நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்
பதிவு : பிப்ரவரி 01, 2021, 04:12 PM
நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை மற்றும் விண்வெளித்துறைக்கு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிவிப்புக்களை பார்க்கலாம்.
நிதியமைச்சர் நிர்மலா சீதராமன் தாக்கல் செய்த மத்திய பட்ஜெட்டில் கல்வித்துறை மற்றும் விண்வெளித்துறைக்கு வெளியிடப்பட்டுள்ள சிறப்பு அறிவிப்புக்களை பார்க்கலாம்.

இந்தியாவில் புதியதாக 100 சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட உள்ளது என அறிவிக்கப்பட்டுள்ளது.  இந்திய பாதுகாப்பு படைகளுக்கு அதிகாரிகளை தேர்வு செய்ய சிறுவயதிலே மாணவர்களை தயார் படுத்துவதற்காக 1961-ல் சைனிக் பள்ளிகள் தொடங்கப்பட்டது.
 
லடாக் பிராந்தியத்தில் உள்ள லே பகுதியில் புதியதாக மத்திய பல்கலைக்கழகம் தொடங்கப்பட உள்ளது என மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மலைவாழ் மக்கள் வசிக்கும் பகுதிகளில் 750 புதிய ஏகலைவா பள்ளிகள் அமைக்கப்படும் என தெரிவித்து உள்ளார். 

தேசிய கல்விக் கொள்கையின் கீழ் நாடு முழுவதும் 15000 பள்ளிகளின் தரம் உயர்த்தப்படும் எனவும் தெரிவித்திருக்கிறார். 

அடுத்த 6 ஆண்டுகளில் ஆதிதிராவிட மாணவ-மாணவியருக்கு உதவும் வகையில் 35 ஆயிரத்து 219 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றார். 
 
ஆதிதிராவிட மாணவர்களுக்கு 10 ஆம் வகுப்பு பிந்தைய கல்விக்கான திருத்தியமைக்கப்பட்ட கல்வி உதவித் தொகை திட்டம் அறிமுகம் செய்யப்படும் என அறிவித்து உள்ளார்.  

தேசிய ஆராய்ச்சி மையத்திற்கு அடுத்த ஐந்தாண்டுகளில் 50,000 கோடி ஒதுக்கீடு செய்யப்படுகிறது எனவும் குறிப்பிட்டார். 
 
இந்திய விண்வெளித் துறையின் கீழ் புதியதாக பொதுத்துறை நிறுவனமாக நியூ ஸ்பேஸ் இந்தியா தொடங்கப்பட உள்ளது என்றும்  இதன் வாயிலாக பிஎஸ்எல்வி சிஎஸ்51 உருவாக்கப்பட உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறினார்.

2021 ஆம் ஆண்டு டிசம்பரில் ஆளில்லா விண்வெளி ஓடம்  ககன்யான் செலுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்துள்ளார்

மத்திய அரசு வரும் நிதியாண்டில் 16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடனாக வழங்க நிர்ணயம் செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.
 
மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் கூறினார்.  

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். 

மேலும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன்வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்துள்ளனர் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார். 

மேலும்,  இ-நாம் திட்டத்தின் கீழ் இணைய வழியாக கூடுதலாக 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.
 தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்த நிர்மலா சீதாராமன், உள்கட்டமைப்பு திட்டங்களுக்கு 3 ஆண்டுகளில் ரூ.5 லட்சம் கோடி அளவுக்கு நிதியுதவி அளிக்கப்படும் என்றார். 

உள் கட்டமைப்பு திட்டங்களுக்கு நிதி அளிக்க ஏதுவாக புதிய நிதி நிறுவனம் அமைக்கப்படும் என்றும் அறிவித்துள்ளார். 

தமிழகத்தின் மதுரை மற்றும் கேரள மாநிலம் கொல்லம் இடையே புதிய சாலைகள் அமைக்க நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது என்றார்.

தமிழகத்தில் 1.03 லட்சம் கோடி நிதியில் ​புதிய சாலைகள் அமைக்கும் திட்டம் செயல்படுத்தப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் அறிவித்துள்ளார்.

சென்னை மெட்ரோ ரயிலின் 2 ஆம் கட்ட திட்டம் 63,246 கோடி ரூபாய் செலவில் 118.9 கிமீ தொலைவுக்கு அமைக்கப்படும் என அறிவித்துள்ளார்

கேரளா, அசாம், மேற்குவங்கம் உள்ளிட்ட மாநிலங்களில் தேசிய நெடுங்சாலைகள் அமைக்க கூடுதல் நிதி ஒதுக்கீடு செய்யப்பட்டுள்ளது எனக் கூறினார்.

மேலும், பழைய வாகனங்களை திரும்பப் பெறும் கொள்கை அறிமுகப்படுத்தப்படும் என அறிவித்துள்ளார்.

 நகர்புற தூய்மை இந்தியா திட்டம் 2.0 செயல்படுத்தப்படும் என நிர்மலா சீதாராமன் அறிவித்து உள்ளார்.

அத்திட்டத்திற்காக 1 லட்சத்து 41 ஆயிரத்து 678 கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது எனவும் தெரிவித்துள்ளார்.

மூன்று ஆண்டுகளில் முக்கிய நகரங்களில் ஏழு ஜவுளி பூங்கா அமைக்கப்படும் எனக் குறிப்பிட்டுள்ளார்.

மத்திய அரசு வரும் நிதியாண்டில் 16.5 லட்சம் கோடி ரூபாய் விவசாயிகளுக்கு கடனாக வழங்க நிர்ணயம் செய்துள்ளதாக பட்ஜெட்டில் அறிவித்துள்ளது.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய மத்திய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், விவசாயிகளின் நலன்களை காக்க அரசு உறுதிபூண்டுள்ளது என்று கூறினார்.

வேளாண் உற்பத்திப் பொருட்களுக்கான குறைந்தபட்ச ஆதரவு விலை ஒன்றரை மடங்கு அளவுக்கு உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கொள்முதலும் கணிசமாக உயர்த்தப்பட்டுள்ளது என்றும் கூறினார். 

நெல்லுக்கும், கோதுமைக்கும் அதிகரிக்கப்பட்ட குறைந்தபட்ச ஆதரவு விலை காரணமாக, ஏராளமான விவசாயிகள் பலனடைந்துள்ளனர் என நிர்மலா சீதாராமன் கூறினார்.  

வரும் நிதியாண்டில் விவசாயிகளுக்கு 16.5 லட்சம் கோடி ரூபாய் கடனாக வழங்க நிர்ணயம் செய்யப்பட்டுள்ளது என்றும் அறிவித்தார். 

மேலும், கால்நடை வளர்ப்பு, பால்வளம் மற்றும் மீன்வளம் ஆகிய துறைகளுக்கும் கூடுதல் கடன்வசதி வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது எனவும் கூறியுள்ளார்.

வேளாண் பொருட்களை சந்தைப்படுத்தும் இ-நாம் திட்டத்தில் 1.68 லட்சம் கோடி பேர் பதிவு செய்துள்ளனர் எனவும் நிர்மலா சீதாராமன் கூறினார். 

மேலும்,  இ-நாம் திட்டத்தின் கீழ் இணைய வழியாக கூடுதலாக 1,000 மண்டிகள் இணைக்கப்படுகின்றன எனவும் குறிப்பிட்டார்.

வேளாண் கட்டமைப்பை வலுப்படுத்த மாநிலங்களில் உள்ள வேளாண் உற்பத்தி விற்பனை மையங்கள் மூலமாக சிறப்பு கட்டமைப்பு நிதியம் மூலம் கடன் வசதி வழங்கப்படும் எனவும் தெரிவித்தார்.

தமிழ்நாட்டில் பன்னோக்கு கடல்பாசி பூங்கா ஒன்றை ஏற்படுத்த நிதி ஒதுக்கீடு செய்யப்படுகிறது என்றும் நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என மத்திய பட்ஜெட்டில் அறிவிக்கப்பட்டுள்ளது.

மத்திய பட்ஜெட்டை தாக்கல் செய்து பேசிய நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன், எதிர்பாராத சூழலுக்கு இடையே மத்திய பட்ஜெட் தயாரிக்கப்பட்டது என்றார்.

அப்போது கொரோனா காலத்தில் இரவு பலகலாக பணியாற்றிய முன்கள பணியாளர்களுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்டர்

27.1 லட்சம் கோடி ரூபாய் கொரோனா நிவாரணமாக வழங்கப்பட்டு உள்ளது என்றும் நிர்மலா சீதாராமன் கூறியுள்ளார்.

மேலும் கொரோனா தடுப்பூசிக்காக 35 ஆயிரம் கோடி ரூபாய் ஒதுக்கீடு செய்யப்பட்டு உள்ளது என்றும் தெரிவித்தார்.  

இந்தியாவில் உலக சுகாதார அமைப்பின் கிளை தொடங்கப்படும் என நிதியமைச்சர் நிர்மலா சீதாராமன் கூறினார்.

கொரோனா தடுப்பூசி கிடைக்க பாடுபட்ட விஞ்ஞானிகளுக்கு நன்றியை தெரிவித்துக்கொண்ட அவர், கொரோனா தடுப்பூசிகளை இந்தியா கண்டுபிடித்துள்ளது என்றும் விஞ்ஞானிகளின் முயற்சி அளப்பரியது என்றும் கூறினார். 

உலக நாடுகளால் நம்பிக்கைக்குரிய நாடாக இந்தியா பார்க்கப்படுகிறது என்ற அவர் பொருளாதாரத்தை மீட்டெடுக்க எல்லா வழிகளிலும் அரசு முயற்சித்து வருகிறது எனக் கூறினார். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

410 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

254 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

62 views

பிற செய்திகள்

டெம்போவில் கணவனை கட்டி தரதரவென இழுத்துச் சென்ற மனைவி... பதைபதைக்க வைக்கும் காட்சிகள்

கணவனை, தமது தம்பியின் உதவியுடன், மனைவியே டெம்போ வாகனத்தின் பின்புறம் கயிற்றில் கட்டி இழுத்துச் சென்ற காட்சி சமூக வலைதலங்களில் வைரலாகி வருகிறது.

24 views

காய்கறி லாரிகளில் பறக்கும் படையினர் ஆய்வு - கணக்கில் வராத ரூ.19.20 லட்சம் பறிமுதல்

நீலகிரி மாவட்டம் கூடலூரை அடுத்துள்ள தமிழக கேரளா எல்லைப் பகுதியில் பறக்கும் படையினர் மற்றும் சிறப்பு படையினர் வாகன ஆய்வு மேற்கொண்டு வருகின்றனர்.

9 views

அரசு பள்ளி ஆசிரியர் உருவாக்கிய ரோபோ - பஞ்சாப் மொழியை பேசும் உலகின் முதல் ரோபோ

பஞ்சாப்பில் அரசு பள்ளி ஆசிரியர் பஞ்சாபி மொழியை பேசும் உலகில் முதல் ரோபோவை உருவாக்கியுள்ளார்.

10 views

பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் விண்ணில் பாய்ந்தது - 19 செயற்கைகோள்களை சுமந்து சென்றது

ஸ்ரீஹரிகோட்டா சதீஷ் தவான் ஏவுதளத்தில் இருந்து 19 செயற்கைகோள்களுடன் பி.எஸ்.எல்.வி. சி51 ராக்கெட் வெற்றிகரமாக விண்ணில் பாய்ந்தது.

25 views

காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

31 views

புதுவையில் மதுபான விற்பனை நேரம் குறைப்பு... இரவு 11 மணியிலிருந்து 10 மணியாக குறைப்பு

சட்டசபை தேர்தல் விதிகள் அமலுக்கு வந்ததை தொடர்ந்து புதுச்சேரியில் மதுபான விற்பனை நேரம் குறைக்கப்பட்டுள்ளது.

32 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.