வித்தியாசமான கதாபாத்திரங்களை ஏற்று நடிப்பதில் ஆர்வம் கொண்டவர் நடிகர் விஜய் சேதுபதி
விஜய்யின் மாஸ்டர் படத்தில் கூட வில்லனாக நடித்து அனைவரையும் விஜய் சேதுபதி கவர்ந்தார். அந்த வகையில் தற்போது நகைச்சுவை நடிகர் சூரிக்கு அப்பாவாக, விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இன்னும் பெயரிடப்படாத இந்த படத்தை இயக்குனர் வெற்றி மாறன் இயக்குகிறார்...
புர்ஜ் கலீபாவில் கிச்சா சுதீப் - சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டு நிறைவு
நடிகர் கிச்சா சுதீப் சினிமாவில் அறிமுகமாகி 25 ஆண்டுகள் நிறைவடைந்துள்ளது. இதையடுத்து உலகின் மிக உயரமான கட்டிடமான புர்ஜ் கலீபாவில் அவர் நடித்துள்ள படத்தின் தலைப்பு மற்றும் டீசரை படக்குழு வெளியிட்டுள்ளது. விக்ராந்த் ரோனா என்று பெயரிடப்பட்டுள்ள இந்த படத்தை அனுப் பண்டாரி இயக்கியுள்ளார்..
இன்று கார்த்தியின் 'சுல்தான்' டீசர் வெளியீடு - மாலை 5 மணிக்கு வெளியாகிறது
நடிகர் கார்த்தி நடித்துள்ள சுல்தான் படத்தின் டீசர் இன்று மாலை 5 மணிக்கு வெளியாக உள்ளது. சிவகார்த்திகேயன் நடிப்பில் வெளியான ரெமோ படத்தை இயக்கிய பாக்யராஜ் கண்ணன் சுல்தான் படத்தை இயக்கியுள்ளார். இந்த படம் மூலம் ராஷ்மிகா மந்தானா தமிழில் அறிமுகமாகிறார்..
புது வீட்டில் குடியேறிய நிக்கி கல்ராணி - சினிமாவில் அறிமுகமாகி 7 ஆண்டு நிறைவு
கடந்த 2014ஆம் ஆண்டு வெளியான "1983" என்ற மலையாள திரைப்படம் மூலம் சினிமாவில் அறிமுகமானவர் நடிகை நிக்கி கல்ராணி. தமிழில் டார்லிங், கலகலப்பு-2 உள்ளிட்ட திரைப்படங்களில் நடித்து ரசிகர்களிடையே பிரபலமடைந்தவர். இதனிடையே சினிமாவில் அறிமுகமாகி 7 ஆண்டுகள் ஆன நிலையில் புதிய வீட்டிற்கு அவர் குடிபெயர்ந்துள்ளார். அந்த புகைப்படங்களை நிக்கி கல்ராணி தனது சமூக வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார்.
ஹரி படத்தில் இணைந்த கேஜிஎஃப் வில்லன் - அருண் விஜய்யுடன் மோத உள்ள 'கருடா'
இயக்குனர் ஹரி இயக்கத்தில் அருண் விஜய் நடிக்கும் படத்தில், கேஜிஎஃப் திரைப்பட வில்லன் இணைந்துள்ளதாக அறிவிப்பு வெளியாகியுள்ளது. இந்த படத்தில் பிரகாஷ் ராஜ், ராதிகா சரத்குமார், பிரியா பவானி சங்கர், யோகி பாபு உள்ளிட்டோர் நடிக்கின்றனர். இந்நிலையில் கேஜிஎஃப் திரைப்படத்தில் கருடா என்ற கதாபாத்திரத்தில் நடித்த ராமச்சந்திர ராஜூவும் இந்த படத்தில் இணைந்துள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இதனால் படத்தின் மீதான எதிர்பார்ப்பு ரசிகர்களிடையே அதிகரித்துள்ளது.