7.5% இட ஒதுக்கீடு- உயர்நீதிமன்றம் விளக்கம்
பதிவு : ஜனவரி 29, 2021, 04:41 PM
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசு பள்ளி மாணவருக்கு சேர்க்கை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.
தமிழகத்தில் மருத்துவ படிப்பில் உள்ள அரசு பள்ளி மாணவர்களுக்கான 7.5 சதவீத இடஒதுக்கீட்டில் புதுச்சேரி அரசு பள்ளி  மாணவருக்கு சேர்க்கை வழங்க முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் தெரிவித்துள்ளது.தமிழகத்தில் வழங்கப்படும் 7.5 சதவீத ஒதுக்கீட்டின் கீழ் இடம் வழங்கக் கோரி புதுச்சேரியில் அரசு பள்ளியில் படித்த விழுப்புரம் மாவட்டத்தை சேர்ந்த  மணிகண்டன் என்பவர் சென்னை உயர் நீதிமன்றத்தில் வழக்கு தொடர்ந்திருந்தார்.இந்த வழக்கை ஏற்கனவே விசாரித்த தனி நீதிபதி, புதுச்சேரியில் படித்த மாணவருக்கு அரசாணையை நீட்டித்து வழங்க உத்தரவிட முடியாது எனக் கூறி  மனுவை தள்ளுபடி செய்து உத்தரவிட்டிருந்தார்.இந்த உத்தரவை எதிர்த்து மணிகண்டன் தாக்கல் செய்த மேல்முறையீடு மனு தலைமை நீதிபதி சஞ்சிவ் பானர்ஜி, நீதிபதி செந்தில்குமார் ராமமூர்த்தி அமர்வில் விசாரணைக்கு வந்தது.அப்போது மாநில எல்லையில் வசித்து, எல்லைக்கு உட்பட்ட பள்ளியில் படித்த மாணவர்களுக்கு மட்டுமே இந்த சட்டம்  இயற்றப்பட்டுள்ளதால் மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தமுடியாது என நீதிபதிகள் தெரவித்தனர்.மேலும் மனுதாரருக்கு ஏற்றவாறு சட்டத்தை திருத்தினால் எல்லையில் உள்ள அனைத்து மாவட்ட மாணவர்களும் இதே கோரிக்கையை முன்வைப்பர் என கூறி மேல் முறையீட்டு வழக்கை தள்ளுபடி செய்து நீதிபதிகள் உத்தரவிட்டனர். 

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

343 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

79 views

பாதுகாப்பு உபகரணங்கள் உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட் அப் நிறுவனங்கள் ஊக்குவிப்பு - ராஜ்நாத் சிங்

பாதுகாப்பு உற்பத்தி துறையில் நுழையும் ஸ்டார்ட்-அப் நிறுவனங்களை ஊக்குவிக்க அரசு நடவடிக்கைகளை எடுப்பதாக மத்திய அமைச்சர் ராஜ்நாத் சிங் கூறியுள்ளார்.

56 views

பிற செய்திகள்

கேரள சட்டமன்ற தேர்தல் : "கொரோனா அச்சம் - கூடுதல் கட்டுப்பாடு" - தலைமை தேர்தல் ஆணையர்

கேரள சட்டமன்ற தேர்தலின் போது, கொரோனாவை கருத்தில் கொண்டு கூடுதல் கட்டுப்பாடுகள் விதிக்கப்படும் என தலைமை தேர்தல் ஆணையர் சுனில் அரோரா தெரிவித்துள்ளார்.

7 views

கொரோனாவுக்கும் சிப்பிப்பாறை நாய்க்கும் என்ன தொடர்பு?

உலகையே உலுக்கும் கொரோனாவுக்கு எதிரான போரில் நமது நாட்டு இனமான சிப்பிப்பாறை நாய்கள் இணைந்துள்ளன.

16 views

இன்று நள்ளிரவு முதல் ஃபாஸ்டேக் கட்டாயம்: "ஃபாஸ்டேக் இல்லாவிட்டால் 2 மடங்கு கட்டணம்" - மத்திய அரசு அறிவிப்பு

தேசிய நெடுஞ்சாலைகளில் உள்ள சுங்கச் சாவடிகளில் ஃபாஸ்டேக் (FASTAG) முறை இன்று நள்ளிரவு முதல் அமலுக்கு வரும் என மத்திய அரசு அறிவித்துள்ளது.

64 views

புதிய திட்டங்கள் துவக்கம்

சென்னை மெட்ரோ விம்கோ நகர் ரயில் சேவை உள்பட பிரதமர் மோடி தொடங்கி வைத்த பல்வேறு திட்டங்கள் குறித்து தற்போது பார்ப்போம்...

78 views

காதலர் தினத்திற்கு விழிப்புணர்வு நிகழ்வு... சுற்றுச் சூழலைப் பாதுகாக்க வலியுறுத்தல்

சூரத்தை சேர்ந்த மாணவர்கள், காதலர் தினத்தை முன்னிட்டு, விநோதமான விழிப்புணர்வு ஆடைகளை அணிந்து வலம் வந்தனர்.

15 views

இந்திய வம்சாவளி பெண் போட்டி... ஐ.நா ஊழியர் அரோரா அகாங்க்‌ஷா போட்டி

ஐ.நா பொதுச்செயலாளர் பதவிக்கு போட்டியிடப்போவதாக இந்திய வம்சாவளியைச் சேர்ந்த பெண் அறிவித்துள்ளார்.

21 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.