"மின் விநியோகம்- தனியாருக்கு அனுமதி" | மத்திய பட்ஜெட் 2021
பதிவு : பிப்ரவரி 01, 2021, 05:11 PM
மாற்றம் : பிப்ரவரி 01, 2021, 05:24 PM
மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.
மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்துள்ள பட்ஜெட்டில், உஜ்வாலா திட்டத்தினால் சமையல் எரிவாயு 8 கோடி குடும்பங்களுக்கு வழங்கப்பட்டுள்ளது எனவும் அடுத்த 3 ஆண்டுகளுக்குள் மேலும் 100 நகரங்களில் இந்தத் திட்டம் விரிவுபடுத்தப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.குழாய் வழியாக சமையல் எரிவாயு வழங்கும் திட்டம் ஜம்மு காஷ்மீரில் அறிமுகப்படுத்தப்படவுள்ளது.மேலும் ஒரு கோடி பயனாளிகளுக்கு இலவச எரிவாயு சிலிண்டர் வழங்கும் திட்டம் விரிவுபடுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.மேலும் பசுமை எரிசக்தி திட்டத்தை அறிமுகப்படுத்தும் வகையில் ஹைட்ரஜன் எரிபொருள் திட்டம் ஒன்று நடப்பாண்டில் நடைமுறைப்படுத்தப்படும் எனக் கூறப்பட்டுள்ளது. 
139 ஜிகாவாட் அளவுக்கான மின்உற்பத்தி அதிகரித்துள்ளது எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது.  மின் விநியோகத்தில் தனியாருக்கு அனுமதி வழங்கப்படும் எனவும் மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது. நகர்புற பகுதிகளில் ஜல் ஜீவன் திட்டம் செயல்படுத்தப்படும் எனவும் 2.86 கோடி வீடுகளுக்கு குடிநீர் இணைப்பு வழங்கப்படும் எனவும் அறிவிக்கப்பட்டுள்ளது. 
ரூ. 54100 கோடி செலவில் பிரதமரின் ஆத்ம நிர்பர் பாரத் ஸ்வச்சதா திட்டம் செயல்படுத்தப்படும் என தெரிவிக்கப்பட்டுள்ளது. தேசிய சுகாதார திட்டத்தை தவிர இந்தத் திட்டம் கூடுதலாக செயல்படுத்தப்படும் என பட்ஜெட்டில் கூறப்பட்டுள்ளது.

ரயில்வே துறைக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

நாடு முழுவதும் அகல ரயில்பாதை வழித்தடங்கள் அனைத்தும் 2023 ஆம் ஆண்டு டிசம்பர் இறுதிக்குள் 100 சதவீதம் மின்மயமாக்கப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.
மேலும், இந்திய தேசிய ரயில் திட்டம் 2030 தயாரிக்கப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார். இந்த திட்டத்தின்கீழ் பல்வேறு புதிய ரயில் பாதைகள் அமைப்பது மற்றும் சிறப்பு சரக்கு வழித்தடங்களை உருவாக்குவது போன்ற பணிகள் மேற்கொள்ளப்படும் எனத் தெரிவித்துள்ளார்.முதலீட்டு செலவினமாக ரயில்வே துறைக்கு 1 லட்சத்து 7 ஆயிரத்து 100 கோடி ரூபாய் ஒதுக்கப்பட்டுள்ளது என்றார். 
மேலும் சாலைப் போக்குவரத்து மற்றும் நெடுஞ்சாலைத்துறைக்கு 1 லட்சத்து 18 ஆயிரத்து 101 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார். பொது பேருந்து போக்குவரத்தை மேம்படுத்த 18 ஆயிரம் கோடி ரூபாயில் புதிய திட்டம் அறிமுகம் செய்யப்படும் எனவும் அறிவித்து உள்ளார்.இதன்காரணமாக ஆட்டோ மொபைல் துறைக்கு ஊக்கமும் ஏற்படும் எனவும் நிர்மலா சீதாராமன் தெரிவித்து உள்ளார்.இத்திட்டம் போக்குவரத்தை மேம்படுத்தவும், இளைஞர்களுக்கு வேலைவாய்ப்பை உருவாக்கவும்  உதவிகரமாக இருக்கும் எனக் கூறினார்.  வர்ததக நோக்கிலான கப்பல் போக்குவரத்து என்ற புதிய திட்டம் ஒன்று தொடங்கப்படவுள்ளது என்றும் தெரிவித்து உள்ளார். மேலும் கப்பல் போக்குவரத்து திட்டத்திற்காக  5  ஆண்டுகளுக்கு  ஆயிரத்து 624 கோடி ரூபாய் ஒதுக்கப்படும் எனவும் தெரிவித்துள்ளார்.

மூத்த குடிமக்களுக்கு வரிச்சலுகை-தனிநபர் 
வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை"
மூத்த குடிமக்களுக்கு வரி சலுகை அளிக்கப்பட்ட நிலையில், தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை என அறிவிக்கப்பட்டுள்ளது. ஓய்வூதியம் பெறும் 75 வயதை கடந்த மூத்த குடிமக்கள் வருமான வரி செலுத்துவதில் விலக்கு அளிக்கப்பட்டுள்ளது. தனிநபர் வருமான வரி உச்ச வரம்பில் மாற்றமில்லை எனவும், தனிநபர் வரிக் கணக்கு தாக்கல் பிரச்சினைகளை தீர்க்க புதிய அமைப்பு ஒன்று ஏற்படுத்தப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. வெளிநாடு வாழ் இந்தியர்களுக்கு இரட்டை வரிவிதிப்பு பிரச்சினையிலிருந்து விலக்கு அளிக்க புதிய திட்டம்  செயல்படுத்தப்படும் எனவும், கட்டமைப்புத் துறையில் வெளிநாட்டு முதலீட்டை ஈர்க்க அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் எனவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. வீட்டு வசதித் துறை மற்றும் விமானங்களை வாடகைக்கு விடும் நிறுவனங்கள் உள்ளிட்டவைகளுக்கு வரி விதிப்பிலிருந்து மேலும் ஓராண்டுக்கு விலக்கு அளிக்க மத்திய அரசு முடிவு செய்துள்ளது.புதிதாக தொடங்கப்படும் நிறுவனங்களில் முதலீடு செய்யப்படும் முதலீட்டு  வருவாய் மீதான வரிக்கான விலக்கு அடுத்த ஆண்டும் நீட்டிக்கப்படுவதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.பருத்தி மீது 10 சதவீத  சுங்கவரி அறிமுகம் செய்துள்ள மத்திய அரசு, பட்டு மற்றும் பட்டு நூல் மீதான சுங்கவரியை 10 லிருந்து 15 சதவீதமாக உயர்த்தியுள்ளது.உள்நாட்டு உற்பத்தியை அதிகரிக்க சூரிய மின்சக்தி கட்டமைப்பு பொருட்கள் இறக்குமதி மீதும் சுங்கவரி அதிகரிக்கப்பட்டுள்ளது. 

பெண்கள் பாதுகாப்புடன் இரவு பணி மேற்கொள்வதற்கான திட்டம் அறிமுகம்
அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் விரைவில் அறிமுகப்படுத்தப்பட உள்ளதுஅனைத்து விதமான தொழிலாளர்களுக்கும் குறைந்தபட்ச ஊதிய நிர்ணயம் செய்யப்படவுள்ளதாக பட்ஜெட் உரையில் அறிவிக்கப்பட்டுள்ளது. கட்டுமானப் பணியில் ஈடுபட்டுள்ள தொழிலாளர்களின் நலனைக் காக்க இணையதளம் ஒன்று தொடங்கப்படவுள்ளதகாவும், சிறு-குறு மற்றும் நடுத்தர தொழில்துறைக்கு 15,700 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது. அனைத்துத் துறைகளிலும் மகளிர் இரவு நேரப் பணியை போதிய பாதுகாப்புடன் மேற்கொள்ள தகுந்த திட்டம் அறிமுகப்படுத்த மத்திய அரசு திட்டமிட்டுள்ளது. 
விவசாயிகளின் வருவாயை அதிகரிக்க நோக்கம்; விவசாயிகளை கருத்தில் கொண்டு பட்ஜெட்" - பட்ஜெட் குறித்து பிரதமர் மோடி உரை 
கிராமங்களையும், விவசாயிகளையும் மனதில் வைத்து  கொண்டு இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாக பிரதமர் மோடி தெரிவித்துள்ளார். மத்திய பட்ஜெட் குறித்து கருத்து தெரிவித்துள்ள அவர்,  விவசாயிகளின் வருவாயை அதிகரிக்கும் நோக்கத்தில் இந்த ஆண்டிற்கான பட்ஜெட் தாக்கல் செய்யப்பட்டுள்ளதாகவும், 
வளர்ச்சிக்கான புதிய வாய்ப்புகளையும், இளைஞர்களுக்கான புது வாய்ப்புகளை அதிகரிக்கும் வகையில் மத்திய அரசின் அணுகுமுறை அமைந்துள்ளதாகவும் தெரிவித்தார். 
நாடாளுமன்றத்தில் மத்திய பட்ஜெட்டை 3வது முறையாக நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் தாக்கல் செய்தார். 
கடந்த 2019 ஆம் ஆண்டு தாக்கல் செய்தபோது, பட்ஜெட் உரை​யை
2 மணி நேரம் 15 நிமிடங்கள் வாசித்தார். கடந்த 2020 ஆம் ஆண்டு பட்ஜெட் உரையை படித்து முடிக்க 2 மணி நேரம் 42 நிமிடங்கள்,  அவர் எடுத்துக்கொண்டார். நடப்பாண்டு பட்ஜெட் உரையை அவர் வாசித்து முடிக்க 1 மணி நேரம் 48 நிமிடங்கள் எடுத்துக் கொண்டார்.


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

397 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

198 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

52 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

46 views

பிற செய்திகள்

கோயில் வளாகத்தில் யானைகள் பந்தயம் - துள்ளி குதித்து ஓடிய யானைகள்

கேரள மாநிலம் குருவாயூர் கோயிலில் யானை பந்தயம் உற்சாகமாக நடத்தப்பட்டது.

8 views

ராகுல்காந்தி பேசியது தவறு- காங்கிரஸ் எம்.எல்.ஏ. அதிதி சிங்

கேரளா மாநிலம் வயநாடு தொகுதி மக்கள், தங்கள் பிரச்சினைகளை தெளிவாக எடுத்து வைப்பதாகவும், அதன் மீது நல்ல புரிதலுடன் இருப்பதாகவும் ராகுல்காந்தி தெரிவித்தார்.

13 views

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சி - மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல்

புதுச்சேரியில் குடியரசுத்தலைவர் ஆட்சியை அமைக்க மத்திய அமைச்சரவை கூட்டத்தில் ஒப்புதல் அளிக்கப்பட்டுள்ளது.

63 views

இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி மம்தா முன்னிலையில் திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்தார்

மேற்கு வங்க மாநிலத்தை சேர்ந்த இந்திய கிரிக்கெட் வீரர் மனோஜ் திவாரி, திரிணாமுல் காங்கிரஸ் கட்சியில் இணைந்து உள்ளார்

17 views

மீனவர் நலனுக்கு தனி அமைச்சகம் - கேரளாவில் ராகுல்காந்தி தகவல்

விவசாயிகள் எப்படி நிலத்தை உழுது பயிரிட்டு மக்களுக்கு உதவுகின்றனரோ, அதை போலத்தான் கடலில் அந்த பணியை மீனவர்கள் செய்வதாக, கொல்லத்தில் மீனவர்கள் மத்தியில் பேசிய ராகுல் காந்தி தெரிவித்துள்ளார்.

23 views

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானத்துக்கு பிரதமர் மோடியின் பெயர் வைப்பு - குடியரசுத் தலைவர் திறந்து வைத்தார்

உலகின் மிகப்பெரிய கிரிக்கெட் மைதானம் இன்று திறந்து வைக்கப்பட்டது. குஜராத் மாநிலம் அகமதாபாத்தில் அமைந்துள்ள இந்த மைதானத்தை, குடியரசுத் தலைவர் ராம்நாத் கோவிந்த் திறந்து வைத்தார்.

17 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.