் போராட்டம் நடத்தினர்.இந்த நிலையில், தான் அரசியலுக்கு வரப்போவதில்லை எனத் திட்டவட்டமாக மீண்டும் அறிவித்தார் ரஜினிகாந்த். அந்த அறிக்கையில், தயவுசெய்து இதற்குப் பிறகும் தன்னை அரசியலுக்கு வருமாறு யாரும் போராட்டங்களை நடத்தி, மேலும் மேலும் வேதனைக்கு உள்ளாக்க வேண்டாம் என்று கடுமையாக தெரிவித்திருந்தார்.ஆனாலும், சட்டப்பேரவை தேர்தலில் ரஜினி யாருக்கு ஆதரவு கொடுப்பார் என்ற எதிர்பார்ப்புகள் இருந்து வந்தன.இதனிடையே, ரஜினி மக்கள் மன்றத்தை சேர்ந்த மாவட்ட செயலாளர்கள் சிலர், திமுகவில் தங்களை இணைத்துக் கொண்டது புதிய திருப்பத்தை ஏற்படுத்தியது.அதன் தொடர்ச்சியாக, ரஜினி மக்கள் மன்றத்தில் உள்ளவர்கள் ஏதேனும் அரசியல் கட்சியில் இணைந்து செயல்பட விரும்பினால், ராஜினாமா செய்துவிட்டு அவர்கள் விருப்பம்போல் எந்த கட்சியில் வேண்டுமானாலும் இணைந்து கொள்ளலாம் என்று அறிவிக்கப்பட்டதால்,யாருக்கு ஆதரவு என்ற ரசிகர்களின் கடைசி நம்பிக்கையும் தகர்ந்துபோனது. அந்தவகையில், ரஜினி ரசிகர்கள் மக்கள் மன்ற நிர்வாகிகள் பலர் திமுக, அதிமுக உள்ளிட்ட கட்சிகளில் தங்களை இணைத்துக்கொண்டு வருகின்றனர்.வடசென்னை ரஜினி மக்கள் மன்றத்தின் மகளிரணி  மாவட்ட செயலாளர் லஷ்மி தலைமையில் மன்ற உறுப்பினர்கள் 8 பேர் இன்று செவ்வாய்கிழமை திமுகவில் இணைந்தனர்.இதேபோல, ரஜினி தொடங்கவிருந்த கட்சியின் தலைமை ஒருங்கிணைப்பாளரான அர்ஜுனமூர்த்தி,புதிய கட்சியை தொடங்குவதாக அண்மையில் அறிவித்து, ரஜினி ரசிகர்களுக்கும் அழைப்பு விடுத்தது பேசுபொருளானது.இது ஒரு பக்கமிருக்க, ரஜினியை நேசிப்பவர்கள், யார் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என்று தமிழருவி மணியன் வெளியிட்டுள்ள அறிக்கை பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.சிஸ்டத்தை சீரழித்தவர்களிடமே சில ரசிகர்கள் சரணடைந்திருப்பதையும், சிலர் இளைப்பாறும் வேடந்தாங்கல் எதுவாக இருக்க முடியும் என்று அலைபாய்வதையும் கண்டு வருந்துவதாக குறிப்பிட்டுள்ளார்.இனி, எப்போதும் அரசியலில் அடியெடுத்து வைக்கப்போவதில்லை என்று ரஜினி அறிவிக்கவில்லையே எனக் கூறியுள்ள தமிழருவி மணியன், மக்கள் மன்றத்தை ரஜினி கலைத்துவிடவில்லை என்பதையும் சுட்டிக் காட்டியுள்ளார்.ரஜினி மக்கள் மன்றத்தில் இருந்து ஆள் பிடிக்கும் அநாகரிக அரசியலை தாம் அடியோடு வெறுப்பதாக அறிக்கையில் தெரிவித்துள்ள அவர், ரஜினியை நெஞ்சில் நிறுத்தி நேசிக்கும் மன்ற உறுப்பினர்கள் யார் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என காட்டத்துடன் கூறியுள்ளார்.ரஜினி நாளையே அரசியலுக்கு வந்தாலும், அவருடன் இணைந்து பயணிப்போம் எனவும் தமிழருவி மணியன் கூறியுள்ளது, முக்கியத்துவம் வாய்ந்ததாக பார்க்கப்படுகிறது.ஒரு பக்கம் எந்தக் கட்சியில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளுங்கள் என்று ரஜினியே பச்சைக்கொடி காட்டிவிட்ட பிறகும், மறுபக்கம் ரஜினியை நேசிக்கும் மன்ற உறுப்பினர்கள் யார் விரிக்கும் வலையிலும் சிக்கமாட்டார்கள் என தமிழருவி மணியன் கூறியிருப்பது, ரஜினி அரசியல் பற்றிய கேள்விகளை மீண்டும் தொடங்கி வைத்திருக்கிறது.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

409 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

250 views

அப்பவே அப்படி... சின்னங்கள் பற்றி சிறியதாக ஒரு வரலாறு

தேர்தல் நெருங்கும் நிலையில், தனி சின்னம், ஒரே சின்னம் என்பது போன்ற வார்த்தைகளை அடிக்கடி கேட்கலாம்.

103 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

57 views

பிற செய்திகள்

மக்கள் நீதி மய்யம் பிரசார திட்டங்களை வகுக்கும் WAR ROOM

கமல்ஹாசனின் மக்கள் நீதி மய்யம் கட்சி அலுவலகம் சர்கார் திரைப்பட காட்சிகள் போல் பரபரப்பாக காணப்படுகிறது . அது குறித்து பார்ப்போம்.

144 views

அப்பவே அப்படி... தமிழகத்தின் சுவாரஸ்ய முதல்வர்கள்

சட்டப் பேரவையை கடந்து நாடாளுமன்றத்திலும் தடம் பதித்த முதல்வர்கள், எம்எல்ஏ ஆகாமலேயே முதல்வர் பதவியை வகித்தவர்கள் பற்றிய சுவாரஸ்ய தகவல்களை இன்றைய அப்பவே அப்படி தொகுப்பில் பார்க்கலாம்.

68 views

திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார்

மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

62 views

சமத்துவ மக்கள் கட்சி விலகியது, ஜனநாயகத்தில் ஏற்புடையது தான் - ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள கட்சிகளின் அதிகார பூர்வ நிலையினை வரும் நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

32 views

எதிர்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க. முயற்சி - பிரகாஷ் காரத்

ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

18 views

காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

30 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.