பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யங்கள் - தங்கமாக ஜொலிக்கும் பறவை
பதிவு : ஜனவரி 28, 2021, 04:45 PM
தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...
தோல்வியில் இருந்து வெற்றிக்கான உத்வேகத்தை உயிர்பிக்க உவமையாக கூறப்படும் பீனிக்ஸ் பறவை குறித்த சுவாரஸ்யமான தகவல்களை இந்த செய்தி தொகுப்பில் பார்க்கலாம்...வாழ்க்கையில் மிகப்பெரிய தோல்வியை சந்தித்து, அதிலிருந்து மீண்டுவர அனைவராலும் ஒப்பிடப்படும் பறவை தான் பீனிக்ஸ்....நெருப்பில் விழுந்தாலும் வீறுகொண்டெழுந்து நீல வானில் எட்டாத உயரத்தில் ஜொலிக்கும் பறவை எனக் கூறப்படுவது வழக்கம் உண்மையில் அப்படியொரு பறவை இருந்ததா என்ற கேள்வி பதிலின்றி தொடர்கிறது.பொதுவாக பாரசீகம், கிரேக்கம், எகிப்து மற்றும் சீனா புராணக் கதைகளில் இடம்பெறும் வலிமை மிக்க நெருப்பு பறவை பீனிக்ஸ்.அரேபியா, ஆப்பிரிக்கா மற்றும் சீனாவில் அதனுடைய தோற்றம் குறித்து பல்வேறு கதைகள் இருக்கின்றன.500 முதல் ஆயிரம் ஆண்டுகள் வரையில் வாழும் எனக் இதிகாசங்களில் கூறப்படுகிறது.இவ்வாறு நீண்ட நாள் வாழும் பறையானது மரணம் தன்னை நெருங்கிறது என அறியவந்ததும், வாசனையான மரச்ச்சுள்ளிகளை சேகரித்து அதில் தீ வைத்து தன்னைத் தானே மாயத்துக்கொள்ளும் எனக் கூறப்படுகிறது.பின்னர் எரிக்கப்பட்ட சாம்பலில் இருந்து புழுவாகவும், பின்னர் பறவையாகவும் வளர்ர்ச்சியடைகிறது என நிறைய கற்பனைகளை சுமந்து செல்கிறது பீனிக்ஸ் பறவை.பறக்கும் அளவிற்கு சிறு பறவையானது ஏற்கனவே எரிந்த தந்தை பறவையின் சாம்பலை உருண்டையாக்கி அதனை கிரேக்கத்தில் உள்ள சூரியக் கடவுள் கோயிலுக்கு கொண்டுச் செல்லும் என்றும் அந்த கதைகள் கூறுகின்றன.பொதுவாக செந்தூரமும் தங்க நிறமும் ஜொலிக்கும் வகையில் இறகுகளை கொண்ட பறவையாக பீனிக்ஸ் சித்தரிக்கப்படுகிறது.குருவியின் முகத்துடன், சேவலின் அலகுடனும் பொதுவாக உருவகப்படுத்தப்படும் தகதகக்கும் நெருப்பு பறவையான பீனிக்ஸ் பறவையின் வடிவமைப்பு சீன சித்திரங்களில் வேறுபடுகிறது. கலைமானின் கால்களை கொண்டிருக்கும் பறவை, மீனின் வாலுடன் அழகாக சித்தரிக்கப்படுகிறது.வண்ணங்கள் மற்றும் உருவங்கள் மாறுப்பட்டாலும் அவைகளின் குணங்கள் தொடர்பான கருத்துக்கள் வேறுபடாமல் கதையாக தொடர்கிறது.பீனிக்ஸ் பறவை வீழ்த்தவே முடியாத ரோமானிய அரசின் அடையாளமாகியுள்ளது. அமெரிக்காவின்   சான்பிரான்சிஸ்கோ மாகாணத்தின் கொடியில் பீனிக்ஸ் பறவை உருவம் இடம்பெற்றுள்ளது.பல்வேறு நாடுகளில் சிலையாக நிற்கும் பீனிக்ஸ் பறவைகள், கண்களுக்கு எட்டாத உயரத்தில் வானில் இருந்ததாக ஒரு சிலர் கூறினாலும், இது கற்பனையான பறவையே....பீனிக்ஸ் கற்பனை பறவையென்றாலும் ... அதனுடைய வலிமை, பண்புகள் மற்றும் அழகு குறித்தான தகவல்கள் கற்பனை அறிவின் அழகாக.... சுவாரஸ்யமாக அன்று முதல் இன்று வரை தொடர்கிறது...


தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

453 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

82 views

பிற செய்திகள்

பாமக தேர்தல் அறிக்கை வெளியீடு

பாமக சார்பில் 2021 சட்டமன்ற தேர்தலுக்கான தேர்தல் அறிக்கை வெளியிடப்பட்டது.

107 views

அ.தி.மு.க. வேட்பாளர்கள் முதல் பட்டியல் வெளியீடு

சட்டப்பேரவை தேர்தலில் போட்டியிடும் 6 பேர் கொண்ட வேட்பாளர்கள் பட்டியலை அதிமுக முதற்கட்டமாக வெளியிட்டது.

259 views

மா.கம்யூ., கட்சிக்கு 7 தொகுதிகள்? 10 தொகுதிகள் கேட்கும் மா.கம்யூ., கட்சி

திமுகவுடன் தொகுதி பங்கீடு முடிவடையாத நிலையில், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் நிலைப்பாடு குறித்து நாளை நடைபெறும் செயற்குழு கூட்டத்தில் இறுதி முடிவு எடுக்கப்பட இருக்கிறது.

68 views

திமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - காணொலி மூலம் நடைபெற்ற ஆலோசனை

வரும்10 ஆம் தேதி திமுக வேட்பாளர் பட்டியல் வெளியிடப்படும் என்று ஸ்டாலின் தெரிவித்துள்ளார்

25 views

அதிமுக மாவட்ட செயலாளர்கள் கூட்டம் - விரைவில் அதிமுக வேட்பாளர் பட்டியல்

அதிமுக ஆட்சிமன்றக் குழுகூட்டம் முடிந்ததும் இன்று வேட்பாளர் பட்டியல் வெளியாக வாய்ப்பிருப்பதாக தகவல் வெளியாகியுள்ளது.

18 views

யானையை பாகன்கள் துன்புறுத்திய விவகாரம் - கோயில் திரும்பிய யானை ஜெயமால்யதா

ஸ்ரீவில்லிபுத்தூர் ஆண்டாள் கோயில் யானை ஜெயமால்யதா, தேக்கம்பட்டி புத்துணர்வு முகாமில் இருந்து மீண்டும் கோயிலுக்கு திரும்பியது.

19 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.