ஆஸ்திரேலியா அரசு vs கூகுள் : ஆஸ்திரேலியா அரசு சட்ட வரைவு- வெளியேறுவோம் என கூகுள் மிரட்டல்
பதிவு : பிப்ரவரி 01, 2021, 05:57 PM
ஆஸ்திரேலியா அரசுக்கும் கூகுளுக்கும் இடையிலான மோதல் என்ன...? கூகுள் வெளியேறினால் தேடுதல் தளத்திற்கு மாற்றுவழி உண்டா என்பது குறித்து விரிவாக பார்க்கலாம்..
உலகம் உங்கள் கைகளில் என்பதற்கு ஏற்றவாறு நீங்கள் தேடுவதையெல்லாம் தருகிறது கூகுள் தேடுதல் தளம்..ஸ்டான்போர்டு பல்கலைக்கழக நூலகத்தில் புத்தகங்கள், ஆவணங்களை தேடுவதற்காக இரண்டு மாணவர்கள் உருவாக்கிய அப்ளிகேஷன், இன்று உலகையே தன் வசமாக்கியிருக்கிறது 
வளர்ச்சிக்கு மத்தியில் விமர்சனங்களையும் எதிர்க்கொள்ளும் கூகுள், தற்போது ஆஸ்திரேலிய அரசுடன் பனிப்போரில் ஈடுபட்டுள்ளது. இதில் கூகுளுக்கு துணையாக பேஸ்புக் நிற்கிறது.  செய்தி ஊடகங்களுக்கு கூகுள் மற்றும் பேஸ்புக் நிறுவனங்கள் குறிப்பிட்ட தொகையை வழங்க வேண்டும் என நிர்பந்திக்கும் ஆஸ்திரேலியா சட்டம் தான், இந்த மோதலுக்கு காரணம்...
இன்றைய பத்திரிக்கை உலகம் டிஜிட்டல் மயமாகி வருகிறது. விளம்பரத்தை வருவாயாக கொண்டு இயங்கும் செய்தி ஊடகங்களும், தொழில்நுட்ப நிறுவனங்களும் ஒரு தொழில்முறை போட்டியாளர்கள் போலாகிவிட்டன.  கூகுள் மற்றும் பேஸ்புக் தங்கள் பயனாளர்களை கவருவதில் செய்திகள் பெரும் பங்கு வகிக்கும் நிலையில், செய்தி நிறுவனங்களுக்கும் லாபத்தில் பங்கு கொடுப்பதில் தவறில்லை என ஆஸ்திரேலியா அரசு கூறுகிறது.
 ஆஸ்திரேலியாவை பொறுத்தவரையில் மொத்த விளம்பர வருவாயில் 53 சதவீதத்தை கூகுள் நிறுவனமும், 28 சதவிகிதத்தை பேஸ்புக் நிறுவனமும் பெறுவதாக கூறப்படுகிறது2019-ல் மட்டும் கூகுள் செய்தி விளம்பரம் மூலம் 31 ஆயிரம் கோடிக்கு மேல் பெற்றுள்ளது என  ஆஸ்திரேலிய முதலீட்டு ஆணையம் தெரிவித்துள்ளது இந்நிலையில் செய்தி உள்ளடக்கங்களை பயன்படுத்துவதற்கு உரிய தொகையை வழங்க வேண்டும், தவறினால்அபராதம் செலுத்த வேண்டும் என  சட்ட மசோதாவை கொண்டுவந்துள்ளது.  ஆஸ்திரேலியா .ஊடகங்களுக்கு பணம் வழங்க வேண்டும் என நிர்பந்திக்கும் இந்த மசோதாவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கும் கூகுள் நிறுவனம், இது சட்டமாக மாறினால் ஆஸ்திரேலியாவில் கூகுள் தேடுபொறியின் சேவையை நிறுத்துவதை தவிர வேறு வழியில்லை எனக் கூறிவிட்டது. பேஸ்புக் நிறுவனமோ தங்கள் தளத்தில் பயனாளர்கள் செய்திகளை பகிர்வதை தடுத்து நிறுத்துவோம் என்றது.ஆனால் இந்த மிரட்டலுக்கு அடிபணிய மாட்டோம் என ஆஸ்திரேலிய பிரதமர் ஸ்காட் மோரிசன் கூறிவிட்டார். அரசியல் ரீதியாக இந்த மசோதாக்களுக்கு ஆதரவான நிலைபாடே காணப்படுகிறதுஇதுபோன்ற நிலையை ஏற்கனவே கூகுள், சீனாவில்  எதிர்கொண்டுள்ளது. ஆனால் அங்கு பெருமளவில் கூகுள் பயன்படுத்தப்படவில்லை. மேலும் ஐரோப்பிய யூனியனின் காப்புரிமை சட்டமும் தேடுதல் மற்றும் செய்திகளை வழங்கும் தளங்கள் நிதி வழங்க வேண்டும் என்கிறது. ஆஸ்திரேலியாவில் 94 சதவீதம் கூகுள் தேடுதல் தளம் பயன்படுத்தப்படுகிறது. மைக்ரோசாப்ட்டின் பிங், யாஹூ மற்றும் டக்டக்கோ உள்ளிட்ட தேடுதல் தளங்கள் பயன்பாட்டில் இருந்தாலும், சேவைகள் கூகுள் போன்றில்லை என பயனாளர்கள் தரப்பில் கூறப்படுகிறது.  தேடுதல் தளத்தை கூகுள் நிறுத்தினால் பிற சேவைகளின் நிலை என்னவாக இருக்கும் என்ற கேள்வியும் எழுந்துள்ளது. ஆஸ்திரேலியா அரசு மற்றும் கூகுள் இடையிலான இந்த மோதலை பிற உலக நாடுகளும் உன்னிப்பாக கவனித்து வருகின்றன.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

424 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

74 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

64 views

பிற செய்திகள்

உறைபனியில் மாரத்தான் ஓட்டம் - கடுங்குளிரையும் பொருட்படுத்தாத வீரர்கள்

ரஷ்யாவின் இர்குட்ஸ்க் நகரில் ஐஸ் மாரத்தான் போட்டி நடந்தது.

14 views

தேங்காய் ஓட்டில் கண்கவர் கலைநயம் - அசத்தும் நைஜீரியக் கலைஞர்

ஆப்பிரிக்க நாடான நைஜீரியாவில் தேங்காய் ஓடுகளைப் பயன்படுத்தி, பல்வேறு கைவினைப் பொருட்களை, கலைநயத்துடன் ஒருவர் உருவாக்கி வருகிறார்.

23 views

வெளுத்து வாங்கிய மழை - வெள்ளத்தில் மிதக்கும் கென்டக்கி

அமெரிக்காவின் தென்கிழக்கில் அமைந்துள்ள கென்டக்கி மாகாணம், வெள்ளத்தில் தத்தளிக்கிறது. அங்கு கொட்டித் தீர்த்த கன மழையால், ஆறுகளில் வெள்ள நீர் கரைபுரண்டு ஓடுகிறது.

9 views

மக்கள் மீது ராணுவம் தாக்குதல் - மியான்மருக்கு அமெரிக்கா எச்சரிக்கை

மியான்மர் ராணுவம் மக்கள் மீது தொடர் தாக்குதலில் ஈடுபட்டால், ராணுவம் மீது, இன்னும் பல நடவடிக்கைகள் எடுக்கப்படும் என்று அமெரிக்கா எச்சரிக்கை விடுத்து உள்ளது.

11 views

'கர்ணன்' படத்தின் 2வது பாடல் இன்று மாலை வெளியீடு

நடிகர் தனுஷ் நடிக்கும் கர்ணன் படத்தின் இரண்டாவது பாடல் இன்று மாலை 5.30 மணிக்கு வெளியிடப்பட உள்ளது.

159 views

2 குழந்தைகளின் தாயான அன்ஜா காலென்பாச் சிறந்த அழகியாக தேர்வு

ஜெர்மனியில், நடத்தப்பட்ட அழகிப் போட்டியில் இரண்டு குழந்தைகளுக்கு தாயான, அன்ஜா காலென்பாச் எனும் பெண்மணி மிஸ்.ஜெர்மனியாக, தேர்வு செய்யப்பட்டார்.

65 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.