மாநிலத்தில் 3-ல் 1 பங்கு வருவாய் கிராமங்களில் மார்ச் மாதத்திற்குள்ளும் எஞ்சிய கிராமங்களில் நவம்பர் மாதத்திற்குள்ளும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
முதலமைச்சரின் கோரிக்கையை ஏற்று ஆதிதிராவிடர்களுக்கு உயர்கல்வி உதவித்தொகை மறுசீரமைத்த மத்திய அரசுக்கு நன்றியை தெரிவிப்பதாகவும், இத்திட்டத்தினால் மாணவர்கள் பயனடைவார்கள் எனவும் கூறினார். மாநிலத்தில் 3-ல் 1 பங்கு வருவாய் கிராமங்களில் மார்ச் மாதத்திற்குள்ளும் எஞ்சிய கிராமங்களில் நவம்பர் மாதத்திற்குள்ளும் பாரத்நெட் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.தமிழ்நாடு அரசு கேபிள் டிவி நிறுவனத்தின் ஒளிபரப்பு உட்கட்டமைப்புடன் பாரத்நெட்டை இணைப்பதன் மூலம் ஒரு ஒருங்கிணைந்த மின்னணு சேவை விநியோக தளமான ஒருங்கிணைந்த மின்னணு உட்கட்டமைப்பு ஏற்படுத்தப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.
தமிழர்களின் முக்கிய விழாவான தைப்பூசத்திற்கு பொதுவிடுமுறை அறிவிக்கப்பட்டுள்ளது என பெருமிதத்துடன் தெரிவித்தார். ஹஜ் உள்ளிட்ட புனித யாத்திரைகளுக்கு வழங்கப்பட்டு வந்த நிதி அதிகரிக்கப்பட்டுள்ளது என்றும் கூறினார். பெண்கள், குழந்தைகளை பாதுகாக்க சட்டங்கள் கடுமையாக்கப்பட்டுள்ளன என்றும் முதியவர்கள், விதவைகள், மாற்றுத்திறனாளிகள் நலனை காக்க தமிழக அரசு தொடர்ந்து செயல்படுகிறது என்றும் தெரிவித்தார்.
தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் மக்கள் பெறுவதற்காக 1100 என்ற இலவச உதவி எண் ஆளுநர் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கொரோனா நிவாரணம் மற்றும் மீட்டெடுப்பு நடவடிக்கைகளுக்காக அரசு இதுவரையில் 13 ஆயிரத்து 208 கோடி ரூபாய் தனது சொந்த நிதி ஆதாரங்களில் இருந்து செலவிட்டுள்ளது என ஆளுநர் தெரிவித்தார். வரலாற்று சாதனையாக தமிழக அரசு கொரோனா காலத்தில் 73 புரிந்துணர்வு ஒப்பந்தங்களின் வாயிலாக 1 லட்சத்து 721 பேருக்கு வேலை வாய்ப்புக்களை உருவாக்கும் வகையில் 60 ஆயிரத்து 674 கோடி ரூபாய் மதிப்பிலான முதலீடுகளை தமிழகம் ஈர்த்துள்ளது எனக் கூறினார். தமிழக அரசின் அனைத்து உதவிகளையும் பெறுவதற்கு மக்கள் வீட்டில் இருந்தப்படியே 1100 என்ற இலவச உதவி எண் மூலம் முதலமைச்சர் உதவி மையத்தை தொடர்புக்கொள்ளலாம் என அறிவித்துள்ளார்.
இரண்டு புயல்களால் 3 ஆயிரத்து 750 கோடி மற்றும் ஆயிரத்து 514 கோடி மதிப்பில் ஏற்பட்ட சேதங்கள் குறித்து மத்திய அரசுக்கு விரிவான கோரிக்கை அளிக்கப்பட்டுள்ளது என்றும் நிதியை வழங்க மத்திய அரசுக்கு தொடர்ந்து வலியுறுத்தப்படும் என்றும் தெரிவித்தார். மேலும் ஜனவரி மாதத்தில் பருவம் தவறி மழையால் பாதிக்கப்பட்ட 16.78 லட்சம் விவசாயிகளின் வங்கி கணக்குக்கு மொத்தம் ஆயிரத்து 715 கோடி ரூபாய் நேரடியாக செலுத்தப்பட்டு வருகிறது எனவும் ஆளுநர் பன்வாரிலால் புரோகித் கூறினார். சேலம் மாவட்டம் தலைவாசலில் கால்நடை மற்றும் விலங்குகள் அறிவியலுக்கான ஒருங்கிணைந்த உயர் ஆராய்ச்சி நிலையத்திற்கான கட்டுமானப் பணிகள் விரைவில் செயல்பட தொடங்கும் எனக் கூறினார்.
இலங்கை கடற்படை வேண்டுமென்றே கப்பலை மோத செய்ததில் 4 மீனவர்கள் உயிரிழந்து உள்ளனர். இதற்கு கண்டனம் தெரிவிப்பதாக கூறிய ஆளுநர், இவ்விவகாரத்தை இலங்கை அரசின் கவனத்திற்கு கொண்டு செல்லும்படி மத்திய அரசை தொடர்ந்து அரசு வலியுறுத்தும் என்றும் கூறினார். மேலும் அங்கு காவலில் இருக்கும் 12 மீனவர்களையும் மீட்டெடுக்க நடவடிக்கை எடுக்கப்பட்டு வருகிறது எனவும் தெரிவித்தார்.
அரசு நிறுவனங்களில் வழங்கப்படும் 4 சதவீத சிறப்பு ஒதுக்கீட்டில் நிலுவையில் உள்ள காலி பணியிடங்களை நிரப்ப சிறப்பு ஆட்சேர்ப்பு நடவடிக்கைகள் தொடங்கப்படும் என்றார். மொழிவாரி சிறுபான்மையினருக்கு பிரந்திநிதித்துவம் அளிக்கும் வகையில் உரிய சட்டத்தின் மூலம் மாநில சிறுபான்மையினர் ஆணையம் விரிவுப்படுத்தப்படும் எனக் குறிப்பிட்டார்.