ஆங் சான் சூகி கைது - மியான்மரில் பதற்றம்
பதிவு : பிப்ரவரி 01, 2021, 10:02 AM
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில், ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.
மியான்மரில் ராணுவம் ஆட்சியை கைப்பற்றும் முயற்சியில், ஆளும் கட்சியின் தலைவர் ஆங் சான் சூகி கைது செய்யப்பட்டுள்ளார். மேலும் ஓராண்டுக்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

மியான்மரில் நவம்பரில் நடைபெற்ற நாடாளுமன்ற தேர்தலில் பெரும்பான்மையுடன் வெற்றி பெற்று ஆங் சான் சூகியின் தேசிய ஜனநாயக கட்சி ஆட்சிக்கு மீண்டும் வந்தது. ராணுவத்தின் ஆதரவுப்பெற்ற கட்சிகள் எல்லாம் தோல்வியை தழுவின. இதனையடுத்து தேர்தலில் மோசடி நடைபெற்று இருப்பதாக ராணுவம் தரப்பில் குற்றம் சாட்டப்பட்டது. இவ்விவகாரம் தொடர்பாக ஜனநாயக முறையில் தேர்வு செய்யப்பட்ட அரசுக்கும், ராணுவத்துக்கும் இடையே மோதல் போக்கு காணப்பட்டது. இந்நிலையில் இன்று அதிகாலையில் ஆங் சான் சூகி மற்றும் அவருடைய கட்சி தலைவர்கள் பலர் ராணுவத்தால் கைது செய்யப்பட்டுள்ளனர். ஜனநாயக ஆட்சியை கவிழ்க்கும் முயற்சியில் ராணுவம் ஈடுபட்டுள்ளதாக விமர்சனங்கள் எழுந்துள்ளது. இதற்கிடையே அந்நாட்டு அரசு தொலைக்காட்சி மற்றும் வானொலி தரப்பில் தொலை தொடர்பு சேவை பிரச்சினை காரணமாக ஒளிபரப்பு சேவை தடைப்பட்டுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது. மேலும் ஓராண்டுக்கு அங்கு நெருக்கடி நிலை பிரகடனம் செய்யப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது. 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

399 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

208 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

55 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

47 views

பிற செய்திகள்

சிறை கைதிகளுக்கு இடையே மோதல் - 79 கைதிகள் உயிரிழப்பு

ஈக்வடார் நாட்டில் உள்ள சிறைகளில், கைதிகளுக்கு இடையே கோஷ்டி மோதல் ஏற்பட்டு கலவரம் வெடித்தது.

74 views

படகுக்கு அருகில் வந்த திமிங்கலம் - அச்சத்துடன் வீடியோ எடுத்த பயணிகள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் உள்ள கடலில் ஹம்ப்பேக் திமிங்கலம் தென்பட்டு உள்ளது.

18 views

கடலில் துள்ளிக்குதித்து நீந்திய டால்பின்கள் - ஒரே நேரத்தில் சுமார் 2,000 டால்பின்கள்

அமெரிக்காவின் கலிபோர்னியா மாகாணத்தில் கடல் பகுதியில் ஒரே நேரத்தில் ஆயிரத்திற்கும் அதிகமான டால்பின்கள் கடலில் வேகமாக நீந்தி சென்ற காட்சிகள் ரசிக்க வைத்துள்ளன

30 views

டிக் டாக்கில் அசத்தும் 81 வயதான மூதாட்டி - இளைஞர்களுக்கு சவால் விடும் மூதாட்டி

உடற்பயிற்சியுடன் நடனமும் ஆடி இன்றைய இளைஞர்களுக்கு சவால் விடுத்து வருகிறார் ஜெர்மனியை சேர்ந்த 81 வயது மூதாட்டி . இது குறித்து விவரிக்கிறது. இந்த செய்தி தொகுப்பு.

22 views

போதைப்பொருள் மன்னனின் மனைவி கைது - விமான நிலையத்தில் அதிரடி

பிரபல மெக்சிகோ போதைப்பொருள் கடத்தல் கும்பல் தலைவன் எல் சாபோவின் மனைவியை அமெரிக்க காவல்துறை கைது செய்துள்ளது.

77 views

பள்ளி தோழனின் மூக்கை உடைத்த ஒபாமா

சிறு வயதில் இன ரீதியாக பேசிய பள்ளி தோழனின் மூக்கை உடைத்ததாக அமெரிக்க முன்னாள் அதிபர் ஒபாமா தெரிவித்துள்ளார்.

50 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.