சசிகலா 27 - ம் தேதி விடுதலையாவது உறுதி - கர்நாடக சிறைத்துறை வட்டாரங்கள் தகவல்
பதிவு : ஜனவரி 25, 2021, 02:26 PM
சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.
சொத்து வழக்கில் தண்டனை பெற்ற சசிகலா, நாளை மறுநாள் விடுதலை ஆவது உறுதியாகி உள்ளது.சசிகலாவை, திட்டமிட்டபடி, 27 ஆம் தேதி விடுதலை செய்ய்பபடுவதற்கான பூர்வாங்க பணிகள், நிறைவடைந்ததாக தகவல்கள் வெளியாகி உள்ளன. நாளை குடியரசு தினம் என்பதால் நன்னடத்தை கைதிகளை விடுதலை செய்யும் பணிகள் அதிகம் இருக்கும் என்பதால் சசிகலாவின் விடுதலை தொடர்பான ஆவணங்கள் அனைத்தும் இன்றைய தினமே தயார் செய்யப்பட்டுள்ளதாக தகவல்கள் வெளியாகி உள்ளன. இதனை தொடர்ந்து, வரும், 27 ஆம் தேதி காலை பத்தரை மணி அளவில், சிறை அதிகாரிகள் மருத்துவமனைக்கு சென்று, சிகிச்சை பெற்று வரும் சசிகலாவிடம் விடுதலை தொடர்பான பத்திரங்களில் கையெழுத்து பெறுவார்கள் என்றும் தகவல்கள் வெளியாகி உள்ளன. தற்போது சிறைக் கைதியாக இருக்கும் சசிகலாவுக்கு போடப்பட்டுள்ள போலீஸ் பாதுகாப்பு திரும்பப் பெறப்படும் என்றும் கூறப்படுகிறது. சிறையில் அவர் விவசாய பணிகளில் ஈடுபட்டிருந்தாலும், சிறையில் சம்பளம் வழங்கும் எந்த பணியையும் அவர் தேர்வு செய்து பணியாற்றவில்லை என்றும் கூறப்பட்டுள்ளது. 27 ஆம் தேதி சசிகலா விடுதலையாகும் சூழலில் அன்றைய தினமே உடல் நலத்தில் முழுமையான முன்னேற்றம் அடைந்திருப்பதை மருத்துவமனை உறுதி செய்யும் பட்சத்தில் அவர் மருத்துவமனையில் இருந்து வீட்டிற்கு அனுப்பப்பட வாய்ப்புகள் உள்ளன.

தொடர்புடைய செய்திகள்

"ஆஞ்சியோ பிளாஸ்டிக் சிகிச்சைக்கு பின் கங்குலி நலமாக உள்ளார்" - மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தகவல்

ஆஞ்சியோபிளாஸ்டிக் சிகிச்சைக்கு பிறகு கங்குலி நலமுடன் இருப்பதாக, அவரது மூத்த சகோதரர் சினேகாஷ் கங்குலி தெரிவித்துள்ளார்.

408 views

தனியார் துறைக்கு ஆதரவு - மக்களவையில் கொந்தளித்த பிரதமர் மோடி

நாட்டுக்கு, பொதுத்துறை நிறுவனங்களின் பங்கு அவசியம் எனவும், அதே சமயம் தனியார் துறை நிறுவனங்களும் பங்கும் முக்கியத்துவம் வாய்ந்தது என பிரதமர் மோடி தெரிவித்திருக்கிறார்.

250 views

(10-02-2021) ஏழரை

(10-02-2021) ஏழரை

70 views

தலைவாசலில் ஒருங்கிணைந்த கால்நடை பூங்கா - முதலமைச்சர் திறந்து வைத்தார்

விவசாயிகளின் நலனை காக்க அதிமுக அரசு தொடர்ந்து பல்வேறு திட்டங்களை அறிமுகப்படுத்தி வருவதாக முதலமைச்சர் கூறினார்.

57 views

பிற செய்திகள்

திமுக தலைவர் ஸ்டாலின் விருப்பமனு தாக்கல் செய்தார்

மூன்றாவது முறையாக கொளத்தூர் தொகுதியில் போட்டியிட திமுக தலைவர் ஸ்டாலின் விருப்ப மனு தாக்கல் செய்தார்.

30 views

சமத்துவ மக்கள் கட்சி விலகியது, ஜனநாயகத்தில் ஏற்புடையது தான் - ஜி.கே.வாசன்

அதிமுக கூட்டணி கட்சிகளில் உள்ள கட்சிகளின் அதிகார பூர்வ நிலையினை வரும் நாட்களில் அதிமுக அறிவிக்கும் என்று, தமாகா தலைவர் ஜி.கே.வாசன் தெரிவித்துள்ளார்.

25 views

எதிர்கட்சிகளை ஒடுக்க பா.ஜ.க. முயற்சி - பிரகாஷ் காரத்

ஒட்டு மொத்த தேசத்தையும் நிர்வகிக்க வேண்டும் என்பதை பாஜக இலக்காக கொண்டுள்ளதாக மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமை குழு உறுப்பினர் பிரகாஷ் காரத் குற்றம்சாட்டியுள்ளார்.

18 views

காங்கிரஸ் பலவீனமடைந்துள்ளது என்பதுதான் நிதர்சனம் - கபில் சிபல் கருத்து

காங்கிரஸ் கட்சி பலவீனமடைந்துள்ளது என்பது தான் நிதர்சனம் என, அக்கட்சியின் மூத்த தலைவர் கபில் சிபல் தெரிவித்துள்ளார்.

26 views

தொகுதி பங்கீடு - சுமூக பேச்சுவார்த்தை - முருகன்

தொகுதி பங்கீடு குறித்து அதிமுகவுடன் சுமூகமான பேச்சுவார்த்தை நடைபெற்று வருவதாக தமிழக பாஜக தலைவர் முருகன் தெரிவித்துள்ளார்.

19 views

"அதிமுக-பாஜக கூட்டணி படுதோல்வி சந்திக்கும்" - பிருந்தா காரத்

வரும் சட்டமன்ற தேர்தலில் தமிழ்நாட்டில் ஆட்சி மாற்றம் ஏற்படும் என மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சியின் அரசியல் தலைமைக்குழு உறுப்பினர் பிருந்தா காரத் தெரிவித்துள்ளார்.

18 views

ஒரு கட்டுரையை முறையான தலைப்புடன், குறைந்தபட்சம் 250 சொற்களுடன் பதிவேற்றவும்.

ஒற்றை படத்தில் ஒரு ஆயிரம் வார்த்தைகள் பேசுகிற ஒரு அழகான புகைப்படத்தை பொருத்தமான தலைப்பு மூலம் பதிவேற்றவும்.

குறைந்தபட்சம் 100 சொற்கள் கொண்ட ஒரு கட்டுரையை வீடியோ செய்தி மூலம் பதிவேற்றவும்.